விகடன்

`வார்டு உறுப்பினருக்கு ரூ.10 லட்சம்?' - டிமாண்ட் வைத்த தி.மு.க எம்.எல்.ஏ; தலைமைக்குப் பறந்த கடிதம்!
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியின் 12-வது வார்டுக்கு சீட் தர ரூ.10 லட்சம் தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி கேட்பதாகவும், தன் மகனுக்கு பணம் வாங்காமல் அந்த வார்டில் சீட் தரக்கோரி தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஆலவயல் சுப்பையா, தி.மு.க தலைமைக் கழகத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 12-க்கு என் மகன் முரளிதரனுக்கு விருப்ப மனு கேட்டு நேர்காணல் முடிக்கப்பட்டு சீட் அறிவிக்கும் நேரத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் ரகுபதி ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் தான் அந்த சீட் கிடைக்கும்.

கடிதம்

மற்ற தேர்தல் செலவுகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். நான் தி.மு.க-வில் ஏற்கெனவே எம்.எல்.ஏ ஆக இருந்தேன். எங்களுக்கு இதுமாதிரி டிமாண்ட் எல்லாம் வைக்காமல், என் மகன் முரளிதரனுக்கு சீட் வழங்க தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அனுப்பி இருந்தார்.

இதுபற்றி முரளிதரன் கூறும்போது, "தி.மு.க எம்.எல்.ஏ-விடம் இருந்து அழைப்பு வந்துச்சு. தம்பி ரெண்டு பேர் சீட் கேட்குறீங்க. ரெண்டு பேரும் சீனியர் வீட்டுப் பிள்ளைங்க. ரெண்டு பேரில் யார் முதலில் ரூ.10 லட்சத்தைக் கொண்டு வந்து தர்றீங்களோ அவங்களுக்கு சீட் கொடுக்கிறோம். ஒன்றிய செயலாளர் அடைக்கல மணி சொல்லச் சொன்னாருன்னு சொல்லிட்டு வச்சிட்டாரு. இதுபற்றி அப்பாகிட்ட சொன்னேன். அப்பாகிட்டேயும் பேசி பணம் கேட்ட உடனே, கோபமாகத்தான் அப்பா எம்.எல்.ஏ-வாக இருந்த என்கிட்டேயே பணம் கேட்கிறீங்களான்னு சொல்லித்தான் தலைமைக்குக் கடிதம் அனுப்புனாரு" என்றார்.

தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி

இதுபற்றி தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதியிடம் கேட்டபோது, "எந்தக் கட்சிக்காரர்களுக்காகவும் நான் பணம் செலவு செய்வேனே தவிர, எந்தக் கட்சிக்காரரிடமும் எனக்கென்று அன்று முதல் இன்று வரை பணம் கேட்டது கிடையாது. என்னிடம்தான் பலரும் பணம் வாங்கி இருக்கின்றனர். செலவுக்குப் பணம் கொடுங்கள் என்று கட்சிக்காரர்களிடம் கேட்டு வாங்கும் பழக்கம் எனக்கு இல்லை. என்னைப்பற்றி அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். குறிப்பாக, தி.மு.க தலைமைக்கும் என்னைப் பற்றி நன்கு தெரியும். சீட்டுக்குப் பணம் கேட்பதாக ஏதோ உள் நோக்கத்தோடு குற்றம்சாட்டி உள்ளனர்" என்றார்.

`மிகப் பெரிய த்ரில்லர் என் வாழ்க்கையில இருக்கு!’ - அமலா பால்

`அவர் மட்டும்தான் அதைக் கண்டுபிடித்தார்!’ - சென்னை ஹோட்டல் ஊழியரைத் தேடும் சச்சின்
சென்னையில் நாளை இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையே, கிரிக்கெட் ஜாம்பவான் சென்னை டெஸ்ட் தொடரின்போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து நெட்டிசன்களிடம் உதவி ஒன்றையும் கேட்டுள்ளார்.

Sachin

சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தபோது அங்கிருந்த ஊழியர் ஒருவர் சொன்ன ஆலோசனைதான் அவரது கிரிக்கெட் ஆட்டத்தில் மாற்றத்தை கொண்டுவந்தது எனக் கூறியிருக்கிறார். அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்றுக்கூறி அதற்காக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

``சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது ஹோட்டலில் காபி ஆர்டர் செய்திருந்தேன். காபியை என் ரூமுக்கு கொண்டுவந்த ஹோட்டல் ஊழியர், சார் நான் உங்களிடம் கிரிக்கெட் தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டார். நானும் ஓகே சொல்லுங்கள் என்று சொன்னேன். ``நான் உங்கள் ரசிகன். உங்கள் பேட்டிங் ஸ்டைலை பிடிக்கும். நீங்கள் எப்போதும் பேட்டிங் பிடிக்கும்போது கையில் உள்ள எல்போ கார்டு சிரமத்தை தருகிறது. அதை ரீ டிசைன் செய்தால் நன்றாக இருக்கும்" என்றார் அந்த ஊழியர்.

இந்த உலகத்தில் யாரும் எனக்கு அதை சொல்லவில்லை. அவர்தான் சொன்னார். அதன்பிறகு சிரமத்தை புரிந்துகொண்டு எல்போ கார்டை ரீ டிசைன் செய்தேன். எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன். கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்" என வீடியோவாகவும், தமிழில் டுவிட் செய்தும் சச்சின் கோரிக்கை விடுத்துள்ளார்.

A chance encounter can be memorable!
I had met a staffer at Taj Coromandel, Chennai during a Test series with whom I had a discussion about my elbow guard, after which I redesigned it.
I wonder where he is now & wish to catch up with him.

Hey netizens, can you help me find him? pic.twitter.com/BhRanrN5cm
— Sachin Tendulkar (@sachin_rt) December 14, 2019

பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' என்ட்ரி... தி.மு.க-வுக்கு சாதகமா, சிக்கலா?
தி.மு.க-வின் தேர்தல் வியூகத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். 'Indian Political Action committee' சுருக்கமாக 'IPAC' என்றழைக்கப்படும் நிறுவனம்தான், அண்ணா வளர்த்த கட்சியை இப்போது அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகும் வேலையைச் செய்யப்போகிறது. விரிவாக படிக்க க்ளிக் செக... http://bit.ly/35lLVDA

தமிழக அரசியல் களத்தில் எழுந்த பல்வேறு சவால்களை, கடந்த அரை நூற்றாண்டு காலமாக தன் மதி வியூகத்தால் வீழ்த்திக்காட்டியவர் மு.கருணாநிதி. ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் தி.மு.க என்ற கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். அந்தத் தி.மு.க-தான், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு தேர்தல் வியூக கார்ப்பரேட் நிறுவனத்துடன் இப்போது ஒப்பந்தம் போட்டிருக்கிறது. ஒப்பந்தத்தில் தி.மு.க சார்பில் ஆலந்தூர் பாரதி கையெழுத் திட்டிருக்கிறார்.

பிரசாந்த் கிஷோரிடம் முன்பு பணியாற்றிய சிலரிடம் பேசியபோது, ''பிரசாந்த் கிஷோர், ஜெயிக்கும் குதிரையில் மட்டுமே பந்தயம் கட்டுவார். தமிழகத்தில் தி.மு.க ஜெயிக்கும் என்று கணித்துதான் வலியச்சென்று ஒப்பந்தம் போட்டுள்ளார். அவர் தேர்தல் பணியை மட்டும் பார்க்க மாட்டார்; வேட்பாளர் தேர்விலும் பல சிக்கல்களை ஏற்படுத்துவார். தி.மு.க தரப்பு, முதல்கட்டமாக 15 மாதங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. தொகை எதுவும் பேசவில்லை. 'ஜெயித்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று பிரசாந்த் சொல்லியிருக்கிறார். 2021-ல் மேற்குவங்கத்துக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு மாநிலத் தேர்தல்களை எப்படிக் கையாள்வார் எனத் தெரியவில்லை'' என்றனர்.

பிரசாந்த் கிஷோர் தரப்பில் பேசியவர்களோ, "எங்களுக்கு தொழில், அரசியல் வியூகம் வகுப்பது. தொழில் தர்மத்தை மீறாமல் நாங்கள் செயல்படுவோம். எங்களுக்கு கட்சிப் பாகுபாடு கிடையாது" என்றார்கள்.

- 'IPAC' நிறுவனத்தின் பின்னணி, தி.மு.க-வுக்குள் நுழைந்த விதம் குறித்து முழுமையாக வாசிக்க > 'கருணாநிதி' கட்சியை கரைசேர்க்குமா கார்ப்பரேட் வியூகம்? https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-political-strategist-prashant-kishor

'வாஸ்து' பிடியில் அறிவாலயம்!

''உள்ளாட்சித் தேர்தலுக்கு அ.தி.மு.க தரப்பு உற்சாகமாகத் தயாராகிவிட்டதுபோலிருக்கிறதே?''

''ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி எனத் தனித்தனியாக தேர்தல் நடத்துவதற்குக் காரணமே, அப்போதுதான் விட்டமின் 'ப'வை நிதானமாக வீடு வீடாக விநியோகிக்க முடியும் என்பதுதான்.  விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2RS0Mls

கூட்டணிக் கட்சிகளிடம், 'சீட் ஒதுக்கீடு பிரச்னையையெல்லாம் மாவட்டச் செயலாளரிடம் பேசிக்கொள்ளுங்கள்' என அ.தி.மு.க தலைமை கைகாட்டிவிட்டது. பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள் சதவிகித அடிப்படையில் சீட் ஒதுக்கீட்டை எதிர்பார்த்ததால்தான், மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி கைகாட்டிவிட்டாராம். மாவட்டங்களுடன் கூட்டணிக் கட்சிகள் முட்டிமோதுவதற்குள், தேர்தலே நடந்து முடிந்துவிடும் என்கிறார்கள்.''

''தி.மு.க தரப்பு இந்தத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறதாம்?''

''கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், 'ஆளுங்கட்சியின்மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் நிச்சயம் ஜெயிக்கலாம்' என்று தெம்பூட்டுகிறார்கள். ஆனால், ஆளுங்கட்சியின் பணபலத்துக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது.''

''பிரசாந்த் கிஷோர் இதற்கெல்லாம் எந்த ஐடியாவும் கொடுக்கவில்லையா?''

''சரியாகக் கேட்டீர். அவருடைய ஐடியா வேற லெவலில் இருக்கிறது. ஒருகாலத்தில் பகுத்தறிவுப் பாசறையாகக் கருதப்பட்ட அண்ணா அறிவாலயத்திலேயே தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டாராம் அவர். அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் அறைக்கு வலதுபுறத்தில் கதவு ஒன்று இருந்தது. அது வழியாகத்தான் கருணாநிதி வீல் சேரில் அமர்ந்தபடி உள்ளே வருவார். ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அறிவாலயத்தின் மெயின்கேட் வழியே உள்ளே நுழைந்து தலைவர் அறைக்குள் செல்வார். அங்கிருந்து கிளம்பும்போது வலதுபக்கக் கதவின் வழியே காரில் ஏறிச் சென்றுவிடுவார். இதுதான் வழக்கமாயிருந்தது. இப்போது அதில் ஒரு மாற்றம்.''

அப்படி என்ன மாற்றம்? - ஜூனியர் விகடன் கழுகார் பகுதியை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: 'தோஸ்து' கிஷோர்... 'வாஸ்து' பிடியில் அறிவாலயம்! https://www.vikatan.com/government-and-politics/politics/politics-and-current-affairs-dec-18

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

பிரெக்ஸிட் விவகாரம்; இமாலய வெற்றி! - பிரிட்டனைக் கலக்கிய போரிஸ் ஜான்சன்
பிரிட்டனில் டிசம்பர் 12-ம் தேதி நடந்த தேர்தல் வாக்குப்பதிவுகளின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அங்கு மொத்தமுள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களையும் தொழிலாளர் கட்சி 203 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள இடங்களில் ஸ்காடிஸ் தேசிய கட்சி 48, தாராளவாத ஜனநாயகவாதிகள் அமைப்பு 11, டெமாக்ரடிக் யுனியனிஸ்ட் கட்சி 8 மற்றும் பிற கட்சிகள் 15 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

பிரிட்டன்

சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி மிகப் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் 1935-ம் ஆண்டுக்குப் பிறகு, தொழிலாளர் கட்சி மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. பிரிட்டனைப் பொறுத்தவரை பிரெக்ஸிட் (Brexit) விவகாரம் பெரிதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அந்நாட்டின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த விவகாரத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வெளியேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பெரும் வெற்றி தொடர்பாகப் பேசியுள்ள போரிஸ், ``எனக்கு வாக்களிக்க மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நடந்துகொள்வேன். விரைவில் பிரெக்ஸிட் நிறைவேற்றப்படும். தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்கள் முதல்முறையாக கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

பிரீத்தி படேல்

இந்நிலையில், இதே பிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 பேர் வெற்றி பெற்று அந்நாட்டு நாடாளுமன்றத்துக்குள் சென்றுள்ளனர். இவர்களில் கோயன் மொஹிந்த்ரா, கிளாரி கௌடின்ஹோ மற்றும் நவேந்திர மிஸ்ரா ஆகிய 3 பேரைத் தவிர, மீதமுள்ள அனைவரும் ஏற்கெனவே அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள். இவர்கள் அனைவரும் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்களின் வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.

Also Read: போரிஸ் என்னும் புதிய ரட்சகர்!

பிரீத்தி படேல்

குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ப்ரீத்தியின் பெற்றோர்கள் பணி நிமித்தமாக இங்கிலாந்தில் குடியேறியுள்ளனர். பிற்காலத்தில் அங்கேயே செட்டில் ஆன ப்ரீத்தி 2010-ம் ஆண்டு முதல் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். முந்தைய அமைச்சரவையில் இவருக்கு உள்துறை அளிக்கப்பட்டது. தற்போது இவர் 24,082 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தன்மஜித்சிங் தேசி

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்கும் 2015-ம் ஆண்டு முதல் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருகிறார். தன் மாமனாரைப்போல் பிசினஸ்மேனாக அறியப்பட்டாலும் இங்கிலாந்தின் முக்கிய கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இந்தத் தேர்தலில் 26,086 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தன்மஜித்சிங் தேசி

பஞ்சாபைப் பூர்வீகமாகக்கொண்ட தேசி குடும்பத்துடன் இங்கிலாந்தில் செட்டிலாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. தேசிக்கு பூர்வீகம் இந்தியாவாக இருந்தாலும் இங்கிலாந்திலேயே பிறந்துவளர்ந்தவர். பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் தேசி 2017-ல் தான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். தற்போது நடைபெற்ற தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரைவிட 25,678 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்பேம் அழைப்புகள் இம்சிக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
அவசர வேலையாக வெளியில் சென்றுகொண்டிருக்கும் நேரம், வாகன நெரிசலில் சிக்கியிருக்கும் நேரம், முக்கியமான சந்திப்புகள் என நாம் பதற்றமான நிலையில் இருக்கும்போது திடீரென மொபைல் போனில் ரிங் அடிக்கும். எடுத்துப் பார்த்த்தால் அது  'ஸ்பேம்' (Spam Call)' அழைப்பாக இருக்கும். அப்படியே எரிச்சல் தலைக்கு ஏறும்.

Spam Call

இதுபோன்ற ஸ்பேம் கால்களின் தொல்லைகளைத் தடுக்க தற்போது பல்வேறு செயலிகள் இருக்கின்றன. அதில் பிரபலமானது ட்ரூ காலர் (True Caller) செயலி. Caller ID சேவை வழங்கும் இந்த 'ட்ரூ காலர்', தேவையற்ற அழைப்புகள் பற்றிய ஆய்வறிக்கை (Truecaller Insights Report 2019) ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஸ்பேம் கால்கள் பிரச்னையை அதிகம் சந்திக்கும் டாப் 20 நாடுகளின் பட்டியலும், எங்கிருந்தெல்லாம் ஸ்பேம் கால்கள் அதிகம் வருகின்றன போன்ற தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி 2019-ல் உலகமெங்கும் 2,600 கோடி ஸ்பேம் கால்கள் வந்துள்ளன. இது 2018-ம் ஆண்டைவிட 15 சதவிகிதம் அதிகம். அதேபோல 11,600 கோடி அடையாளம் காணப்படாத அழைப்புகள் (Unknown calls) வந்துள்ளன. இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டைவிட 56 சதவிகிதம் அதிகம்.

unknown calls

ஸ்பேம் கால்கள் அதிகம்வரும் நாடுகளில் பிரேசில் முதலிடத்தில் இருக்கிறது. பிரேசிலில் ஒரு மாதத்தில், ஒரு நபருக்கு சராசரியாக 45.6 ஸ்பேம் கால்கள் வருகின்றன. இரண்டாவது இடத்தில் இருக்கும் பெரு நாட்டில் ஒரு நபருக்கு 30.9 கால்களும், மூன்றாவது இடத்தில் உள்ள இந்தோனேசியாவில் ஒரு நபருக்கு 27.9 கால்களும் வருகின்றன.

-Truecaller Insights Report -2019சிறப்பு ஆஃபர்கள் பற்றிய அறிவிப்புகள், டேட்டா பிளான், அன்லிமிட்டெட் கால்ஸ் குறித்த அறிவிப்புகளுக்காக, மொபைல் ஆபரேட்டர்களால்தான் தேவையற்ற கால்கள் அதிகமாக வருகின்றன.

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் மெக்சிகோ உள்ளது. உலகளவில் ஸ்பேம் கால்கள் அதிகம் வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு மாதத்தில், நபர் ஒருவருக்கு சராசரியாக 25.6 ஸ்பேம் கால்கள் வருகின்றன.  இந்தப் பட்டியலில், தென்னாப்பிரிக்கா, சிலி, அமெரிக்கா, ரஷ்யா, கொலம்பியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கடந்த ஆண்டைக்காட்டிலும் 2019-ல் 7 சதவிகிதம் ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்துள்ளன.

Infographics

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஸ்பேம் கால்களில் 67 சதவிகிதம் மொபைல் ஆபரேட்டர்களிடமிருந்தும் 17 சதவிகிதம் வர்த்தக நிறுவனங்களிடமிருந்தும் வருவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் 6 சதவிகித கால்கள் மோசடி (scam calls) செய்யும் நோக்குடன் வருபவை. சிறப்பு ஆஃபர்கள் பற்றிய அறிவிப்புகள், டேட்டா பிளான், அன்லிமிட்டெட் கால்ஸ் குறித்த அறிவிப்புகளுக்காக, மொபைல் ஆபரேட்டர்களால்தான் தேவையற்ற கால்கள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதாக ட்ரூ காலர் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அல்லது முறையற்ற கால்கள் அல்லது குறுஞ்செய்தி வருகிறது.

ஸ்பேம் கால்கள் ஒருபுறமிருக்க, அடிக்கடி கவனத்தை திசைதிருப்புவது ஸ்பேம் மெசேஜ்கள்தான். இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அல்லது முறையற்ற கால்கள் மற்றும் குறுஞ்செய்தி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேவையற்ற ஸ்பேம் மெசேஜ்கள் அதிகம் வரும் நாடுகளின் பட்டியலில், எத்தியோப்பியா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரு மாதத்தில், நபர் ஒருவருக்கு 119 ஸ்பேம் மெசேஜ்கள் வருகின்றன. இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவில் ஒரு நபருக்கு 114 மெசேஜ்கள் வருகின்றன.

Spam SMS

கென்யா, பிரேசில், கொலம்பியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஸ்பேம் மெசேஜ் அதிகம் வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரு மாதத்தில், நபர் ஒருவருக்கும் 61 ஸ்பேம் மெசேஜ்கள் வருகின்றன. ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தில் இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளன. மேலும், மோசடி (scam) போன்ற அழைப்புகளைப் பெறும் நாடுகளில் மலேசியா முதலிடத்தில் உள்ளது. மலேசியாவில் மாதத்துக்கு 63 சதவிகித கால்கள் மோசடி தொடர்பாக வருகிறது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா (60%), மூன்றாவது இடத்தில் லெபனான் (49%) உள்ளது.

truecaller

ஸ்பேம் கால்கள் மற்றும் ஸ்பேம் மெசேஜிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

தேவையற்ற எண்களிலிருந்து மிஸ்டுகால் வந்தால் அதை மீண்டும் தொடர்புகொள்ள முயல வேண்டாம். வெளிநாடுகளில் நண்பர்கள், உறவினர்கள் இருந்தால், அவர்களது பகுதி தொலைப்பேசி எண்ணைத் தெரிந்து வைத்துக்கொள்ளலாம். ட்ரூ காலர், ஸ்பேம் நம்பர் போன்ற சில பாதுகாப்பான செயலிகள் கால் செய்பவரை பற்றிய தகவலைத் தருகின்றன. எனவே, இது போன்ற செயலிகளை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

truecaller

போஸ்ட் பெய்டு சிம் வைத்திருப்பவர்கள் தவறாமல் ஒவ்வொரு மாதமும் பில்லை சரிபார்ப்பது அவசியம். அப்போதுதான் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட  அழைப்புகளை எதிர்காலத்தில் தவிர்க்க முடியும்.

Also Read: ஸ்பேம் கால்கள் பட்டியலில் கவலைக்கிடமான இடத்தில் இந்தியா!

``ஆக்ஸிடென்டை மறைச்சு என்னை டாக்டராக்கினார் கணவர்" - 18 பதக்கங்கள் வென்ற லாரி டிரைவர் மகள்
நாமக்கல்லைச் சேர்ந்த ஆனந்தியின் அப்பா லாரி டிரைவர். திருமணத்துக்குப் பிறகு, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் கனவு நிறைவேறாமல் தவிக்கும் பெண்களுக்கு மத்தியில், ஆனந்தியைக் கால்நடை மருத்துவராக்கி அழகு பார்த்திருக்கிறார் கணவர் ரமேஷ். பல்கலைக்கழக அளவில் 18 தங்கப்பதக்கங்களை வென்று முதல் மாணவியாக இடம்பிடித்து சாதனைகளால் நெகிழ்கிறார் ஆனந்தி. வாழ்த்துகளைக் கூறி அவரிடம் பேசினோம்.

doctor anandhi

``நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள காளப்பநாயக்கன்பட்டி, என் பூர்வீகம். நடுத்தர குடும்பம். வீட்டில் ஒரே மகளான என்னைப் பெற்றோர் நல்லபடியா வளர்த்தாங்க. பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்புல ஸ்கூல்ல முதல் மாணவியா தேர்ச்சிபெற்றேன். எதிர்காலத்தைப் பத்தி நிறைய கனவுகள் இருந்துச்சு. ஆனா, அப்போ நல்ல வரன் வந்ததால உடனே எனக்குக் கல்யாணம் செய்துவெச்சுட்டாங்க.

காலேஜ் படிக்கணும்ங்கிற என் ஆசைக்குப் பலரும் எதிர்ப்பு சொன்னாங்க. `என் மனைவி படிச்சு நல்ல நிலைக்கு வரணும்'னு கணவர் ரொம்பவே ஊக்கம் கொடுத்தார். என் ப்ளஸ் டூ மார்க்குக்கு மருத்துவப் படிப்புக்கான சீட் கிடைக்கலை. சின்ன வயசுல இருந்து வளர்ப்புப் பிராணிகள்மீது அதிக அன்பு செலுத்துவேன். எனவே, கால்நடை மருத்துப் படிப்பில் சேரலாம்னு முடிவுபண்ணினேன். என் முதல் குழந்தை பிறந்து 5 மாதமாகியிருந்த நிலையில, 2013-ம் ஆண்டு ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில கவுன்சலிங் வழியில் சேர்ந்தேன்.

doctor anandhi

இன்ஜினீயரான என் கணவருக்கு அரசுப் பணி கிடைச்சு, கரூர்ல வேலை செய்துகிட்டிருந்தார். எனவே, பெற்றோர் என்னுடன் ஒரத்தநாட்டில் தங்கிட்டாங்க. அப்பா வழக்கம்போல லாரி மற்றும் கல்லூரி வேன் டிரைவராக வேலை செய்தார். அம்மா என் குழந்தையைப் பார்த்துக்க, நான் மகிழ்ச்சியா படிச்சேன். தினமும் காலேஜ் முடிச்சு வீட்டுக்கு வந்ததும், குழந்தைக்கான அன்பை முழுமையா கொடுத்தேன்.

ஒருமுறை எனக்கு செமஸ்டர் தேர்வு. அப்போ கணவருக்கு ஆக்ஸிடென்ட்டாகி அவர் கை மூட்டு விலகிடுச்சு. எனக்குத் தெரிஞ்சா நான் சரியா தேர்வெழுதாமப்போக வாய்ப்பிருக்குனு  நினைச்சு, அந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டார்.

doctor anandhi

தேர்வு முடிஞ்சு அவரைப் பார்க்க கரூர் போனப்போ அந்த விஷயம் தெரிஞ்சு ரொம்பவே வருத்தப்பட்டேன். என் படிப்புப் பாதிக்காதவாறு குடும்பத்தினர் எல்லோருமே ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தாங்க" என்கிற ஆனந்தி, 18 தங்கப் பதக்கங்கள் வென்ற தருணம் குறித்து மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

``எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நல்லா படிச்சேன். `பல்கலைக்கழக அளவில் சிறந்த மாணவியா வருவேன்'னு பேராசிரியர்கள் சொல்வாங்க. 5 வருஷ படிப்பை முடிச்சதுமே, சேலம் ஆவின் நிறுவனத்துல எனக்கு வேலை கிடைச்சுது. அந்த நிறுவனத்துல இணைந்து செயல்பட்ட நாமக்கல் ஆவின் நிறுவனம் தனியாகப் பிரிக்கப்பட்டுச்சு.

doctor anandhi

இப்போ நாமக்கல் ஆவின் நிறுவனத்துல கால்நடை மருத்துவரா வேலை செய்றேன். ஆவின் நிறுவனத்துக்கு விவசாயிகள் விற்பனை செய்ற பாலைத் தரப்பரிசோதனை செய்வது மற்றும் அவர்களுக்குத் தேவையான கால்நடை வளர்ப்புக் குறித்த ஆலோசனைகளைக் கொடுக்கிறது என்னுடைய பணி. தவிர, களப்பணியும் உண்டு.

இந்த நிலையில கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சென்ற ஆண்டில் பட்டப்படிப்பு முடிச்ச மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடந்துச்சு. அதில் ஒட்டுமொத்த மாணவர்களில் எனக்கு 18 தங்கப் பதக்கங்கள் கிடைச்சது. பாடப் படிப்புகள், நன்னடத்தை உட்பட பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்தப் பதக்கங்கள் கிடைச்சது. இவ்வளவு பதக்கங்கள் கிடைக்கப்போறது, விழாவுக்குச் சில தினங்களுக்கு முன்புதான் எனக்குத் தெரியும்.

டாக்டர் ஆனந்திகல்யாணத்துக்குப் பிறகு என்னை டாக்டராக்கி அழகு பார்த்திருக்கிற என் கணவருக்குத்தான், எனக்குக் கிடைக்கிற புகழ் எல்லாமே சேரும்.

பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் எல்லோரையும் கூட்டிகிட்டுப் போயிருந்தேன். அவர்கள் எல்லோருக்கும் அளவில்லா சந்தோஷம். கூடுதல் சர்ப்ரைஸ், சமீபத்துலதான் எனக்கு ரெண்டாவது குழந்தை பிறந்துச்சு.

கல்யாணத்தால், கல்லூரிக் கனவு நிறைவேறாமல் இருக்கும் பெண்கள் ஒருபக்கம். கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போக முடியாம தவிக்கும் பட்டதாரிப் பெண்கள் ஒருபக்கம்னு நிறைய பெண்கள் ஏக்கத்தில் தவிக்கிறாங்க.

doctor anandhi

ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு என்னை டாக்டராக்கி அழகு பார்த்திருக்கிற என் கணவருக்குத்தான், எனக்குக் கிடைக்கிற புகழ் எல்லாமே சேரும்" என்றார் மகிழ்ச்சியுடன்.

Also Read: தொழிலாளி to முதலாளி 16: மாமியார் கொடுத்த ஊக்கம்... ரூ.30 கோடி டர்ன் ஓவர் ஈட்டும் மருமகள்!

காரைக்காலை கலங்கடித்த செல்போன் திருடர்கள்!- லட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள் சிக்கிய பின்னணி
காரைக்கால் நகரத்தில் செல்போன் திருட்டு தினமும் நிகழும் நிகழ்வாகிப்போனதால், திருடர்களைப் பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்தது. இது தொடர்பாக மூவரைக் கைது செய்த காவல்துறை அவர்களிடமிருந்து செல்போன்கள், ரொக்கம் கைப்பற்றி பொதுமக்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.

செல்போன்கள் பறிமுதல்

காரைக்கால் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி செல்போன் திருட்டுகள் நிறைய நடந்து வந்தன. இது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இந்நிலையில் திருநள்ளாறு ரோட்டில் 'காரைக்கால் எலெக்ட்ரானிக்' எனும் மொபைல் கடையில் தஞ்சாவூர் பாப்பா கோயிலைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் ஒரு சில மொபைல்களைத் திருடிவிட்டதாகத் திருநள்ளாறு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகம்மது சமீர் என்பவர் நகரக் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக, காரைக்கால் முதுநிலை கண்காணிப்பாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் வீரவல்லபன் (தெற்கு) மேற்பார்வையில் ஆய்வாளர் (பொறுப்பு) சுப்பிரமணியன் தலைமையில் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முகமது ஷேக் அலாவுதீன், ராமசாமி மற்றும் காவலர்கள் மதிவாணன், சிவகுமார், மாரியப்பன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், தஞ்சாவூர் அய்யம்பேட்டை பகுதியில் ஐயப்பனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவரை விசாரித்தனர். விசாரணையில் 2019 மார்ச் மாதம் முதல் காரைக்காலில் பல மொபைல்களைத் திருடி, நண்பர்களான தஞ்சாவூரைச் சேர்ந்த மதன், திருவாருரைச் சேர்ந்த வரதராஜன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பெரும் லாபத்தை ஈட்டி வந்ததாக ஐயப்பன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்

karaikal sp office 2

இதனடிப்படையில் குற்றவாளி ஐயப்பன் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து சுமார் ரூ 1,65,000/- மதிப்புள்ள செல்போன்களும், ரூ 30,000 மதிப்புள்ள சாம்சங் கடிகாரங்களும், ரூபாய் 5,06,000/- மும் கைப்பற்றப்பட்டன. ஐயப்பன் நண்பர்களான மதன் மற்றும் வரதராஜன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 1,25,000/- மற்றும் ரூ 60,000 மதிப்புள்ள 2 செல்போன்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் குற்றவாளிகளைக் காரைக்கால் குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

செல்போன் திருடர்களை சிறையில் அடைத்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

ராமதாஸை ஓகே சொல்ல வைத்த ஒற்றைக் காரணம் என்ன? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 13/12/2019

'துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்' - இந்தப் பதத்தை அமித் ஷா நீக்கியதன் பின்னால்..?
மோடி - அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க அரசு, அதன் 'பிரியமான' திட்டங்களில் ஒன்றான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது எனில், தோற்றுப்போனது எது?

வேறு எதுவுமல்ல, நமது அரசியல் சட்டம்தான். ரத்தம் ஒழுக ஒழுக அடித்து வீழ்த்தப்படும் நிலையை எட்டியிருக்கிறது அரசியல் சட்டம்.  விரிவாக படிக்க க்ளிக் செய்க.... http://bit.ly/2PnFGK5

2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறாவிடாலும், அதிக தொகுதிகளில் வென்றது. அப்போதைய தேர்தல் அறிக்கையில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களுக்கு இங்கு குடியுரிமை வழங்குவது பற்றி கூறப்பட்டது. இந்தியா, பல மதத்தினரும் வசிக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது சாத்தியமல்ல. எனினும், இப்படி ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை அளிப்பது என்னும் கருத்தை யூத இனவாத அரசான இஸ்ரேலில் இருந்து பா.ஜ.க எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் எந்த நாட்டிலிருந்தும் வரும் யூதர்களுக்கு இஸ்ரேலில் குடியுரிமை அளிக்க வழிவகை செய்வதுதான் 'அலியாஹ்' எனும் சட்டம். அதேபோன்று உலகின் எந்த நாட்டிலிருந்து வரும் இந்துக்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் பா.ஜ.க தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அதைத்தான் இப்போது தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தமாகச் செய்திருக்கிறது. ஆனால், இந்திய அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை.

அத்துடன், பிரபலமான கேசவானந்த பாரதி வழக்கில் அரசியல் சட்ட அடிப்படைகளை பெரும்பான்மையின் அடிப்படையில் மாற்றிவிட இயலாது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. அதனால், இன்று கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தபோதும், பெரும்பான்மை மத அடிப்படையில் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க முடியவில்லை. அதனால், அவர்கள் இப்படி தம் அரசியல் கொள்கைகளை நசுக்கி நசுக்கி கொஞ்சம் கொஞ்சமாகச் செயல்படுத்திவருகின்றனர்.

2014-ம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சி அமைக்கப்பட்டபோது அஸ்ஸாம் மாநிலத்தில் 'குடியுரிமைப் பதிவேடு' தயாரிக்கும் திட்டத்தை அவர்கள் தொடங்கினர். இன்று அஸ்ஸாமில் குடியுரிமை அற்றவர்களாக 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதிலும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்துக்களாக உள்ளது பா.ஜ.க அரசின் நோக்கத்துக்கு இடையூறாக உள்ளது. அஸ்ஸாமில் இப்படி குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டவர்களை என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. மிகப்பெரிய தடுப்புக்காவல் முகாம்களை அமைத்து அடைத்துவைக்கப்போகிறார்களா? அப்படியான முகாம்கள் அமைக்கப்படுவதாகவும் செய்திகள் வரத்தான் செய்கின்றன.

இதற்கெல்லாம் பதில் இல்லாமலேயே இப்போது இந்திய அளவில் குடியுரிமைப் பதிவேடு உருவாக்கப்படும் என அறிவித்திருப்ப துடன், முதற்கட்டமாக 'குடியுரிமை திருத்த மசோதா' அறிவிக்கப்பட்டு, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.முக உள்ளிட்ட பா.ஜ.க ஆதரவுக் கட்சிகளின் துணையுடன் இது நடந்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், தி.மு.க முதலான கட்சிகள் எதிர்த்துள்ளன. இந்தச் சட்டம், குடியுரிமை அற்றவர்கள் விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி 2014, டிசம்பர் 31 என்கிறது. அதற்கு முன்னதாக வந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் இங்கே வாழ்ந்திருக்க வேண்டும் எனும் நிபந்தனை, இதன்மூலம் ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க அரசின் இந்தப் புதிய குடியுரிமைச் சட்டம் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எனும் மூன்று முஸ்லிம் நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே இந்த உரிமையை அளிக்கிறது. அத்துடன் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நுழைவதற்கான 1920-ம் ஆண்டு 'கடவுச்சீட்டுச் சட்டம்' (Passport Act) மற்றும் 1946-ம் ஆண்டு 'வெளிநாட்டவர் சட்டம்' (Foreigners Act) ஆகியவற்றிலிருந்து இந்த ஆறு மதத்தவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை. வேறு சொற்களில் சொல்வதானால், இந்த நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது அப்பட்டமாக நமது அரசியல் சட்ட அடிப்படையை மீறுகிறது. மத அடிப்படையில் இவ்வாறு தரம் பிரித்துச் சலுகைகள் அளிப்பதை, நமது அரசியல் சட்டப் பிரிவுகள் ஏற்பதில்லை. நமது அரசியல் சட்ட அடிப்படைக்கு எதிராக இன்றைய இந்தச் சட்டம் அமைகிறது. மதச்சார்பின்மையைப் புறக்கணிக்கிறது.

முன்னதாக மோடி அரசு இந்தச் சட்டத்தை வெளியிட்டபோது, அதில் இந்த நாடுகளில் உள்ள இந்த ஆறு மதத்தினர்களில் உள்ள, துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு மட்டுமே இந்தச் சலுகைகள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அமித் ஷா முன்வைத்து நிறைவேற்றியுள்ள வடிவில் 'துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்' எனும் பதம் நீக்கப்பட்டுள்ளது. காரணங்கள் காட்டப்படவில்லை. இவ்வாறு துன்புறுத்தல் இல்லாதபோதும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் அமித் ஷா சொல்லும் சேதி. இஸ்ரேலின் அலியாஹ் சட்ட வடிவம் இங்கே அப்படியே ஏற்கப்பட்டுள்ளது. ஆக, மத அடிப்படையில் இன்று 15 கோடிக்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம்கள் மட்டும் இன்று இந்திய மக்களிடையே தனியே பிரித்து நிறுத்தப்படுகின்றனர்.

இன்றைய அரசமைப்பில் `குடியுரிமை' என்பது உயிரினும் மேலானது... அது இன்று ஆபத்துக்குள்ளாகியுள்ளது. ஏனெனில்... - எழுத்தாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் எழுதிய சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > குடியுரிமைத் திருத்தம்... ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்! https://www.vikatan.com/government-and-politics/policies/human-rights-activist-a-marx-talks-about-citizenship-amendment-bill

"அமித் ஷா சொல்வது பொய்!"

உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் கொண்டுவந்தபோது ''காங்கிரஸ் கட்சி நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தாமல் இருந்திருந்தால், இந்தச் சட்டத்தை தற்போது கொண்டுவர வேண்டிய அவசியமே இருந்திருக்காது'' என்று பேசினார். இது, பல்வேறு தரப்பினரிடையே கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி யிருக்கிறது. அமித் ஷா சொன்னதில் உண்மை இருக்கிறதா?

பா.ஜ.க மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் வலதுகரமாகச் செயல்பட்டவர் சுதீந்திர குல்கர்னி. அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் தனது ட்விட்டரில், 'இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஒன்றுபட்ட இந்தியாவைப் பிரித்தது, முஸ்லிம் லீக் கட்சிதான். இந்தியாவை, அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற நாடாக உருவாக்கவே காங்கிரஸ் முயற்சி எடுத்தது. இது வரலாறு. இது தெரியாமல் நாடாளுமன்ற வரலாற்றில் மூத்த அமைச்சர் ஒருவர் கறுப்புச் சட்டத்தைக் கொண்டுவர பச்சைப்பொய்யைக் கூறியுள்ளார்" என்று பாய்ந்துள்ளார்.

வரலாற்று எழுத்தாளரான இர்பான் ஹபீப், 'வரலாற்று உண்மைகளைப் படிக்காமலும், நடந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளாமலும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பொய்யைப் பதிவு செய்துள்ளார்' என, ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார். - விரிவான செய்திக் கட்டுரைக்கு > "அமித் ஷா சொல்வது பொய்!" - வரலாறு சொல்லும் உண்மை என்ன? https://www.vikatan.com/government-and-politics/policies/amit-shah-statement-is-wrong-about-citizenship-amendment-bill

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

`உன்ன நினைச்சி நினைச்சி..!’ உதயநிதி நகல் கிழிக்கும் போராட்டத்தில் என்ன நடந்தது?
எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை அண்ணாசாலை, டிசம்பர் 13-ம் தேதி காலை 9 மணியளவிலிருந்து வழக்கத்தைவிடவும் கூடுதல் பரபரப்பாக இருந்தது. குறிப்பாக, சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே காக்கி பட்டாளங்கள் குவிக்கப்பட்டிருக்க, 'இன்னைக்கு ஏதோ சம்பவம் இருக்குடோய்' என லோக்கல்வாசி வாண்டுகள் கலாய்த்தபடியே கடந்து சென்றனர். 'இன்டெலிஜென்ஸ்கிட்ட இருந்து ரிப்போர்ட் வந்திருக்கு. சோ, போராட்டக்காரர்கள் எந்தத் திட்டத்தோடு  வந்தாலும் அதை உடைத்துவிட வேண்டும்' என உயரதிகாரிகள் உத்தரவிட்டபடியே இருக்க, 'என்னப்பா நடக்குது'? என ஆர்வமாக அந்த இடத்தை நெருங்கிப் போனோம்.

போராட்டம்

'உன்ன நினைச்சி நினைச்சி உருகிப் போனேன் மெழுகா...' என ஓரிரு கரைவேட்டிகள் பாடிக்கொண்டே இருக்கே, 'என்னண்ணே சங்கதி?' என்றேன். 'என்ன தம்பி இப்படிக் கேட்டுப்புட்டீங்க... குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை பி.ஜே.பி கொண்டு வந்தாங்க இல்லையா... அதனுடைய நகல் கிழிக்கும் மாபெரும்  போராட்டத்தை எங்க தி.மு.க இளைஞரணி நடத்துகிறோம். அண்ணன் உதயநிதிக்காகத்தான் காத்திருக்கிறோம்' என்றார்.

'மாபெரும் போராட்டம்ன்னு சொன்னீங்க... ஆனா, வந்த கூட்டத்தைப் பார்த்தா எண்ணிவிடலாம் போலயே' என்றேன் நான். 'அட! தம்பி இப்போ மணி 9.30-தானே... 10 மணிக்குத்தான் கூட்டம். அதுக்குள்ள வந்துருவாங்க' எனச் சமாளித்தபடியே, 'உன்ன நினைச்சி நினைச்சி...' என்று மீண்டும் தொடங்கினார்.

தி.மு.க இளைஞரணி

'ஓஹோ உதயநிதிக்காகத்தான் ஹம்மிங்கோ' என்றபடியே சைக்கிளில் வந்து தேநீர் விற்பவரிடம் ஒரு தேநீரை வாங்கிப்  பருகினேன். தேநீர் இரண்டானது... மூன்றானது... மணியோ இப்போது 10.30.  இப்போது கூட்டம் பரவாயில்லை. ஆனாலும் எண்ணிவிட முடிந்தது என்னால்... மீண்டும் பாடகர் உடன்பிறப்பையே தேடிச் சென்று 'என்னண்ணே உதயநிதியை  நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவர்’னு எல்லாம் சொல்வாங்களே... இன்னும் உங்க இளைஞரணி செயலாளரை (உதயநிதி ) காணோமே' என்றதுதான், 'தம்பி போதும்ப்பா... நானே வேதனையில் இருக்கேன். காலையில 8.30 மணிக்கே ஏரியா பசங்கள இட்டாந்துட்டேன். ஆனா, எதிர்பார்த்த கூட்டம் வரல... கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததும் அண்ணன் (உதயநிதி ) வருவார்னு தலைமை நிர்வாகிகள் சொல்றாங்க. இங்க நான் இட்டாந்த பசங்களுக்கு டீ, டிபன் வாங்கிக் கொடுத்தே என் சொத்து கரைஞ்சிடும்போல' எனப் புலம்பியபடியே 'உன்ன நினைச்சி...' எனத் தொடங்கினார். இந்த முறை அந்த சைக்கோ படத்தில் வரும் அந்த மெட்டு இன்னும் சோகமாக இருந்தது.

நான் இப்போது நான்காவது தேநீரைப் பருகத் தொடங்கினேன். திடீரென, 'அண்ணன் வர்றார்... அண்ணன் வர்றார்' எனச் சத்தம் கேட்க தூரத்திலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தார் உதயநிதி. 'பேரணியா வந்துதான் ஆர்ப்பாட்டம் செய்றோம் . அதான் நடந்து வர்றாரு' என்றார் ஒரு இளைஞரணி வான்டடாக வந்து...

பஜார் ரோட்டில் இருந்து வந்த உதயநிதி, நிறுத்தி வைக்கப்பட்ட சிறு ஆட்டோ மேடையில் ஏறி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக முழங்கத் தொடங்கினார். எல்லோரும் கோரஸ் பாட, அடுத்து, நகல் கிழிக்கும் வைபவம் அரங்கேறியது. 'அண்ணா,  நான் கொண்டு வந்த ஜெராக்ஸை கிழிங்க' என ஒரு இளம் பட்டாளம் முண்டியடிக்க, உதயநிதி அதையும் கிழித்தபின், சந்தோஷமடைந்தது இளம் பட்டாளம்.

உதயநிதி

அவர்களிடம் எதற்காக நகல் கிழிப்புப் போராட்டம் என நான் கேட்க, 'இத்த (மசோதா நகல்) ஜெராக்ஸ் எடுத்து கிழிக்கணும்னு சொன்னாங்க. அதான் கொண்டாந்தோம்' என்று ஒருவர் சொல்ல, 'என்னப்பா இதுகூடத் தெரியலையா?' எனக் குறுக்கிட்டார் ஒரு மூத்த உடன்பிறப்பு.

'வெளிநாட்டிலிருந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியா வருபவர்கள் இங்கே 5 ஆண்டுகள் வசித்தால் இந்திய குடியுரிமை பெறலாம். இதில் இஸ்லாமியர்கள் தவிர்த்து ஏனைய ஆறு மதத்தினருக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ளது மத்திய பி.ஜே.பி. இது மதசார்பற்ற நம் அடையாளத்தைப் பிளவுபடுத்துவதுபோல உள்ளது. மேலும், இலங்கையிலிருந்து இங்கு அகதிகளாக இருக்கும் நம் ஈழத்தமிழர்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இப்படிப் பல விஷயங்களைக் கண்டித்துதான் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா கிழிப்புப் போராட்டம் செய்கிறோம்' என மூச்சுவிடாமல் முழங்கினார்.

இப்படியான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்க, தி.மு.க–வினரை கைது செய்ய பேருந்துகளை ஸ்டார்ட் செய்தனர் காவல்துறையினர். உதயநிதியைக் கைது செய்து பேருந்துக்குள் ஏற்றும் சமயம், சட்டெனெ அண்ணா சாலை மத்திய பகுதிக்கு சென்றவர், சாலை மறியலில் இறங்கினார். கூட்டமும் சாலைமறியலில் குதிக்க, 'ஓ நோ எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சோமோ அதுவே நடந்துடுச்சி' எனத் தலையில் அடித்தபடியே காக்கி உயரதிகாரிகள் ஃபோர்ஸை தீவிரப்படுத்தினர். சில நேர தள்ளுமுள்ளுவுக்குப் பிறகு இறுதியாக உதயநிதியைக் கைது செய்து கூட்டிச் சென்றது காவல்துறை.

உதயநிதி

'உதயநிதியைக் கட்சிக்குள் முக்கிய பொறுப்புக்குள் கொண்டு வந்ததை தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் சிலரே விரும்பவில்லை. சமீபத்தில் கட்சியிலிருந்து வெளியேறிய பழ.கருப்பையா நேரடியாகவே, உதயநிதியை விமர்சனம் செய்திருந்தார்.

எந்தவித போராட்ட அனுபவங்களும் இல்லாமல் எடுத்த உடனே தலைமை பொறுப்புக்கு வருவதா என்று கட்சிக்குள்ளேயே முணுமுணுப்புகள் இருக்கின்றன. இதைச் சரிக்கட்ட வேண்டுமென்றால் தீவிரமான போராட்டங்களில் உதயநிதி முகம் காட்ட வேண்டும். அதுமட்டுமல்லாது சிறை செல்ல வேண்டும். போராட்டங்களில் தன் மீது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்றெல்லாம் தனியார் ஏஜென்சிஸ் நோட் போட்டு கொடுத்திருந்தார்கள். அதையொட்டித்தான் இந்தச் சாலைமறியல் எல்லாமே.

`இனி பல போராட்டங்களில் உதயநிதி வலம் வரலாம். இதை எல்லாம் யூகிச்சுத்தான் காவல்துறை அதிகாரிகளுக்கு நோட் பண்ணிக் கொடுத்தோம். ஆனா, அவங்க சொதப்பிட்டாங்க. இவங்களும் சாலை மறியல் செஞ்சுட்டாங்க' என்றனர் இன்டெலிஜென்ஸ் போலீஸ். இறுதியாக 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நந்தனம் மைதானத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றனர் இளைஞரணியினர்.

Also Read: ``மறுபடியும் இந்தியாவை `மனுநீதி’க்குள் இழுக்கிறது பா.ஜ.க!’’ - கொதிக்கும் ஜோதிமணி

நித்தியின் லீலைகளுக்கு உடந்தை... 'பவர்ஃபுல்' மாடல் மா பக்தி பிரியானந்தா!
சர்ச்சை நாயகன் நித்யானந்தாவை குஜராத் காவல்துறையினர் வலைவீசி தேடிவரும் நிலையில், வீடியோ வழியாக சத்சங்கில் பேசி தன் பராக்கிரமங்களைப் பறைச்சாற்றிக்கொண்டிருக்கிறார் நித்தி. இன்னொரு பக்கம், நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட நித்தியின் லேப்டாப்பில் இருக்கும் புகைப்படங்கள் குறித்த தகவல்களால், அந்த மாநில வி.ஐ.பி-கள் பீதியில் இருக்கின்றனர்.  விரிவாக படிக்க க்ளிக் செய்க.... http://bit.ly/2YWEPDj

நாளொரு சேதியும் பொழுதொரு பீதியுமாக நித்தி பற்றி தகவல்கள் பரவும் நிலையில், கார்த்திகை தீபம் அன்று வீடியோவில் தோன்றினார் நித்யானந்தா. ''இந்து சனாதன தர்மங்களை மீட்டெடுக்கவே கைலாசா அமைக்கப்படுகிறது. நான் இதற்காக பல ஆண்டுகள் உழைத்திருக்கிறேன்; பல இன்னல்களையும் அனுபவித்துள்ளேன். இறைவன் அருளால் எனக்குத் தேவையான பொருளைச் சேர்த்துவிட்டேன். எனக்கு இப்போது இந்தியாவில் மட்டும் 1,200 இடங்களில் சொத்துகள் உள்ளன. ஆனால், அவற்றின் விவரத்தை இப்போது சொல்ல மாட்டேன்'' என்று பேசியிருக்கிறார்.

நித்தி

``உண்மையில் நித்திக்கு இவ்வளவு சொத்துகள் இருக்கின்றனவா?'' என்று அவருடைய முன்னாள் தனிச்செயலாளர் ஜனார்த்தன சர்மாவிடம் கேட்டால், ''எனக்குத் தெரிந்து அவருக்கு 400-க்கும் அதிகமான இடங்களில் சொத்துகள் இருக்கின்றன. அவரின் தொழிலே அடுத்தவர் பணத்தைப் பறிப்பதும், சொத்துகளை அபகரிப்பதும்தான். ஆனால், 1,200 இடங்களில் சொத்துகள் இருக்கின்றனவா என்று எனக்குத் தெரியவில்லை'' என்றார்.

நித்யானந்தாவின் ஆஸ்தான பெண் சீடர்களில் முக்கியமானவர், மா பக்தி பிரியானந்தா. மாடலிங் துறையிலிருந்து சந்நியாசியாக மாறியவர். பெண் சந்நியாசியாக இவர் இருந்தாலும், அதிலும் மாடலிங்கைப் புகுத்தி நித்தியின் பல்வேறு லீலைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

யோகா ஆசிரியர், நித்யானந்தாவின் சமூக வலைதளங்களின் பொறுப்பாளர் என 'பவர்ஃபுல்' பதவிகளோடு வலம்வந்த பக்தி பிரியானந்தாவை வைத்துதான் பல வி.ஐ.பி-களிடம் வசூல்வேட்டை நடத்தியுள்ளார் நித்யானந்தா என்கிறார்கள்.

''நித்யானந்தா ஆசிரமத்துக்கு வரும் வி.ஐ.பி-கள், அங்கு சொல்லித்தரும் பயிற்சிகளை சில நாள்களில் கற்றுக்கொள்வார்கள். அவர்களிடம் நித்யானந்தா, 'தொடர்ந்து இந்தப் பயிற்சியை உங்கள் வீட்டுக்கே வந்து நமது சந்நியாசிகள் சொல்லித் தருவார்கள்' என்று நயமாகப் பேசுவார்.

வி.ஐ.பி-கள் வீட்டுக்கு மாடலிங் அழகியான பக்தி பிரியானந்தாவோடு மேலும் சில பெண் சீடர்களையும் அனுப்பி, யோகக் கலையைக் கற்றுத்தரச் சொல்வார். அப்படி கற்றும்தரும்போது தங்கள் வலையில் விழும் நபர்களைவைத்து, பல கோடி ரூபாய் மடத்துக்கு நன்கொடையாகப் பெற்று வந்துவிடுவார்கள்'' என்கிறார்கள் ஆசிரமத்துக்கு நெருக்கமானவர்கள்.

குஜராத் மாநிலத்தில் இருக்கும் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் கடந்த மாதம் குஜராத் காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது குழந்தைகளை அனுமதியின்றி ஆசிரமத்தில் வைத்திருந்ததாக ஆசிரம நிர்வாகிகளான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகிய இருவரை கைதுசெய்தது குஜராத் காவல்துறை.

அத்துடன் அந்த ஆசிரமத்திலிருந்து லேப்டாப், டேப், செல்போன் உள்ளிட்டவற்றை அள்ளிச் சென்றுள்ளனர் குஜராத் காவல்துறையினர். அந்த லேப்டாப்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளனவாம். குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற பல தொழிலதிபர்கள் நித்யானந்தாவின் பெண் சீடர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் அதில் இருந்துள்ளன.

> நன்கொடை என்ற பெயரில் பணத்தை அபகரிக்கும் உத்திகள், குஜராத்தில் சிக்கிய பெண் தொழிலதிபர், ஆண்களையும் விட்டுவைக்காத நித்தி, ராஜமாதா ரஞ்சிதா, எங்கே நித்தி? - ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > நித்திய 'தாண்டவம்' - போலீஸ் கையில் லேப்டாப்... சிக்கப்போகும் வி.ஐ.பி-கள்!

https://www.vikatan.com/news/controversy/nithyananda-atrocities-dec-18

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

2 மாதமாக சவுதியில் இருந்த உடல்; மீட்கமுடியாமல் தவித்த பெற்றோர்-வாசகர்கள் முயற்சியால் கூடலூர் வந்தது!
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி சின்ன சூண்டி பகுதியைச் சேர்ந்த பரசுராமன், பொட்டு தம்பதியரின் மகன், ராஜ்குமார். 29 வயதான இவர், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவந்தார்.

ராஜ்குமார்

விசா காலம் நிறைவடைந்தும் 9 மாதத்கு மேலாக சவுதியில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளிநாட்டு வேலைக்குச் சென்ற தன் மகனின் மரணத்தைக் கேள்விப்பட்ட தந்தை பரசுராமனும் தாய் பொட்டுவும் துடிதுடித்துப்போயினர்.

சவுதி அரேபியாவில் இறந்த தன் மகனின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர 2 மாதமாகப் போராடியும் எந்தப் பயனும் இல்லாத நிலையில் தவித்து வந்தனர். இதுகுறித்து நமது விகடனில் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்தி சவுதி அரேபியாவில் உள்ள தமிழர்களால் அதிகம் பகிரப்பட்டது.

ஜித்தா தமிழ்ச் சங்கத்தினர்

இதேபோல் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா தமிழ்ச் சங்கத்தின் கவனத்துக்கும் செல்ல அவர்கள் உதவ முன்வந்தனர். ஜித்தா தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பேரரசு மற்றும் சிராஜ் ஆகியோர் நம்மை தொடர்புகொண்டு இறந்த ராஜ்குமாரின் முகவரி, பெற்றோர் தொடர்பு எண் போன்றவற்றைக் கேட்டறிந்தனர்.

உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைக்கு களமிறங்கிய இந்தக் குழுவினர் 5 நாள்கள் நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் தூதரகத்தையும் இளைஞர் பணியாற்றிய நிறுவனத்தையும் தொடர்புகொண்டு உடலைக் கொண்டு வருவதில் இருந்த சிக்கல்களை சரி செய்து நேற்று முன்தினம் சவுதியிலிருந்து விமானம் மூலம் உடலை அனுப்பி வைத்தனர்.

சிராஜ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சவுதி அரேபியா ஜித்தா தமிழ்ச் சங்கம் நிர்வாகி சிராஜ், "திருச்சியைச் சேர்ந்த நான் கடந்த 35 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறேன். ஜித்தா தமிழ்ச் சங்கத்தில் 5,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறோம். சட்டரீதியான சிக்கல்களையும் சரி செய்கிறோம்.

இந்தநிலையில், ராஜ்குமாரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல முடியாமல் 2 மாதங்களாகப் பெற்றோர்கள் போராடி வருவதை விகடன் செய்தி மூலம் அறிந்துகொண்டோம். பின்னர், அந்த இளைஞர் பணியாற்றிய நிறுவனம் அவர் தங்கியிருந்த முகவரி போன்றவற்றை அறிந்துகொண்டு தாம் நகரி இருக்கும் ஷாஜி மதிலகம் என்பவரின் துணையுடன் தூதரக அதிகாரிகள் மற்றும் இந்த இளைஞரின் ஸ்பான்சர் ஆகியோரை அணுகி உடலை சொந்த நாட்டுக்கு அனுப்புவதில் இருந்த சட்ட சிக்கல்களைக் கேட்டறிந்து கொண்டோம். உடனடியாக அவற்றைச் சரிசெய்து பேரரசு மற்றும் அனைவரின் கூட்டு முயற்சியுடன் அவரின் உடலை மீட்டு அனுப்பி வைத்தோம்" என்றார்.

மகன் ராஜ்குமார் உடலுடன் தந்தை பரசுராமன்

2 மாதமாக மகனின் உடலை மீட்க முடியாமல் தவியாய் தவித்து வந்த பெற்றோர், பலரது முயற்சியால் சொந்த மண்ணுக்கு மகனின் உடலைக் கொண்டுவர பாடுபட்ட அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து, ராஜ்குமாரின் உடலுக்கு சொந்த ஊரான கூடலூர் சின்ன சூண்டியில் நேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.

போரிஸ் ஜான்சன் வெற்றி! இந்திய வம்சாவளியினர் 15 பேர் எம்.பிக்களாகத் தேர்வு #GE2019 polls #NowAtVikatan
குடியுரிமைச் சட்டம்!

நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பல்வேறு இடங்களில் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம் மசோதா சட்டமாகி உள்ளது. நேற்றிரவு இந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சம்ஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது!

கணேஷ் சிங் பா.ஜ.க எம்.பி

மக்களவையில் நேற்று மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தில் பேசிய பா.ஜ.க எம்.பி கணேஷ் சிங், ``அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தினமும்  சம்ஸ்கிருதம் பேசினால் அது நமது நரம்புகளை சிறப்பாகச் செயல்பட வைத்து அதன் மூலம் சர்க்கரை மற்றும் கொழுப்பு நோய்களைத் தள்ளி வைக்கும். அதேபோன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய ஆய்வில், கணினி மென்பொருள்களை சம்ஸ்கிருத மொழியில் உருவாக்கம் செய்யப்பட்டால் அதில் எந்தக் குறைபாடும் வராது” எனத் தெரிவித்தார். மேலும், உலகில் உள்ள மொழிகளில் 97% மொழிகள் சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டவைதான் என்றார். இவரது பேச்சுதான் தற்போது செம வைரல்!

Also Read: `700 வருடம் இளைய மொழி; மறைமுக கள்ளத்தனம்'- நாடாளுமன்றத்தில் கொதித்த தமிழக எம்.பி-க்கள்!

சி.பி.ஐ விசாரணை கிடையாது!

ஐ.ஐ.டி

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லை என்பதாலும், தற்கொலை வழக்கை விசாரிக்கும் குழுவில் சி.பி.ஐயில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்ற தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று சி.பி.ஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம். மேலும் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்குத் தேவையானதைக் காட்டிலும் அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிறார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை பரிந்துரைத்தும்  முடிவெடுக்கவில்லை - உயர்நீதிமன்றத்தில் நளினி ஆட்கொணர்வு மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.  “ 10 ஆண்டுகள் சிறையில் இருந்த 3000 கைதிகள் நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசின் முடிவுக்குப் பிறகும் சட்டவிரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்திய வம்சாவளியினர் 15 பேர் வெற்றி!

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்குத் தேவையானதைக் காட்டிலும் அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிறார். போரிஸ் ஜான்சனின்  கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 203 இடங்களில் வென்றுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பிரிட்டன் பொதுத்தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 எம்.பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் தலா 7 பேரும், லிபரெல் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.

Chennai businessman filed a case against woman!

ஆலய வழிபாடுகள், தர்மங்கள்... புண்ணிய காரியங்கள் செய்தாலும் நற்பலன்கள் இல்லையே ஏன்?
ஒருவர் எவ்வளவுதான், ஆலய வழிபாடுகள், தர்மங்கள், புண்ணிய காரியங்கள் செய்தாலும் பித்ருக்கள் வழிபாடு செய்யவில்லை என்றால் நற்பலன்கள் ஏற்படுவதில்லை. பித்ருக்களை வழிபடுவதற்கு உரிய காலங்களாக முன்னோர்கள் வகுத்து வைத்துள்ள 'வ்யதீபாதம்' காலங்களில் முறையான வழிபாடு செய்வதன் மூலம் இப்பிரச்னைகள் அகன்று அளவற்ற நற்பலன்களைப் பெறலாம்.

ஆலய
புண்ணிய காரியங்கள்

' வ்யதீபாதம்' என்பது 27 விதமான யோகங்களில் ஒன்று. அத்தகைய யோக தினத்தில் வழிபடுவதற்கு உரிய சிறந்த தலமாக நாகை மாவட்டம் திருவாவடுதுறைஅருகில் திருக்குளம்யியத்தில் அமைந்துள்ள ஸ்ரீசௌந்தர்யநாயகி சமேத ஸ்ரீகோகணேஸ்வரர் ஆலயம் திகழ்கின்றது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலம் இந்நாளில் திருக்குளம்பியம் என்றழைக்கப்படுகிறது.

அம்பிகை பசு உருவில் பால் சொரிந்து பூஜிக்கும்போது, கால் இடறியதால் பசுவின் குளம்பு மூலவரின் பாணத்தில் வடுவாக இருப்பதை இன்றும் காணலாம். அதனாலேயே இத்தலத்து மூலவர் 'ஸ்ரீகுளம்பிய நாதர் என்ற நாமத்தையும் பெற்றுள்ளார். இத்தகைய புராதனமான இந்த ஆலயம் வ்யதீபாத வழிபாட்டுக்கு உரித்தானது எப்படி?

ஸ்ரீகோகணேஸ்வரர்

கருணைக் கடலான இறைவனின் படைப்பில், எல்லா நேரங்களும் நல்ல நேரங்கள்தான். ஆயினும், குறிப்பிட்ட துல்லியமான கிரகசேர்க்கைகள் ஏற்படும் நேரங்களில் செய்யப்பெறும் வழிபாடுகள், மற்ற நேரங்களில் செய்யப்பெறுபனவற்றைவிட பன்மடங்கு புண்ணியபலன்களை அள்ளித் தருபவைகளாக அமைந்துவிடுகின்றன என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை.

இப்படிப்பட்ட யோக காலங்களைத் தெரிவு செய்து வழிபாடுகளை நிகழ்த்துவதன் மூலம் அளவிலாத நன்மைகளை அடைய இயலும்.

பொதுவாக யோகங்களை மூன்று விதமாக முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

1. ஜனன கால ஜாதகத்தில், கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் யோகங்கள்.

2. நட்சத்திர சேர்க்கையின் அடிப்படையில் ஏற்படும் யோகங்கள். (சித்தயோகம், அமிர்த யோகம், மரண யோகம் போன்றவை).

3. சூரிய சந்திரனுக்கிடையே ஏற்படும் தொடர்பால் உண்டாகும் யோகங்கள்.

இந்த மூன்றாவது வகையில் விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை 27 விதமான யோகங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்றுதான் 'வ்யதீபாதம்'.

இந்த வ்யதீபாத யோகம் சுப யோகத்துக்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. இதை அசுப யோகம் என்றே சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே, இத்தகைய தினங்கள் பித்ரு காரியங்களான தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் போன்றவற்றுக்கு மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் மார்கழி மாதத்தில் வரும் 'வ்யதீபாத' தினம் 'மஹா வ்யதீபாதம்' என்று சிறப்பிக்கப்படுகிறது.

ஒரு சமயம் சந்திர பகவானின் பிழையான நடத்தையால் சூரிய பகவான் கோபத்துடன் நோக்க, அவரும் பதிலுக்கு சினத்துடன் பார்த்தாராம். இவ்விருவரின் சினந்த பார்வைக் கலப்பால் தோன்றிய தேவதையின் ஸ்வரூபமே 'வ்யதீபாத' யோகத்துக்கு உரியதாயிற்று. எனவேதான், இது அசுப யோகம் என்று வழங்கப்படுகிறது. இதற்குரிய அதிதேவதை சிவபெருமான் ஆவார்.

ஸ்ரீ சௌந்தர்யநாயகி

பொதுவாக இத்தகைய தினங்களில் காசி, கயை போன்ற தலங்களில்தான் முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்து , வழிபாடுகள் மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது. அதுபோல காவிரிக்கரைத் தலமான திருக்குளம்யியம் எனும் இந்த சிவத்தலமும் வ்யதீபாத வழிபாட்டுக்குரிய மிகச் சிறந்த தலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அன்றைய தினத்தில், இத்தலத்து ஆலயத்தில் செய்யப்பெறும் வழிபாட்டில் கலந்துகொள்வோர்க்கு, பித்ரு தோஷங்கள் நீங்கப் பெற்று, சகல க்ஷேமங்களும் உண்டாகும் என்பது தல வரலாறு சொல்லும் செய்தியாகும். இத்தலத்து கோகணேஸ்வரரை அகத்தியர், போகர், கொங்கணர், திருமூலர் முதலான சித்தர் பெருமக்கள் வழிபாடு செய்துள்ளனர் என்பதும், இன்றும் பல சித்தர்கள் அரூபமாக வந்து இத்தலத்து இறையை பூஜிக்கின்றார்கள் என்பதும் இப்பகுதியில் நிலவும் நம்பிக்கையாகும்.

வ்யதீபாத நாள்களில் இந்த ஆலயத்தில் ஹோமங்கள் செய்து, கலச நீரைக்கொண்டு மூலவரை அபிஷேகிக்கும்போது உண்டாகும் அதிர்வுகள் வழிபடுவாரின் மீது படும்போது, அவர்களின் பித்ரு தோஷங்கள் விலகி நன்மைகள் உண்டாகும் என்பது சித்தர்கள் வாக்காகும். அன்றைய தினம் இத்தலத்து ஈசனை '300 நாமாவளிகள் அடங்கிய அர்ச்சனை' செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இக்குறிப்புகள் யாவும் பழைமையான ஓலைச்சுவடிகளில் சித்தர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, ஒவ்வொரு மாதமும் இக்கோயிலில் நடைபெறும்  வ்யதீபாத வழிபாட்டுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வரும் ஜனவரி 1-ம் தேதி மஹா வ்யதீபாத தினமாதலால் அன்றைய நாளில் இவ்வாலயத்தை தரிசித்து, பித்ரு சாபங்கள் நீங்கப்பெற்று, முன்னோர்களின் ஆசிகளோடு, ஸ்ரீ கோகணேஸ்வரரின் அருளையும் பெற்று வாழ்வில் வளம் பெறலாமே !

`நாங்கள் இருக்கும்வரை ஒருவரைக்கூட வெளியில் அனுப்ப முடியாது’ - மம்தா பானர்ஜி திட்டவட்டம் #CAB
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத் திருத்தத்துக்குத் தேசிய அளவில் உள்ள பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இதை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

இந்நிலையில், இந்தச் சட்டத் திருத்தத்தை எங்கள் மாநிலத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் எனச் சில மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: `மத பன்மைத்துவம்.. பாரபட்சம்.. ஜனநாயகம்'- குடியுரிமை மசோதாவுக்கு அமெரிக்கா, ஐ.நாவின் ரியாக்சன் என்ன?

இதற்கிடையில் தன் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தைச் செயல்படுத்த முடியாது என மம்தா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``எந்தச் சூழ்நிலையிலும் மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்த முடியாது. இங்கு இந்தியக் குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க மாட்டோம். மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டிருந்தாலும் அதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

மம்தா பானர்ஜி

மாநிலங்கள் இதை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்த முடியாது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இந்தச் சட்டம் இந்தியாவைப் பிரித்துவிடும். நாங்கள் ஆட்சியில் இருக்கும்வரை இந்த மாநிலத்தில் உள்ள ஒரு நபரைக்கூட நாட்டைவிட்டு வெளியில் அனுப்ப முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும்” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வரும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களிலும் மாநிலம் தழுவிய கண்டன பேரணி நடைபெறும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

`மத பன்மைத்துவம், பாரபட்சம், ஜனநாயகம்' - குடியுரிமை மசோதாவுக்கு அமெரிக்கா, ஐ.நா-வின் ரியாக்ஷன் என்ன?
குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பின் சட்டமாக இயற்றப்பட்டுவிட்டது. இதற்கு எதிர்க்கட்சித் தரப்பிலும் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. காங்கிரஸ் கட்சி இந்தச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதற்கிடையே, சட்டத்திருத்த மசோதா குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா மன்றமும் தற்போது கருத்து தெரிவித்துள்ளன.

மசோதா சட்டமாக்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகம், ``குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான முன்னேற்றங்களை நாங்கள் நெருக்கமாக பின்பற்றுகிறோம். மத சுதந்திரத்துக்கான மரியாதை மற்றும் சட்டத்தின் கீழ் சமமான சிகிச்சை ஆகியவை எங்கள் இரு ஜனநாயக நாடுகளின் அடிப்படைக் கொள்கைகள். இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக மதிப்புக்களுக்கு ஏற்ப தனது மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க அமெரிக்கா இந்தியாவை வலியுறுத்துகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குடியுரிமைச் சட்டத் திருத்தம்

ஏற்கெனவே திங்களன்று, மக்களவையில் மசோதாவை நிறைவேற்றிய பின்னர், அமெரிக்க வெளியுறவுக் குழு ட்வீட் செய்ததில், ``மத பன்மைத்துவம் இந்தியா மற்றும் அமெரிக்காவின் அஸ்திவாரங்களுக்கு மையமானது. இது எங்கள் முக்கிய மதிப்புகளில் ஒன்றாகும். குடியுரிமைக்கான எந்தவொரு மத சோதனையும் மிக அடிப்படையான ஜனநாயகக் கொள்கையைக் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது” தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெள்ளை மாளிகை இப்படித் தெரிவித்திருந்த அதேநேரத்தில் அமெரிக்க காங்கிரஸ்காரர் ஆண்ட்ரே கார்சன், ``இந்தச் சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக திறம்பட குறைக்கும் ஒரு முயற்சி" என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், இந்திய வெளியுறவுத் துறையோ, ``அதற்கு சிறிய அளவுகூட இடம் இல்லை" என்று மறுப்பு தெரிவித்தது.

அமெரிக்காவின் நிலைப்பாடு இப்படியிருக்க, ஐ.நா இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகப் பேசியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் ஹைகமிஷனர் ஒருவர், ``இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டம் அடிப்படையில் பாரபட்சமானது. சமத்துவத்துக்கான உறுதிப்பாட்டைக் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது" என்று கவலை தெரிவித்தார். ஆனால், ஐ.நா செய்தித்தொடர்பாளரோ, ``இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் மற்றும் மேல் சபைகள் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளன என்பதை நாங்கள் அறிவோம். மேலும், பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்ட கவலைகள் குறித்தும் நாங்கள் அறிவோம்.

ஐ.நா.

ஐ.நா இந்த விவகாரத்தில் சாத்தியமான விளைவுகளை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் பொதிந்துள்ள எங்கள் அடிப்படைக் கொள்கைகள் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார். ஐ.நா மற்றும் அமெரிக்க தரப்பில் இருவேறு நிலைப்பாடுகள் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

எதிர்ப்பு நிலைப்பாடுகளும் தெரிவிக்கப்பட்டு வரும்நேரம் இந்திய தரப்பிலிருந்து இதற்கு அதிகாரபூர்வ பதில் கொடுக்கப்படவில்லை. வரும் 18-ம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்கா செல்லவிருக்கிறார்கள். அப்போது அமெரிக்காவிடம் இருவரும் இந்திய தரப்பின் விளக்கத்தைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`விசாரணையை ஏன் தொடரக் கூடாது?' - ராஜேந்திர பாலாஜி வழக்கில் நீதிமன்றம் புது உத்தரவு!
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில், 'லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல்கட்ட விசாரணை அடிப்படையில் வழக்கை முடித்துவிடலாமா. விசாரணையை ஏன் தொடரக் கூடாது என்று, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி

மதுரையைச் சேர்ந்த மகேந்திரன், ''அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இப்புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லாததால் விசாரணை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் முன்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள் 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருத்தங்கல் பேரூராட்சி துணைத் தலைவராக இருந்த காலம் முதல் தற்போது வரை அவரின் வருமானம் மற்றும் சொத்துகள் பற்றி  விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.'

ராஜேந்திர பாலாஜி

6 மாதங்களுக்குப் பின், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தமிழக பொதுத்துறை செயலர் சார்பில் சீலிட்ட கவரில் விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்யத் தமிழக பொதுத்துறைச் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், 'குறிப்பிட்ட காலத்தில், அவருடைய  சொத்து மதிப்பு குறிப்பிட்ட அளவு அதிகரித்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி

அப்போது நீதிபதிகள், ''முதல் கட்ட விசாரணை அடிப்படையில் வழக்கை முடித்துவிடலாமா. விசாரணையை ஏன் மேற்கொண்டு தொடரக் கூடாது'' என்று கேள்வி எழுப்பியவர்கள், வழக்கை ஜனவரி 23-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். இதன் மூலம் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு முடிவு தெரியாமல் முடியாது என்று சொல்லப்படுகிறது.

ரூ.20,000-த்துக்கு விற்கப்பட்ட திருவாரூர் சிறுமிகள்! - கோவை அருகே மீட்பு
பள்ளிக்கூடம் படிக்கும் மகள்கள் இருவரை, குடும்பத்தின் வறுமைக்காகக் கோவையிலுள்ள பனியன் கம்பெனிக்கு ரூ.20,000 - க்கு விற்ற தாயின் அவலநிலை கண்டு திருவாரூர் மாவட்டம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

விசாரணை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் - தனலட்சுமி தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். இந்த மூன்று குழந்தைகளும் குடவாசலில் உள்ள மகாலட்சுமி மாணிக்கம் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் 5, 6 மற்றும் 3 ம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளியான காளியப்பனின் மனைவி தனலட்சுமிக்கும் கேட்கும் திறன் குறைவு என்கிறார்கள். தென்னங்கீற்று முடையும் சொற்ப வருமானத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற நகரங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்குக் குழந்தைத் தொழிலாளர்களை அனுப்பும் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சகுந்தலா, கனகம் என்ற பெண்கள் காளியப்பன் குடும்பத்தினரை அணுகியிருக்கிறார்கள்.``பொம்பளப் புள்ளைங்களைப் படிக்க வைச்சி என்னத்த சாதிக்கப் போற? முடியாத புருஷனை வச்சிக்கிட்டு எப்படி இவர்களை வளர்ப்ப? இப்பவே பனியன் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பினா, ஒரு தொழிலைக் கத்துக்கும். மூணு வேளை நல்ல சாப்பாடும், தங்கும் இடமும் கொடுத்து, பெத்த பொண்ணுபோல பார்த்துப்பாங்க.

விசாரணை

உரிய காலத்துல அவுங்களே கல்யாணமும் பண்ணிக் கொடுத்துடுவாங்க. ரெண்டு பொண்ணுங்களை அனுப்பி வை. ஒரு பொண்ணுக்கு ரூ.10,000 வீதம் ரூ.20,000 வாங்கித் தாறோம்" என்று ஆசை வார்த்தைகள் பேசியிருக்கிறார்கள். படிப்பறிவில்லாத காது சரியா கேளாத தாய்க்கு சம்மதம் இல்லை. இருப்பினும், பாட்டி விஜயலட்சுமிதான் பணத்தை வாங்கிக் கொண்டு சிறுமிகள் கதறக்கதற கோவைக்கு அவர்களைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.

சிறுமிகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் நாம்கோ ( NAMCO) சேவை நிறுவத்தைச் சேர்ந்த புலவேந்திரனிடம் பேசினோம். ``குழந்தைத் தொழிலாளர்களாக 11 வயதுச் சிறுமிகள் அனுப்பப்பட்ட செய்தி கிடைத்ததுமே எங்கள் களப்பணியாளர்கள் விசாரணை செய்தார்கள். ரூ.20,000 பெற்றுக்கொண்டு, படிப்பைக் கெடுத்து கோவை பனியன் நிறுவனத்திற்கு சிறுமிகள் அனுப்பப்பட்ட விஷயம் உறுதி செய்யப்பட்டது.

அதன்பின் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். குடவாசல் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் புகார் அளிக்கப்பட்டு, கோவையிலிருந்து சிறுமிகளை மீட்க போலீஸ் படை சென்றுள்ளது. குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கம்பெனியினர், புரோக்கர்கள் மற்றும் சிறுமிகளின் குடும்பத்தினர் மீது காவல்துறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் " என்றார்.

Also Read: சிறுத்தையுடன் தனி ஆளாகப் போராடிய 11 வயது சிறுமி! - தம்பியைக் காப்பாற்றிய துணிகர சம்பவம்

குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் ஐய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில்,ரூ.20,000-த்துக்கு விற்கப்பட்ட சிறுமிகள் இருவரும் கோவை அன்னூரை அடுத்த திப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றிலிருந்து போலீஸார் அவர்களை மீட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.