Published:Updated:

டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச் விடைபெற்றார்! 

விகடன் விமர்சனக்குழு
டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச் விடைபெற்றார்! 
டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச் விடைபெற்றார்! 
டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச் விடைபெற்றார்! 


செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான அனா இவனோவிச். டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் பெற்று, தரவரிசையில் முதலிடம் பெற்றார். 12 வாரங்கள் தொடர்ந்து நம்பர் 1 இடம் வகித்த இவர் 15 மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸில் அதிகம்பேர் ரசிக்கும் வீராங்கனை யார் என்று 2015ம் ஆண்டில் ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முதலிடத்தைப் பிடித்திருந்தார்.


முன்னணி வீராங்கனையாக விளங்கி வந்த அவர், சமீப காலமாக தொடர் தோல்விகளால் தரவரிசையில் பின் தங்கியிருந்தார். இந்த நிலையில் தான் 29 வயதே ஆன இவனோவிச் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். டென்னிஸ் மூலம் தான் கனவிலும் எதிர்பாராத வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற்றதாகவும், தனக்கு ஆதரவளித்த குடும்பத்தினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், ஸ்பான்ஸ்சர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.