Published:Updated:

ஐ.எஸ்.எல். முதல் ஆட்டத்தில் சென்னையுடன் கொல்கத்தா மோதல்!

விகடன் விமர்சனக்குழு
ஐ.எஸ்.எல்.  முதல் ஆட்டத்தில் சென்னையுடன் கொல்கத்தா மோதல்!
ஐ.எஸ்.எல். முதல் ஆட்டத்தில் சென்னையுடன் கொல்கத்தா மோதல்!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இன்று சென்னையில் தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் சென்னை அணி மோதுகிறது.

ஐ.எஸ்.எல்.  முதல் ஆட்டத்தில் சென்னையுடன் கொல்கத்தா மோதல்!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 2வது சீசன் இன்று சென்னையில் தொடங்குகிறது.  சென்னை அணியை பொறுத்தவரை பிரேசில் வீரர் இலானோ பெரும் பலமாக இருப்பார். அதோடு மென்டசா, மென்டி, பல்வந்த்சிங் ஆகியோரும் சென்னை அணிக்கு பலம் சேர்ப்பார்கள்.

கடந்த ஆண்டு சென்னை அணியில், தமிழக வீரர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. இந்த ஆண்டு தனபால் கணேஷ் இடம் பெற்றுள்ளார். ஆனால் அவர் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். சொந்த மண்ணில் விளையாடுவது சென்னை அணியின் கூடுதல் பலம் ஆகும்.

கொல்கத்தா அணி நடப்பு சாம்பியன் என்ற பெருமையுடன் களம் இறங்குகிறது. போர்ச்சுகல் அணியின் முன்னாள் வீரர் ஹெல்டர் போஸ்டிகா கொல்கத்தா அணியின் துருப்புச்சீட்டு ஆவார்.

முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்கு பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யாராய், அலியா பட் ஆகியோர் நடனமாடுகின்றனர்.

அத்துடன் நடிகர் ரஜினிகாந்த்,அமிதாப்பச்சன்,அபிஷேக்பச்சன் கேரளா அணியின் உரிமையாளர் சச்சின், கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சவுரவ் கங்குலி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.