Published:Updated:

பாலியல் புகாரில் சிக்கி கைதான இந்திய வீராங்கனை!

விகடன் விமர்சனக்குழு
பாலியல் புகாரில் சிக்கி கைதான இந்திய வீராங்கனை!
பாலியல் புகாரில் சிக்கி கைதான இந்திய வீராங்கனை!
பாலியல் புகாரில் சிக்கி கைதான இந்திய வீராங்கனை!

கொல்கத்தா:  இந்திய தடகள வீராங்கனை பிங்கி ஆண் அல்ல; அவர் ஒரு பெண் என்றும், அவர் தம்மை கற்பழித்த்விட்டதாகவும்   பெண் வீராங்கனை ஒருவர் அளித்த புகாரின் பேரில்  பிங்கி பிராமானிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கத்தார் நாட்டில் உள்ள தோஹாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர் பிங்கி பிராமானிக்.
 
அதே ஆண்டில் மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன் பிங்கி விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
 
இந்த நிலையில் கொல்கத்தா வடக்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பாகுய்ஹாதி போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதில் 'பிங்கி பிராமானிக் ஒரு ஆண். அவர் என்னுடன் பல மாதங்களாகத் தொடர்பில் இருந்தபோது, என்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி என்னை கற்பழித்து விட்டார். இப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்' என குறிப்பிட்டிருந்தார்.
 
ஆரம்பத்தில் அப்பெண்ணின் புகாரை வாங்காமலிருந்த போலீசார், அப்பெண்ணின் பிடிவாதத்தால் இவ்வழக்கு குறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
 
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது புகாரின் பேரில் பிராமானிக்கை இன்று காலை கைது செய்தோம். அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனையில் அவர் ஆண் என்று தெரியவந்தது. அவரை அரசு பொது மருத்துவமனையில் பரிசோதித்து அறிக்கை பெற்றவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று தெரிவித்தார்.
 
இச்சம்பவம் விளையாட்டுத் துறை வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.