Published:Updated:

சாம்பியன்ஸ் லீக்: 11வது முறையாக வென்று அசத்தியது ரியல் மாட்ரிட்!

Vikatan Correspondent
சாம்பியன்ஸ் லீக்: 11வது முறையாக வென்று அசத்தியது ரியல் மாட்ரிட்!
சாம்பியன்ஸ் லீக்: 11வது முறையாக வென்று அசத்தியது ரியல் மாட்ரிட்!
சாம்பியன்ஸ் லீக்: 11வது முறையாக வென்று அசத்தியது ரியல் மாட்ரிட்!

கிளப் கால்பந்து போட்டிகளில் மிகவும் உயரிய தொடரான யு.சி.எல் எனப்படும், யு.இ.எஃப்.ஏ சாம்பியன்ஸ் லீக் தொடரை வென்று அசத்தியுள்ளது ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இப்போட்டியில் அதே மாட்ரிட்டைச் சார்ந்த மற்றொரு அணியான அத்லெடிகோ மாட்ரிட் அணியை பெனால்டியில் வென்று 11வது முறையாக சாம்பியன்ஸ் லீக்கை அவ்வணி கைப்பற்றியுள்ளது. அவ்வணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இத்தொடரில் 16 கோல்கள் அடித்து தங்கக் காலணி விருதை வென்றார்.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இத்தொடரில், உள்ளூர் தொடர் பங்களிப்பு மற்றும் தகுதிச் சுற்று ஆகியவற்றின் அடிப்படையில் தலைசிறந்த 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பங்கேற்றனர். லீக் சுற்றுகள் முடிந்து 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. நாக் அவுட் சுற்றுகள் முடிவில் ஸ்பெயினின் மாட்ரிட் நகரை மையமாகக் கொண்ட ரியல் மாட்ரிட் மற்றும் அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. ரொனால்டோ, பேலே, பெஞ்சிமா, க்ரூஸ், ரமோஸ் என நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த ரியல் மாட்ரிட் அணி வோல்ஸ்பெர்க், மான்செஸ்டர் சிட்டி போன்ற சுமாரான அணிகளோடு திக்கித் தினறி வென்று 14வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆனால் இளம் வீரர்கள் நிறைந்த அத்லெடிகோ அணியோ நடப்பு யு.சி.எல் சாம்பியன் பார்சிலோனா, ஜெர்மன் சேம்பியன் பேயர்ன் மூனிச் போன்ற பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் 3வது முறையாக நுழைந்தது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகளே மோதின என்பது குறிப்பிடத்தக்கது. அப்போட்டியில் ரியல் அணி கூடுதல் நேரத்தில் 4-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் லீக்: 11வது முறையாக வென்று அசத்தியது ரியல் மாட்ரிட்!

உடைந்தது அரண்

இன்று அதிகாலை தொடங்கிய இறுதிப் போட்டியில் இரு அணிகளும் தங்கள் முழு பலத்துடன் களம் புகுந்தன. அத்லெடிகோ மாட்ரிட் அணியின் தடுப்பாட்டம் பலமாக இருக்கும் என்பதால் ரியல் அணி கௌன்டர் அட்டாக் முறையில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தொடக்கம் முதலே அவ்வணி நேரடியாக தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. அவ்வணியின் பேலே, க்ரூஸ் ஆகியோர் கோல் நோக்கி பந்துகளை செலுத்திக்கொண்டே இருந்தனர். அதற்குப் பலன் 15வது நிமிடத்திலேயே கிடைத்தது. க்ரூஸ் அடித்த ஃப்ரீ-கிக்கை, உலகின் காஸ்ட்லி வீரர் பேலே தட்டிவிட, ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் அதை கோலாக்கினார். மிகச்சிறந்த அரணாகக் கருதப்படும் அத்லெடிகோ அணியின் தடுப்பு இவ்வளவு சீக்கிரம் உடைக்கப்படும் என யாரும் நினைக்கவில்லை. ஒரு கோல் வாங்கிய பிறகு அத்லெடிகோ அணியின் ஆட்டம் முன்னேறியது. ரியல் அணி பலமுறை கோலடிக்க முற்பட்ட போதும், அத்லெடிகோ கோல்கீப்பர் ஓப்லாக்கின் மிகச்சிறந்த செயல்பாடு அவையனைத்தையும் தடுத்தது. முதல் பாதியின் முடிவில் ரியல் அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.

சாம்பியன்ஸ் லீக்: 11வது முறையாக வென்று அசத்தியது ரியல் மாட்ரிட்!

தொடரும் பெனால்டி சோகம்
 
இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே அத்லெடிகோ அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அவ்வணியின் டாரசைக் ரியல் வீரர் பெபே கீழே தள்ளியதால் பெனால்டி வழங்கப்பட்டது. பேயர்ன் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாரஸ் பெனால்டியைத் தவறவிட்டதால், இம்முறை கிரீஸ்மேன் பெனால்டியை அடித்தார். ஆனால் அவரும் கோல்கம்பத்தில் பந்தை அடித்து வாய்ப்பை வீனாக்கினார். ஆனாலும் ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் அத்லெடிகோ அணியின் இளம் பெல்ஜியம் வீரர் கராஸ்கோ கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினார். பின்கள வீரர் ஜுவான்ஃபிரான் அற்புதமாக பந்தை கிராஸ் செய்ய, கராஸ்கோ அதை எளிதில் கோலாக்கினார். ஆட்ட நேரம் முடிவடைந்தும் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் 30 நிமிட கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேர முடிவிலும் இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்காததால் ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது.

சாம்பியன்ஸ் லீக்: 11வது முறையாக வென்று அசத்தியது ரியல் மாட்ரிட்!

எமனாய் மாறிய ஆப்த்வாந்தவன்

முதல் மூன்று பெனால்டி வாய்ப்புகளில் ரியல் அணியின் லூகாஸ், பேலே, மார்செலோ ஆகியோரும், அத்லெடிகோ அணியின் கிரீஸ்மேன், காபி, சவுல் ஆகியோரும் கோலடித்தனர். 4வது வாய்ப்பில் ரியல் கேப்டன் ரமோஸ் கோலடித்தார். அத்லெடிகோ அணி சமநிலை அடைய உதவிய ஜுவான்ஃபிரான் தனது வாய்ப்பை கோல்கம்பத்தில் அடித்து வீனாகினார். ரியல் அணியின் கடைசி வாய்ப்பை நட்சத்திர வீரர் ரொனால்டோ கோலாக்க 11வது முறையாக கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட் அணி. சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே அதிக முறை கோப்பையை வென்ற அணி ரியல் மாட்ரிட் தான். அதற்கு அடுத்தபடியாக ஏ.சி.மிலன் அணி 7 முறை கோப்பையை வென்றுள்ளது. ரியல் மாட்ரிட் அணி கோப்பையை வென்றதன் மூலம் அவ்வணியின் பயிற்சியாளர் ஜிடேன், ஒரு வீரராகவும் அதே சமயம் பயிற்சியாளராகவும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற 7வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். பெனிட்சின் தலைமையின் கீழ் தினறிய ரியல் அணியின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே ஜிடேன் கோப்பையை வென்றுள்ளது அதைவிடச் சிறப்பாகும்.

 
நான்கு ஆண்டுகளாக லாலிகா தொடரை வெல்ல முடியாமல் தவித்து வரும் ரியல் மாட்ரிட் வீரர்களுக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் இவ்வெற்றி மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. ஆனாலும் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு மிகப்பெரிய ஜாம்பவான் அணிகளையெல்லாம் பந்தாடிய அத்லெடிகோ அணியும் பலரின் மனதைக் கொள்ளையடித்தது. இரு அணிகளும் மாட்ரிட்டையே மையாமகக் கொண்ட அணிகளென்பதால் ரசிகர்களின் அவ்வூர் மகிழ்ச்சி சோகம் என இரண்டும் கலந்த காக்டெயிலாகவே இருக்கும்.

மு.பிரதீப் கிருஷ்ணா