Published:Updated:

உலகக் கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறியது பிரேசில்!

விகடன் விமர்சனக்குழு
உலகக் கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறியது பிரேசில்!
உலகக் கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறியது பிரேசில்!
உலகக் கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறியது பிரேசில்!

போர்ட்டலேஸா: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் கொலம்பியா அணியை வீழ்த்தி, பிரேசில் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா அணி, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியை போர்ட்டலேஸாவில் எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்திலேயே கோல் அடித்து பிரேசில் அணியை முன்னிலை பெறச் செய்தார் தியாகோ சில்வா. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி, முதல் பாதியின் முடிவில் 1-0 என முன்னிலை பெற்றது.

69 வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பின் மூலம் , பிரமிக்கவைக்கும் வகையில் பிரேசில் தடுப்பாட்டக்காரர் டேவிட் லூயிஸ் கோல் அடித்து அசத்தினார். பதில் கோல் அடிக்க கொலம்பியா வீரர்கள் கடுமையாக போராடினர். அவர்களின் முயற்சிக்கு பலன்கிட்டும் விதமாக, 80வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஏற்கனவே 5 கோல்கள் அடித்திருந்த ரோட்ரிகஸ், பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 11வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

வரும் 8 ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில், ஜெர்மனி அணியை பிரேசில் எதிர்கொள்கிறது.