Published:Updated:

ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதி: ககன் நரங் நம்பிக்கை

விகடன் விமர்சனக்குழு
ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதி: ககன் நரங் நம்பிக்கை
ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதி: ககன் நரங் நம்பிக்கை

புதுடெல்லி, நவ.5,2011

ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதி: ககன் நரங் நம்பிக்கை

லண்டனின் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தாம் பதக்கம் வெல்வது உறுதி என இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "லண்டன் ஒலிம்பிக்கில் 3 பந்தயங்களில் பங்கேற்கவுள்ளேன். இதனால், எனக்கு பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் எனக்கு, விடாமுயற்சியில் அதிர்ஷ்டமும் இம்முறை கைகொடுக்கும் என்று நம்புகிறேன்," என்றார் நரங்.

காமன்வெல்த், ஆசிய போட்டிகளில் பல பதக்கம் வென்றுள்ள ககன் நரங்குக்கு ஒலிம்பிக் பதக்கம் மட்டும் இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.

அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ககன் நரங் 10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் (புரோன்), 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) ஆகிய பந்தயங்களில் பங்கேற்கவுள்ளார்.