Published:Updated:

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!

Vikatan Correspondent
ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!
ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!

இன்சியோன்: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா, ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!

ஆசிய விளையாட்டு போட்டி,  தென்கொரியாவில் நேற்று மாலை கண்ணைக் கவரும் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவில் இந்திய அணியினர்,  ஹாக்கி கேப்டன் சர்தார்சிங் தலைமையில் தேசியக் கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.

அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறும் 17வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா, இந்தியா, தென்கொரியா, வடகொரியா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், இந்தோனேஷியா உள்பட ஆசிய கண்டத்தை சார்ந்த 45 நாடுகளில் இருந்து 9,429 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 36 வகையான பந்தயங்களில் 439 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.

நீச்சல், தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கனோயிங் (ஒரு வகை படகு போட்டி), சைக்கிளிங், குதிரையேற்றம், கால்பந்து, கோல்ப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட் பால், ஹாக்கி, ஜூடோ, கபடி, துடுப்பு படகு, செபக்தாக்ரா (கைப்பந்து பாணியில் பந்தை காலால் உதைக்கும் ஒரு வகை விளையாட்டு), துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், தேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கைப்பந்து, மல்யுத்தம், வுசூ, பளுதூக்குதல், பாய்மர படகு ஆகிய 28 விளையாட்டுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது.

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!

இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்று பதக்க பட்டியலில் இடம்பிடித்துள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் ஸ்வேதா சவுத்ரி, மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோல், துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா முதல் தங்க பதக்கத்தை வென்றுள்ளது. ஆடவர் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஜீது ராய் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.

ஜிது ராய் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் வெள்ளிபதக்கம் வென்றவர்.கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் இவர் தங்கம் வென்றுள்ளார்.

இதனிடையே ஆடவர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்துள்ளார். தென்கொரியாவின் சோன் வான்ஹோ 21-4, 21-8 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி உள்ளார்.