Published:Updated:

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 3வது பதக்கம்!

Vikatan Correspondent
ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 3வது பதக்கம்!
ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 3வது பதக்கம்!
ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 3வது பதக்கம்!

இன்சியான்: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் கிடைத்துள்ளது.

17வது ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. தொடக்க நாளான நேற்று (20ஆம் தேதி) ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஜிதுராய் தங்க பதக்கம் வென்றார்.

அதேபோல், 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்வேதா சவுத்ரி வெண்கல பதக்கம் வென்றார்.

இந்நிலையில், 2–வது நாளான இன்று (21ஆம் தேதி) துப்பாக்கி சுடும் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் அணிகள் பிரிவில் ஜிதுராய், சமரேஸ் ஜங், பிரகாஷ் நஞ்சப்பா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1743 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றது.

10 மீட்டர் ஏர்பிஸ்டல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் ஜிதுராய் 2–வது தங்கம் வென்று முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 5வது இடத்தை பிடித்து பதக்கத்தை தவறவிட்டார்.