Published:Updated:

ஒலிம்பிக்கில் டோ கெமிக்கஸ்: இந்தியா கடும் எதிர்ப்பு

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சர்ச்சைக்குரிய 'டோ கெமிக்கல்ஸ்' நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளின் ஸ்பான்சர் நிறுவனங்களில் ஒன்றாக டோகெமிக்கல்ஸ் இருக்கிறது.

போபால் விஷ வாயு விபத்துக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கிய டோ கெமிக்கல்ஸ் நிறுவனம், ஒலிம்பிக் போட்டிகளின் ஸ்பான்சராக இருப்பது குறித்து இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த பிரச்னையை உடனடியாக ஒலிம்பிக் குழுவிடம் கொண்டு செல்லுமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம், ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.