Published:Updated:

`கோப்பையை நீங்க வச்சுக்கங்க பாஸ்... ட்விட்டரில் நாங்கதான் மாஸ்!' - சி.எஸ்.கே vs மும்பை ஐபிஎல் ட்வீட் கணக்கு

ராம் பிரசாத்

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை-சென்னை போட்டி என்றால் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். லீக், ப்ளே- ஆப், ஃபைனல் என எந்தப் பாரபட்சமும் இருக்காது. சமூக வலைதளத்தையே போராட்டக் களம் ஆக்கிவிடுவார்கள். இதுபோதது என வீரர்களும், அணி நிர்வாகமும் ட்வீட்களை தட்டிவிட்டுப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் செய்துவிடுவார்கள். ஐபிஎல் போட்டிக்கு முன்பாக விளம்பரம் மூலமே ஏகப்பட்ட ஹைப்புகளை ஏற்றி விடுவார்கள் அணி நிர்வாகத்தினர். ஒவ்வோர் அணிக்கும் தனி ட்விட்டர் ஹேண்டில் இருக்கிறது. ஐபிஎல்-க்கும் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் இருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் இவர்கள் பேசும் வீர வசனங்கள் எல்லாம் அடடே ரகங்கள். அதிலும் சென்னை வீரர்கள் இம்ரான் தாஹீர், ஹர்பஜன் ட்வீட் எல்லாம் படிக்க தமிழில் தனி அகராதியைத் தேட வேண்டும். சரி இவளோ பண்ணியிருக்காங்களே இது எல்லாம் எதுக்கு பாஸுனு கேட்குறீங்களா. இது எல்லாமே ஒரு விதமான ப்ரமோஷன் ட்ரெண்ட்தான்.

`கோப்பையை நீங்க வச்சுக்கங்க பாஸ்... ட்விட்டரில் நாங்கதான் மாஸ்!' - சி.எஸ்.கே vs மும்பை ஐபிஎல் ட்வீட் கணக்கு

ஐபிஎல் கோப்பை மும்பை இந்தியன்ஸ் வாங்கிட்டாங்க. இந்த ட்ரெண்டிங் டாப்-ல் யார் வந்திருப்பாங்கன்னு யோசிக்கிருங்களா. அந்தப் பட்டியலையும் ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் ட்விட்டரில் ஒரு ரெக்கார்டு பிரேக் நிகழ்வு நடந்துள்ளது. அதாவது ஐபிஎல் சம்பந்தமா 27 மில்லியன் ட்வீட்டுகள் தட்டிவிடப்பட்டுள்ளன. இது கடந்தாண்டை விட சுமார் 44 சதவிகிதம் அதிகமாகும்.

`கோப்பையை நீங்க வச்சுக்கங்க பாஸ்... ட்விட்டரில் நாங்கதான் மாஸ்!' - சி.எஸ்.கே vs மும்பை ஐபிஎல் ட்வீட் கணக்கு

இத்தனை ட்வீட்களுக்கு மத்தியில் ஒரு ஆட்டிட்யூட் கிரிக்கெட் வீரரின் ட்வீட் தான் மக்களிடையே அதிக ரியாக்‌ஷன்களைப் பெற்றுள்ளது. அவர் வேறுயாரும் இல்லை நம்ம ஹர்திக் பாண்டியாதான். தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ஹர்திக், எனது உத்வேகம், எனது சகோதரர், என் நண்பர், ஜாம்பவான் என கேப்ஷனைப் பதிவிட இந்த ட்வீட் வைரலானது. ஹர்திக் பாண்டியாவின் இந்த ட்வீட் 16,000 ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.  

`கோப்பையை நீங்க வச்சுக்கங்க பாஸ்... ட்விட்டரில் நாங்கதான் மாஸ்!' - சி.எஸ்.கே vs மும்பை ஐபிஎல் ட்வீட் கணக்கு

ஐபிஎல் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. காலையிலிருந்தே சென்னைடா.. மும்பைடா என ட்வீட்கள் பறந்தது. இறுதியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச்சென்றது. தோல்விக்குப் பின்னர் சென்னை ரசிகர்கள் அடக்கிவாசிக்க.. மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் சரமாரியாக ட்வீட்களைத் தட்டிவிட்டனர். அந்த வகையில் அன்றைய தினம் மட்டும் 63 சதவிகிதம் பேர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ட்வீட் செய்துள்ளனர். சென்னைக்கு 37 சதவிகிதம் பேர் ட்வீட் செய்துள்ளனர். இந்தக் கணக்குப்படி பார்த்தால் மும்பை அணிக்கு இதிலும் வெற்றிதான்.

`கோப்பையை நீங்க வச்சுக்கங்க பாஸ்... ட்விட்டரில் நாங்கதான் மாஸ்!' - சி.எஸ்.கே vs மும்பை ஐபிஎல் ட்வீட் கணக்கு

ஐபிஎல் தொடங்கிய மார்ச் 1-ம் தேதி முதல் மே-13 வரை எந்த அணிக்கு ட்விட்டரில் செல்வாக்கு என்று பார்த்தால் அது சென்னைக்குதான். கோப்பை நீங்க வெச்சுக்கங்க பாஸ் மக்கள் மனசுல சி.எஸ்.கேதான் மாஸ் என்பதுபோல் 8 அணிகளையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது சி.எஸ்.கே. 

`கோப்பையை நீங்க வச்சுக்கங்க பாஸ்... ட்விட்டரில் நாங்கதான் மாஸ்!' - சி.எஸ்.கே vs மும்பை ஐபிஎல் ட்வீட் கணக்கு

எந்த வீரரைப் பற்றி அதிகம் பேர் ட்வீட் செய்துள்ளனர் என்று பார்த்தால் அங்கே முதலில் இருப்பது நம்ம தல தோனிதான். ஸ்டார் ப்ளேயர்ஸ், யங் ப்ளேயர்ஸ், ஃபாரின் ப்ளேயர்ஸ் என எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளி தோனி முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக கோலி, ரோஹித், ஹர்பஜன், ரஸல் ஆகியோர் உள்ளனர்.

`கோப்பையை நீங்க வச்சுக்கங்க பாஸ்... ட்விட்டரில் நாங்கதான் மாஸ்!' - சி.எஸ்.கே vs மும்பை ஐபிஎல் ட்வீட் கணக்கு

இந்த ஐபிஎல் சீஸனில் எந்தப் போட்டிக்கு மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்திருக்கும். கண்டிப்பாக இறுதிப்போட்டியை மக்கள் அதிக ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருப்பார்கள். இந்தப் பட்டியலில் #CSKvsMI மோதிய போட்டியின் போது அதிக ட்வீட்கள் பறந்துள்ளன. அதுபோலவே லீக் போட்டியில் ஏப்ரல் 25-ம் தேதி #CSKvRCB மோதிய போட்டி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதேபோல் மே10-ம் தேதி நடந்த குவாலிஃபையர் போட்டியில் சென்னை, டெல்லி கேப்பிடல்ஸ் மோதிய போட்டியின் போதும் அதிக ட்வீட்கள் பறந்துள்ளன.
 
Vikatan