Published:Updated:

ஐபிஎல்-லில் போட்டுப் பொளந்த யூத் லெவன்!

Vikatan Correspondent
ஐபிஎல்-லில் போட்டுப்  பொளந்த யூத் லெவன்!
ஐபிஎல்-லில் போட்டுப் பொளந்த யூத் லெவன்!

து இளசுகளின் காலம். எல்லாத் துறைகளிலும் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் பட்டையைக் கிளப்புகின்றனர். அப்படி கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்பும் இளைஞர்களை பட்டை தீட்டத் தொடங்கப்பட்டதுதான் இந்தியன் பிரீமியர் லீக்.

ஆஸ்திரேலியாவிற்கு ஷான் மார்ஷை, தென்னாப்பிரிக்காவிற்கு மோரிஸை  அடையாளம் காட்டிய ஐ.பி.எல், மேலும் எத்தனையோ இந்திய இளைஞர்கள் மீதும் வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. மனீஷ் பாண்டே, பூம்ரா, அஷ்வின் என பல இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய பாலமாய் அமைந்த ஐ.பி.எல்,  இந்த ஆண்டு கண்டெடுத்த இளம் முத்துக்கள் யார் யார் என்பது குறித்து ஒரு அணியாய் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

அவர்களின் சர்வதேச மற்றும் உள்ளூர் அனுபவங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. வயது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால் டிகாக், கோலி உள்ளிட்ட வீரர்கள் இளைஞர்களாக இருந்தாலும் இந்த அணியில் இடம் இல்லை.

(படத்தில் இருக்கும் வீரர்களுக்கு அருகில் உள்ள  வெள்ளை வட்டத்துக்கு அருகில் கர்சரை கொண்டு  சென்றால்,  அந்த வீரரை பற்றிய குறிப்பு தெரியும்)

- மு.பிரதீப் கிருஷ்ணா (மாணவப் பத்திரிகையாளர்)