Published:Updated:

பிரெஞ்ச் ஓபன்: 7 வது முறையாக பட்டம் வென்றார் நடால்!

விகடன் விமர்சனக்குழு
பிரெஞ்ச் ஓபன்: 7 வது முறையாக பட்டம் வென்றார் நடால்!
பிரெஞ்ச் ஓபன்: 7 வது முறையாக பட்டம் வென்றார் நடால்!
பிரெஞ்ச் ஓபன்: 7 வது முறையாக பட்டம் வென்றார் நடால்!

பாரீஸ்: இன்று நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர்  இறுதிப்போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிக்கை தோற்கடித்து 7 வது  முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ரபெல் நடால்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ்  நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று  நடந்தது. இதில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிக் (செர்பியா)- இரண்டாம்  நிலை வீரரான ரபெல் நடால் மோதினார்கள்.

களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவரான நடால் முதல் 2 செட்டிலும் ஆதிக்கம்  செலுத்தினார். முதல் செட்டை 6-4 என்ற கணக்கிலும், 2-வது செட்டை 6-3 என்ற  கணக்கிலும் வென்றார். ஆனால் 3-வது செட்டில் ஜோகோவிக் சிறப்பான ஆடி 6-2  என்ற கணக்கில் எளிதில் வென்றார். 4-வது செட்டில் அவர் 2-1 என்ற கணக்கில்  முன்னணியில் இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

நடால் 2 செட்டையும், ஜோகோவிக் ஒரு செட்டையும் வென்று இருந்தனர். மழை  நீடித்ததால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அந்தப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு அதே  ஸ்கோர் நிலையில் இருந்து,மீண்டும் தொடங்கியது.

இப்போட்டியில் 6-4, 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை  வீரரான ஜோகோவிக்கை தோற்கடித்து 7 வது முறையாக பட்டம் வென்று சாதனை  படைத்தார் ரபெல் நடால்.