Published:Updated:

நமீபியாவை சுருட்டி கெத்தாக அரையிறுதியில் நுழைந்தது இந்தியா U-19 அணி!

Vikatan Correspondent
நமீபியாவை சுருட்டி கெத்தாக அரையிறுதியில் நுழைந்தது இந்தியா U-19 அணி!
நமீபியாவை சுருட்டி கெத்தாக அரையிறுதியில் நுழைந்தது இந்தியா U-19 அணி!

பங்களாதேஷில் நடைபெற்று  வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில்,  அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி,  197 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி ஆரம்பம் முதலே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. பயிற்சி ஆட்டத்தில் 485 ரன்கள் குவித்து மாஸ் காட்டிய அணி,  லீக் ஆட்டங்களிலும் தெறி ஃபர்மாமென்ஸை காட்டி வந்தது.
 

நமீபியாவை சுருட்டி கெத்தாக அரையிறுதியில் நுழைந்தது இந்தியா U-19 அணி!

காலிறுதி போட்டிகளில் நமீபியாவை எதிர்கொண்ட இந்தியா, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 111 ரன்களையும், சர்ஃபராஸ் கான் 74 ரன்களையும் குவித்தார். இதனால் 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா 39 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் குவித்தது.

இந்திய தரப்பில் அன்மொல்ப்ரித் சிங் மற்றும் டாகர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா,  4வது காலிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். ஆட்டநாயகனாக 111 ரன்களை குவித்த ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் இந்தியா சார்பில் அபாரமாக ஆடிய  அர்மான் ஜாபர், சர்பராஸ் கான் இருவரும் பள்ளித் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.