Published:Updated:

'கால்பந்து விளையாடாதே... பார்க்காதே...!' - எகிப்து தாய்மார் கண்ணீர்!

விகடன் விமர்சனக்குழு
'கால்பந்து விளையாடாதே... பார்க்காதே...!' - எகிப்து தாய்மார் கண்ணீர்!
'கால்பந்து விளையாடாதே... பார்க்காதே...!' - எகிப்து தாய்மார் கண்ணீர்!

கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் கால்பந்து விளையாட்டின் போது ஏற்பட்ட வன்முறையில் சிறுவர்கள் உள்பட 22 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்தனர். குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது

'கால்பந்து விளையாடாதே... பார்க்காதே...!' - எகிப்து தாய்மார் கண்ணீர்!


எகிப்து தேசிய லீக் கால்பந்து தொடரில் கெய்ரோ நகரை சேர்ந்த ஜாம்லாக்  மற்றும் என்.பி.பி.பி.ஐ அணிகள் மோதிய ஆட்டம், விமானப்படைக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நடைபெற்றது. உள்ளூர் அளவில் வெகு பிரபலமான அணிகளின் மோதலை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது, டிக்கெட்டுகள் இல்லாத ரசிகர்களும் மைதானத்திற்குள் நுழைய முயற்சித்தாக கூறப்படுகிறது.

'கால்பந்து விளையாடாதே... பார்க்காதே...!' - எகிப்து தாய்மார் கண்ணீர்!


இதனால்,  மைதானத்தில் உள்ள ஒரே ஒரு கேட் மட்டுமே திறக்கப்பட்டு அதன் வழியாக ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். போட்டி தொடங்கி விட்டதால் ரசிகர்கள் அவசரம் அவசரமாக உள்ளே நுழைய முயற்சித்ததால்,  கடும் நெரிசல் ஏற்பட்டது. அந்த சமயத்தை பயன்படுத்தி ஜாம்லாக் அணியை சேர்ந்த டிக்கெட் இல்லாத ரசிகர்கள் உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். பாதுகாவலர்கள் அவர்களை தடுத்ததால் அங்கு வன்முறை வெடித்தது.

ஆத்திரமடைந்த ரசிகர்கள் சிலர், மைதானத்திற்கு வெளியே நிறுத்தப்பட்ட கார்களுக்கு தீ வைத்தனர். தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால் அங்குமிங்கும் சிதறி ஓடிய ரசிகர்கள் ஒருவர் மீது ஓருவர் விழுந்து காயமடைந்தனர். கூட்டத்தினரிடையே கடும் நெரிசலும் ஏற்பட்டது. இதில் சிக்கி 22 கால்பந்து ரசிகர்கள் இறந்து போனார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பலியானவர்களின் உறவினர்கள் கெய்ரோவில் உள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர். இதில் குழந்தையை பறிகொடுத்த தாய்  ஒருவர், உயிரிழந்த சிறுவனின் உடலைப் பார்த்து, ‘‘அப்போதே சொன்னேனே... கால்பந்து விளையாடுவதையும் பார்ப்பதையும் விட்டு விடுனு ... கேட்டியா?’’ என்று கதறியது அனைவரின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது

இந்த சம்பவத்தையடுத்து, நேற்று கூடிய எகிப்து அமைச்சரவை, தேசிய லீக் கால்பந்து போட்டியை காலவரையற்று ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. எகிப்து நாட்டில் கால்பந்து போட்டிகளின் போது வன்முறை வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முன் கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி போர்ட் சையத் நகரில் நடந்த போட்டியில் அல்அலி மற்றும் அல் மஸ்ரி அணிகள் மோதின. இந்த போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையில் 74 ரசிகர்கள் கொல்ப்பட்டனர்.