Published:Updated:

`ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக்கில் விஜய் சேதுபதியைத் தொடர்ந்து யோகி பாபு?

டாம் ஹேங்ஸ் நடிப்பில் ஹாலிவுட்டில் வெளியான படம், `ஃபாரஸ்ட் கம்ப்'. இப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் அமீர் கான் நடிக்கிறார். தற்போது, அவருடன் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்களின் தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளது, படக்குழு. 

விஜய் சேதுபதி - யோகி பாபு
விஜய் சேதுபதி - யோகி பாபு

ராபர்ட் ஸெம்மிக்கிஸ் இயக்கத்தில், டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் 1994ல் வெளியான படம், `ஃபாரஸ்ட் கம்ப்'. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும், படம் மாபெறும் வெற்றிபெற்றது. அந்தக் காலத்திலேயே பட்ஜெட்டைவிட 10 மடங்குக்கு மேல் வசூலை வாரிக்குவித்த படம் அது. தற்போது, இதன் பாலிவுட் ரீமேக்கில் அமீர் கான் நடிக்கவிருக்கிறார். ரொம்பவே சென்சிட்டிவ்வான படமென்பதால், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்துவருகிறது, படக்குழு.

யோகி பாபு
யோகி பாபு

இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் `சங்கத் தமிழன்' ஷூட்டிங், காரைக்குடியில் நடந்துவந்த போது அமீர் கான், சேதுவை நேரில் சந்தித்துப் பேசினார். இதுவரை, அதிகாரபூர்வ செய்திகள் ஏதும் வரவில்லையென்றாலும், ஒரிஜினல் வெர்ஷனின் பப்பா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடும் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தற்போது யோகி பாபுவும் நடிக்கலாம் எனக் கூறப்பட்டுவருகிறது. கோலிவுட்டில் உச்சபட்ச பிஸியாக இயங்கி வரும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, டஜன் கணக்கில் தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார்.

`அப்போ நயன்தாரா ; இப்போ அஞ்சலி' - யோகிபாபு ரொமான்ஸ்!

தற்போது, `ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் பாலிவுட் ரீமேக்கில் நடித்தால், இதுவே அவருக்கு பாலிவுட்டின் முதல் படமாக இருக்கும். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.