Published:Updated:

"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!" - சங்கவி

"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!" - சங்கவி
"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!" - சங்கவி

"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!" - சங்கவி

"என் பூர்விகம் மைசூர். பேமிலி, கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. என் பேமிலி மெம்பர்ஸ் சிலபேர் கன்னட சினிமாவுல இருந்தாங்க. அதனால, சின்ன வயசுல இருந்தே சினிமாமேல ஆர்வம் வந்துடுச்சு. ஸ்கூல் படிக்கும்போது எக்ஸாம் லீவ்ல நானும், அம்மாவும் ஒரு பேமிலி ஃபங்கஷனுக்காக சென்னை வந்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில என்னைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ் சார், அவரோட படத்துல நடிக்க என்னைக் கேட்டார். அப்போ எனக்கு சுத்தமா தமிழ் பேசத் தெரியாது. எங்க அம்மாவோ, பாக்யராஜ் சாரிடம், 'இவங்க அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்'னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட கேட்டப்போ, 'இல்லை, பொண்ணு படிக்கணும். இப்போ நடிப்பெல்லாம் வேணாம்'னு சொல்லிட்டார். ஆனா, எனக்கு பாக்யராஜ் சார் அப்ரோச் பண்ண விதம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனாலேயே, 'நான் கண்டிப்பா உங்க படத்துல நடிக்கிறேன்'னு சொல்லிட்டு வந்தேன். ஆனா, சில காரணங்களால நடிக்க முடியாமப் போச்சு. என் கேரக்டரில் மீனா நடிச்சிருந்தாங்க. அந்தப் படம்தான், 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி'!" - இன்ட்ரஸ்டிங் இன்ட்ரோவுடன் பேட்டியைத் தொடங்குகிறார், நடிகை சங்கவி.  

பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை விட்டு விலகியிருந்தவர், சமுத்திரக்கனியுடன் 'கொளஞ்சி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். 

"லீவு முடிந்து மைசூர் போனதுக்கு அப்புறம் அம்மாகிட்ட கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். கூடவே, டான்ஸ் ஆடவும் கத்துக்கிட்டேன். அடுத்த விடுமுறை வரும்போது பாக்யராஜ் சாரை மீட் பண்னேன். ஆனா, அப்போ அவரோட படம் கொஞ்சம் தள்ளிப்போயிருந்தது. அந்த சமயத்துல எனக்குக் கிடைச்ச வாய்ப்புதான், அஜித் நடிச்ச 'அமராவதி'. தமிழில் எனக்கும் அஜித்துக்கும் இது முதல் படம். அந்த நேரத்துல அஜித் தெலுங்குப் படங்கள்லதான் நடிச்சுக்கிட்டு இருந்தார். 'அமராவதி' படத்தோட ஷூட்டிங் ஊட்டியில நடந்துச்சு. டைரக்டர் செல்வா சாருக்கு அது ரெண்டாவது படம். ஷூட்டிங்ல இருந்த பலரும் சின்னப் பசங்கதான். ஆனா, சூப்பரா வொர்க் பண்ணுவாங்க.  

'அமராவதி' படத்துக்கு அப்புறம் எனக்கு உடனே 'ரசிகன்' பட வாய்ப்பு வந்துருச்சு. அதுல ஹீரோ, விஜய். எஸ்.ஏ.சி சார் டைரக்ட் பண்ண படம். 'அமராவதி' படத்தைப் பார்த்துட்டு என்னை இந்தப் படத்துல கிளாமர் ரோலில் நடிக்கவைக்க எஸ்.ஏ.சி சார் ரொம்பவே யோசிச்சார். ரொம்ப பயந்துதான், என்னை இந்தப் படத்துல நடிக்க வெச்சார். படம் சூப்பர் ஹிட்.  'இனி இந்தப் பொண்ணு கிளாமர் கேரக்டருக்குத்தான் செட் ஆகும்'னு நிறைய விஜய் படங்கள்ல என்னைக் கமிட் பண்ணாங்க. 'பொற்காலம்' படத்துக்குப் பிறகுதான், மறுபடியும் ஹோம்லி பொண்ணா ஆடியன்ஸ்கிட்ட ரிஜிஸ்டர் ஆனேன். விஜய், அஜித் ரெண்டுபேரும் நல்ல உழைப்பாளிகள். அந்த டைம்ல இருந்த எல்லோருமே, ரெண்டுபேரும் இந்த உயரத்துக்கு வருவாங்கனு எதிர்பார்த்தாங்க. சில சமயம் நடிகர், நடிகைகளின் ரீயூனியன் நடக்கும்போது விஜய்யைப் பார்ப்பேன். ஆனா, அஜித்தைப் பார்த்தே பல வருடமாச்சு!. 

'நாட்டாமை', 'முத்துக்குளிக்க வாரீகளா' ரெண்டுமே கே.எஸ்.ரவிக்குமார் சார் படம். இந்தப் படங்கள்ல சேரன் சார் இணை இயக்குநர். அந்த நட்புனாலதான்,  அவர் டைரக்டர் ஆனதுக்குப் பிறகு 'பொற்காலம்' படத்துல என்னை நடிக்க வெச்சார். என் கேரக்டருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. ஆனா, இந்தப் படத்துல நான் கமிட் ஆனப்போ, 'கிளாமர் கேரக்டர்ஸ் பண்ணும்போது, திடீர்னு ஹோம்லியா நடிக்காதே'னு பலபேர் கமெண்ட்ஸ் பண்ணாங்க. அவங்களுக்கெல்லாம் படம் ரிலீஸாகி, என் கேரக்டரைப் பார்க்கும்போது ஆச்சர்யம்!

தமிழில் நடிச்சுக்கிட்டு இருக்கும்போதே, தெலுங்கிலும் நிறைய படங்கள்ல நடிச்சேன். தமிழில் நான் மிஸ் பண்ண சில நல்ல படங்களைத் தெலுங்கில் நடிச்சேன். 'பிதாமகன்' படத்துல சங்கீதா கேரக்டரை தெலுங்குல நான்தான் நடிச்சேன். பிறகு, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குற வாய்ப்பு கிடைச்சது. இப்போ, 'கொளஞ்சி' படத்தின் மூலமா தமிழ் சினிமாவுல ரீ-என்ட்ரி கொடுத்திருக்கேன். இந்தப் படத்தோட தயாரிப்பாளர் நவீன், சென்னையில என் வீட்டுக்குப் பக்கத்து வீடு. 'படத்துல நடிக்கிறீங்களா'னு கேட்டார், கதை சொன்னார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. கமர்ஷியலா இந்தப் படம் ஹிட் அடிக்குமானு தெரியாது. ஆனா, ஆடியன்ஸூக்குப் பிடிச்ச 'நல்ல' படமா நிச்சயம் இருக்கும். இந்தமாதிரிப் படங்கள்ல நடிக்கிறதுக்காகத்தான், இத்தனைநாள் நான் வெயிட் பண்ணேன். தவிர, என் படங்களுக்கு நான் மோஸ்ட்லி டப்பிங் கொடுக்கமாட்டேன். 'பஞ்சதந்திரம்' படத்துக்குப் பிறகு 'கொளஞ்சி'க்குத்தான் டப்பிங் கொடுத்திருக்கேன். டப்பிங் பேசுறதுக்கு சமுத்திரக்கனி சார் ரொம்ப உதவியா இருந்தார்." என்றவரிடம், கல்யாணக் கதை கேட்டோம். சில வரிகளில் ரீ-வைண்ட் செய்தார், சங்கவி.

''எனக்குக் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருடம் ஆச்சுங்க. என் கணவருக்குத் தாய்மொழி, தமிழ். ஆனா, பெங்களூர்ல செட்டில் ஆயிட்டார். அதனாலேயே, நானும் பெங்களூர் வந்துட்டேன். அழகான, அன்பான கணவர்!" 
 

அடுத்த கட்டுரைக்கு