Published:Updated:

ஆசிய மல்யுத்தப் போட்டி: வெள்ளி வென்றார் இந்திய வீரர் சுமித்!

குருபிரசாத்
ஆசிய மல்யுத்தப் போட்டி: வெள்ளி வென்றார் இந்திய வீரர் சுமித்!
ஆசிய மல்யுத்தப் போட்டி: வெள்ளி வென்றார் இந்திய வீரர் சுமித்!

ஆசிய மல்யுத்தப் போட்டியில், இந்தியா மேலும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

ஆசிய மல்யுத்தப் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில், இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், சாக்சி மாலிக் உள்ளிட்டோர்  ஏற்கெனவே பதக்கம் வென்றிருந்தனர். இந்நிலையில்,  இந்திய வீரர் பஜ்ரங் புனியா நேற்று தங்கப்பதக்கம் வென்றார். 65 கிலோ எடைப்பிரிவில் பஜ்ரங், தென் கொரிய வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 


இதையடுத்து, 125 கிலோ எடைப்பிரிவின், இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித்  மற்றும் ஈரான் வீரர் அப்துல் காசிம் மோதினர். சுமித், இந்தத் தொடரின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வருவதால், இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், இறுதிப் போட்டியில் அப்துல் காசிமிடம், சுமித் தோல்வியடைந்தார். இதனால், சுமித் வெள்ளிப் பதக்கம் வென்றார். இது ஆசிய மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கும் 10-வது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.