Published:Updated:

ஸ்போர்ட்ஸ் டைம்!

Vikatan Correspondent
ஸ்போர்ட்ஸ் டைம்!

• நீச்சல் ஒரு தற்காப்புப் பயிற்சி; மற்றவரைக் காப்பாற்றவும் பயன்படும்.

• கப்பல் துறை வேலைகளுக்குச் செல்ல, நீச்சல் அவசியம்.

• நீச்சலினால் மூச்சுப் பயிற்சி நம்மை அறியாமலே செய்கிறோம். நுரையீரல் தொடர்பான பல பிரச்னைகளுக்கு, நீச்சல் நல்ல தீர்வு.

• அதிக உணவு, அல்லது அசைவம் சாப்பிட்டுவிட்டு நீச்சல் அடிக்கக் கூடாது. வெறும் வயிற்றிலும் நீச்சல் அடிக்கக் கூடாது. குறைவான அளவு சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்தே நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும்.

• ஆறு வயது சிறுவர்கள், வாரத்துக்கு நான்கு முறையும், 10 வயது சிறுவர்கள், வாரத்துக்கு ஏழு முறையும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம்.

• இந்திய   அளவில்்  குறிப்பிடத் தகுந்த நீச்சல் வீரர்கள்: வீர் தவால் காதே, சந்தீப் சஜ்வால்.

• நீச்சல் பயிற்சியின்போது, நீச்சல் உடை அணிந்தே பயிற்சி எடுக்க வேண்டும். வேறு உடைகள் அணிந்தால், உங்களுக்கான தனி ஸ்டைலில் பயிற்சி எடுக்க சிரமமாக இருக்கும்.

• தமிழக அளவில் குறிப்பிடத் தகுந்த நீச்சல் வீரர்கள்: தனுஷ், முகுந்தன்.

• நீச்சலின்போது, உடல், படுக்கைவாட்டில் இருப்பதால், உடலின் ரத்த ஓட்டம் அனைத்துப் பாகங்களுக்கும் எளிதாகப் பாயும்.

• தமிழ்நாட்டில் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக் நீச்சல் வகைகளையே மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

• 45 நிமிடங்களுக்கு மேல் நீச்சல் பயிற்சி எடுத்தால், நிச்சயம் இளநீர் அல்லது ஜூஸ் குடித்துவிட்டே தொடர வேண்டும். இடையிடையே தண்ணீர் குடிப்பது அவசியம்.

- வி.எஸ்.சரவணன்