Published:Updated:

`பேச்சிலரை'த் தொடர்ந்து புதுப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்!’ - ஜி.வி-யின் அடுத்தடுத்த அப்டேட்ஸ்

ஏவி.எம் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்ற இந்தப் படத்தின் பூஜையில், இயக்குநர்கள் வெற்றிமாறன், எலன், சுப்பிரமணிய சிவா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

GV Prakash's next untitled film kicks in
GV Prakash's next untitled film kicks in

அடுத்தடுத்த படங்களின் அறிவுப்பு என ஜி.வி.பிரகாஷின் கைவசம் எக்கச்சக்க படங்கள் இருக்கின்றன. கடந்த புதன் அன்று அவர் நடிப்பில் உருவாகிவரும் `பேச்சிலர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்று அடுத்த படத்துக்கான பூஜையும் ஆரம்பிக்கப்பட்டது.

`பேச்சிலரை'த் தொடர்ந்து புதுப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்!’ - ஜி.வி-யின் அடுத்தடுத்த அப்டேட்ஸ்

கே புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நான்காவது படமான இதற்கு இன்னமும் பெயரிடப்படவில்லை. ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் `வெற்றிவேல்', `96', `பிகில்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வர்ஷா பொல்லம்மா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் `வாகை' சந்திரசேகர், மகேஷ்வரி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்குகிறார். ஏவி.எம் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்ற இந்தப் படத்தின் பூஜையில், இயக்குநர்கள் வெற்றிமாறன், எலன், சுப்பிரமணிய சிவா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

`பேச்சிலரை'த் தொடர்ந்து புதுப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்!’ - ஜி.வி-யின் அடுத்தடுத்த அப்டேட்ஸ்

படம் குறித்து நம்மிடம் பேசிய இயக்குநர் மதிமாறன், ``இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும். ஜி.வி. பிரகாஷ் இதுவரை பெரிதும் நடித்திடாத வகையில் இந்தப் படத்தின் கதை அமைந்திருக்கும். பெரிதாக வணிக சமரசங்கள் எதுவும் செய்யாமல் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது" எனக் கூறினார்.