Published:Updated:

யூரோ கோப்பை கால்பந்து: அயர்லாந்தை வீழ்த்தியது குரோஷியா

விகடன் விமர்சனக்குழு
யூரோ கோப்பை கால்பந்து: அயர்லாந்தை வீழ்த்தியது குரோஷியா
யூரோ கோப்பை கால்பந்து: அயர்லாந்தை வீழ்த்தியது குரோஷியா
யூரோ கோப்பை கால்பந்து: அயர்லாந்தை வீழ்த்தியது குரோஷியா

வார்சா: யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் அயர்லாந்தை குரோஷியா வீழ்த்தியது.
 
14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டி போலந்து, உக்ரைனில் நடைபெற்று  வருகிறது.இன்று நடைபெற்ற சி பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் குரோஷியா- அயர்லாந்து  அணிகள் மோதின.
 
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் குரோஷிய வீரர்கள் ஜெலாவிக், மாண்ட்சுகிக்  ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.அயர்லாந்து தரப்பில் லெட்ஜர் ஒரு கோல்  அடித்தார். முதல் பாதியின் முடிவில் குரோஷிய அணி 2-1 என்ற கோல் கணக்கில்  முன்னிலை வகித்தது.
 
2-வது பாதி ஆட்டத்திலும் குரோஷிய வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர்.ஆட்டத்தின் 49 -வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மாண்ட்சுகிக் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.  இறுதிவரை போராடியும் அயர்லாந்து அணியால் பதில் கோல் அடிக்க இயலவில்லை.
 
இறுதியில் குரோஷியா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.