Published:Updated:

ஷேன் வாட்சன் ரூ.9.5 , யுவராஜ் சிங் ரூ.7 கோடிக்கு ஏலம்!

Vikatan Correspondent
ஷேன் வாட்சன் ரூ.9.5 , யுவராஜ் சிங் ரூ.7 கோடிக்கு ஏலம்!
ஷேன் வாட்சன் ரூ.9.5 , யுவராஜ் சிங் ரூ.7 கோடிக்கு ஏலம்!

ரும் ஐ.பி.எல். சீசனில் யுவராஜ் சிங் ஹைதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த முறை அவரை ரூ.7 கோடி கொடுத்து ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஷேன் வாட்சன் ரூ.9.5 , யுவராஜ் சிங் ரூ.7 கோடிக்கு ஏலம்!

கடந்த சீசனில் டெல்லி அணிக்காக ரூ. 16 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த யுவராஜ்சிங், அந்த அணியால் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த சீசனுக்கு அவரது தொடக்க விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களுருவில் நடந்த ஏலத்தில்,  யுவராஜ் சிங்கை ஹைதராபாத் அணி ரூ. 7 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அத்துடன் ஆஷிஸ் நெஹ்ராவை ரூ. 5.5 கோடிக்கும் ஏலம் எடுத்தது.

பிற மார்க்கி வீரர்களான கெவின் பீட்டர்சன் ரூ.3.5 கோடிக்கும்,  இஷாந்த் சர்மாவை  ரூ. 3.8 கோடிக்கும்  புனே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. குஜராத் லயன்ஸ் அணி,  டேல் ஸ்டெயின் மற்றும் ட்வைன் ஸ்மித் ஆகியோரை தலா ரூ. 2.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

அதே வேளையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி,  ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனை ரூ.  9.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த ஐ.பி.எல். ஏலத்தில் அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ஷேன் வாட்சன்தான்.