Published:Updated:

ஆட்டிடம் மன்னிப்பு கேட்கும் கால்பந்து வீரர்!

Vikatan Correspondent
ஆட்டிடம் மன்னிப்பு கேட்கும் கால்பந்து வீரர்!
ஆட்டிடம் மன்னிப்பு கேட்கும் கால்பந்து வீரர்!

ஜெர்மனியை சேர்ந்த பிரபல கால்பந்து அணியான கொலைன், தனது கிளப்புக்கு சொந்தமாக ஒரு ஆட்டை வளர்த்து வருகிறது. நம்ம ஊரில் கோயில்மாடு போல, அந்த ஆடு ராஜமரியாதையுடன் அங்கு வாழ்ந்து வருகிறது. அந்த ஆட்டுக்கு பெயர் ஹென்னஸ்.

ஆட்டிடம் மன்னிப்பு கேட்கும் கால்பந்து வீரர்!

கெலைன் அணி விளையாடும் போட்டிகளை காண ஹென்னஸ் ஆடும் மைதானத்துக்கு அழைத்து வரப்படும். போட்டி நடைபெறும் போது, ஹென்னஸ் ஆடு, கொலைன் அணியின் கொடியோடு மைதானத்தில் காணப்படும்.

இந்நிலையில் நேற்று நடந்த பந்தஸ்லீகா ஆட்டத்தின் போது, கொலைன் அணியுடன் என்ரிச் ஃபிராங்க்பர்ட் அணி மோதியது. இந்த போட்டியில் 82வது நிமிடத்தில் கோல் அடித்த கொலைன் அணி வீரர் அந்தோணி உஜா, உற்சாக வெள்ளத்தில் மைதானத்தில் இருந்த ஹென்னஸ் ஆட்டின் கொம்பினை பிடித்த வளைத்து அதனை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

அந்தோணி உஜாவின் இந்த வெற்றிக் கொண்டாட்டம் மைதானத்தில் இருந்த ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து பல தரப்பினரும் அந்தோணியை கண்டிக்கத் தொடங்கினர்.  தனது உற்சாகம் சர்ச்சையை கிளப்பிவிட்டதே என்று மனம் நொந்த அந்தோணி உஜா, ஹென்னஸ் ஆட்டிடம் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில், ''டியர் ஹென்னஸ், அந்த தருணத்தில் என்னை மறந்து உன்னிடம் சற்று ஆக்ரோஷமாக நடந்து கொண்டேன். என்னை மன்னித்து விடு" என்று தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் கொலைன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.