Published:Updated:

எனது கேரக்டரில் தீபிகா படுகோனே நடிக்க வேண்டும்: சானியா மிர்சா விருப்பம்!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: என்னுடைய வாழ்க்கை படமாக்கப்பட்டால் என்து கேரக்டரில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.

இதுகுறித்து, தேசிய குழந்தைகள் திரைப்பட விழாவில் அவர் பேசுகையில், ''என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நான் விரும்ப மாட்டேன். எனவே, என்னை பற்றி ஒரு திரைப்படம் வெளியாவதை நான் விரும்பவில்லை. எனது வாழ்க்கையை படமாக எடுக்க அனுமதி கேட்டு வந்த பல டைரக்டர்களிடம் நான் மறுப்பு தெரிவித்திருக்கிறேன்.

ஆனால், ஒருவேளை எதிர்காலத்தில் எனது வாழ்க்கை திரைப்படமானால் அதில் எனது கேரக்டரில் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார்.

சுயசரிதை புத்தகம்

சானிய மிர்சா தற்போது தனது சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இதுவரை 26 அத்தியாயங்களை எழுதி முடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது அனுபவங்களை முடிந்த வரையில் இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். என்னை பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை அதில் கொடுத்துள்ளேன். 2012 வரையிலான எனது வாழ்க்கையை இதுவரை எழுதி முடித்திருக்கிறேன். இன்னும் சில அத்தியாயங்களை எழுத வேண்டும்'' என்றார்.