Published:Updated:

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற ஜீது ராய்க்கு ரூ.50 லட்சம் பரிசு!

Vikatan Correspondent
ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற ஜீது ராய்க்கு ரூ.50 லட்சம் பரிசு!
ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற ஜீது ராய்க்கு ரூ.50 லட்சம் பரிசு!

லக்னோ: ஆசிய விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஜீது ராய்க்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டி,  தென்கொரியாவில் நேற்று (19ஆம் தேதி) மாலை கண்ணைக் கவரும் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவில் இந்திய அணியினர்,  ஹாக்கி கேப்டன் சர்தார்சிங் தலைமையில் தேசியக் கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற ஜீது ராய்க்கு ரூ.50 லட்சம் பரிசு!

அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறும் 17வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா, இந்தியா, தென்கொரியா, வடகொரியா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், இந்தோனேஷியா உள்பட ஆசிய கண்டத்தை சார்ந்த 45 நாடுகளில் இருந்து 9,429 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 36 வகையான பந்தயங்களில் 439 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வேதா சவுத்ரி, மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

இதேபோல், துப்பாக்கி சுடுதல் பிரிவில் ஆடவர் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவு போட்டியில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஜீது ராய் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.

இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஜீது ராய்க்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.