Published:Updated:

ஓலிம்பிக்கில் தங்கம் வாங்கணும்: ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற ஆரோக்கிய ராஜீவ் விருப்பம்

விகடன் விமர்சனக்குழு
ஓலிம்பிக்கில் தங்கம் வாங்கணும்: ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற ஆரோக்கிய ராஜீவ் விருப்பம்
ஓலிம்பிக்கில் தங்கம் வாங்கணும்: ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற ஆரோக்கிய ராஜீவ் விருப்பம்

திருச்சி: ஓலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும் என்று ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற ஆரோக்கிய ராஜீவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஓலிம்பிக்கில் தங்கம் வாங்கணும்: ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற ஆரோக்கிய ராஜீவ் விருப்பம்

கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தென்கொரியாவின் இன்சியோன் நகரில் துவங்கிய 17வது ஆசிய விளையாட்டு போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 9,429 வீரர், வீராங்கனைகள் 36 வகையான போட்டிகளில் பங்கு பெற்றார்கள். இந்தியா சார்பில் 516 பேர் பங்கேற்றனர். இதில், துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சீனா, பதக்கப்பட்டியலில் 151 தங்கம் உட்பட மொத்தம் 342 பதக்கங்களுடன் முதலிடம் பெற்றது.

ஓலிம்பிக்கில் தங்கம் வாங்கணும்: ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற ஆரோக்கிய ராஜீவ் விருப்பம்

ஆனால், ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்திய வீரர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், கடைசியில், கபடி, ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர். 11 தங்கப் பதக்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை இந்தியா வென்று 8வது இடத்தை பிடித்தது.

ஓலிம்பிக்கில் தங்கம் வாங்கணும்: ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற ஆரோக்கிய ராஜீவ் விருப்பம்

இந்த ஆசிய போட்டியில், திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள வழுதியூரை சேர்ந்த ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ் 400 மீட்டர் ஓட்ட பந்தியத்தில் வெண்கலம் வென்றுள்ளார். அவர் நேற்று இரவு சென்னையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சிக்கு வந்தார். அவருக்கு, பெற்றோர், உறவினர்கள், திருச்சி விளையாட்டு வீர்ர்கள் சங்கம், கல்லூரி மாணவர்கள், மாவட்ட மக்கள் என ஏராளமானோர் வரவேற்பு கொடுத்தனர்.

நம்மிடம் ஆரோக்கிய ராஜீவ் பேசும்போது, ''சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு, எனது லட்சியம். கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தேசிய ஓபன் தடகளப் போட்டியில் தங்கம் வென்றேன். கடந்த வருடம் தாய்லாந்து மற்றும் இலங்கையில் நடந்த ஆசிய கிராண்ட் ப்ரீ போட்டிகளில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றேன்.

இப்படி அடுத்தடுத்து போட்டிகளில் கலந்துகொண்ட நான், இந்த போட்டியில் தங்க பதக்கம் வெல்லுவேன் என்று தான் நிந்த்து ஓடினேன். அதற்கான முயற்சிகளும் எடுத்தேன். ஆனால், எனக்கு வெண்கலம்தான் கிடைத்தது. ஆனாலும், இது எனக்கு கிடைத்த அங்கீகாரம்தான். எனது லட்சியம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதுதான். அதற்கான முயற்சிகளையும், பயிற்சிகளையும் எடுத்து நிச்சயம் ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்" என்றார்.

சி.ஆனந்தகுமார்

படங்கள்:
தே.தீக்‌ஷித்