Published:Updated:

``பாம்பு வருதுனு சொல்றவன் வாயை மூடுற மாதிரிதான் `ஜிப்ஸி' இப்போ போயிட்டிருக்கு!" - குரு சோமசுந்தரம்

குரு சோமசுந்தரம்
குரு சோமசுந்தரம்

`ஆரண்ய காண்டம்', `ஜிகர்தண்டா', `ஜோக்கர்', `பேட்ட' எனப் பல படங்களில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கான இடத்தைப் பிடித்த குரு சோமசுந்தரம், இப்போது வெப் சீரிஸ் பக்கமும் களமிறங்கியிருக்கிறார். இது தொடர்பாக அவரோடு உரையாடினோம்.

``எல்லரையும் மாதிரி படிச்சு முடிச்சிட்டு, நல்ல சம்பளத்துல வேலைக்குப் போகணும்னுதான் ஆசைப்பட்டேன். அப்படி டிப்ளோமா முடிச்சிட்டு வேலை, அப்பார்ட்மென்ட்னு ஓடிக்கிட்டிருந்த சமயத்துலதான் சினிமாவுக்குள்ளே நுழைஞ்சேன். உள்ளே வந்து கிட்டத்தட்ட 15 படங்களுக்கும் மேல நடிச்சாச்சு. இந்த வருஷம் நான் நடிச்சிருக்கிற `இந்தியன் 2' மாதிரியான முக்கியமான படங்களும், 'டாப்லெஸ்'னு ஒரு வெப் சீரிஸும் வெளிவர இருக்கு" என்கிற குரு சோமசுந்தரத்தின் குரலில் உற்சாகம்.

குரு சோமசுந்தரம்
குரு சோமசுந்தரம்

கூத்து பட்டறையின் வார்ப்பு. `ஆரண்ய காண்டம்', `ஜிகர்தண்டா', `ஜோக்கர்', `பேட்ட' எனப் பல படங்களில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கான இடத்தைப் பிடித்தவர், இப்போது வெப் சீரிஸ் பக்கமும் களமிறங்கியிருக்கிறார்.

``தியேட்டர் - சினிமா - வெப்சீரிஸ்... எப்படி இருக்கு இந்தப் பயணம்?"

குரு சோமசுந்தரம்
குரு சோமசுந்தரம்

``எந்த ஒரு நோக்கமும் இல்லாமதான் நடிப்புக்குள்ளே வந்தேன். முதல்ல தியேட்டர் ஆர்டிஸ்ட்டா வந்தப்ப, சினிமாவே வேண்டாம், தியேட்டர் சம்பந்தமான வேலைகளைப் பார்ப்போம்கிற ஐடியாவுலதான் இருந்தேன். அப்புறம் சினிமாவுக்குள்ள வந்ததும், இங்கயும் நமக்கான வெளி இருக்குங்கிறதை உணர்ந்து நடிச்சுகிட்டிருக்கேன்.

அதே மாதிரிதான் வெப்சீரிஸும். நிறைய இளைஞர்களும் இப்போ வெப் சீரிஸ் பக்கம் வர ஆரம்பிச்சிருக்காங்க. தியேட்டர்ல இருந்தப்பவே நிறைய இளைஞர்கள்கூட சேர்ந்து வெப் சீரிஸ் வேலைகளைப் பார்த்திருக்கேன். அதனால, வெப் சீரிஸும் எனக்குப் புதுக் களம் இல்ல. இங்க வேலை பார்க்கிறதும் பிடிச்சிருக்கு."

``சினிமாவுல நெருக்கமான நண்பர்கள்?"

`` 'ஆடுகளம்' கிஷோர் எனக்கு ரொம்ப நெருக்கம். `தூங்கா வனம்'ல நடிக்கும்போதுதான் எங்களோட நட்பு வலுவாச்சு. அதே மாதிரி தியாகராஜன் குமாரராஜாவும் நானும் நல்ல நண்பர்கள். அவரோட `சூப்பர் டீலக்ஸ்' படத்துல மிஷ்கின் சார் நடிச்சிருந்த ரோலுக்கு என்னைத்தான் முதல்ல கேட்டிருந்தார். நான் அப்போ பிஸியா இருந்ததால நடிக்க முடியாமப் போயிடுச்சு. ஆனா, தியாகராஜன் குமாரராஜா `சூப்பர் டீலக்ஸ்' படத்துக்கு முன்னாடி வேற ஒரு கதைதான் ரெடி பண்ணியிருந்தார். அந்தக் கதைக்கான வேலைகள் தொடங்கும்போது நான் அதுல கண்டிப்பா நடிப்பேன்.

அதே மாதிரி, சினிமாவுல எனக்கு முக்கியமான நண்பர்கள் லிஸ்ட்ல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்க்கும் முக்கியமான இடம் இருக்கு. எல்லாரோட வாழ்க்கையிலையும் ஏதாவது ஒரு சம்பவம் அவங்க அடுத்தகட்டத்துக்குப் போறதுக்கான மைல்கல்லா இருக்கும். அதுல எனக்கு முதல் மைல்கல் `ஆரண்ய காண்டம்'னா, `ஜிகர்தண்டா'தான் ரெண்டாவது மைல்கல். அதை உருவாக்கித் தந்தவர் கார்த்திக் சுப்பராஜ். அந்தப் படத்துல என்னோட கேரக்டர் வர்றது என்னவோ 15 நிமிஷம்தான். ஆனா, செகண்டு ஹாஃப்ல அதுதான் கதையைத் தூக்கிட்டுப் போகும். அந்த அளவுக்கு வலுவான கதாபாத்திரம்."

`` `ஜிகர்தண்டா', `பேட்ட' பயணத்துல என்ன வித்தியாசங்கள் கார்த்திக் சுப்பராஜ்கிட்ட கவனிச்சீங்க?"

கார்த்திக் சுப்பராஜ்
கார்த்திக் சுப்பராஜ்

``நானும் கார்த்திக் சுப்பராஜும் ரஜினி சாரோட வெறித்தனமான ரசிகர்கள். அதுவும் அவர், `தலைவர் தலைவர்'ன்னே இருப்பார். அப்படி இருக்கும்போது நாங்க ரெண்டு பேருமே ரஜினி சார்கூட வொர்க் பண்ணது ரொம்பவே சந்தோஷம்தான். `பேட்ட 2' சாத்தியமாகும்போது, கண்டிப்பா அதுல நானும் இருப்பேன்."

`` `ஜோக்கர்' படத்தை இந்தியில ரீமேக் பண்ணா நவாஸுதின் சித்திக் உங்களோட கதாபாத்திரத்துல நடிப்பேன்னு சொல்லியிருந்தாரே?"

நவாஸுதின் சித்திக்
நவாஸுதின் சித்திக்

``இயக்குநர் ராஜுமுருகன், நவாஸுதின் சித்திக்கைச் சந்திச்சிருக்கார். `ஜோக்கர்' படத்தை இந்தியில பண்றதுக்கான வாய்ப்புகள் இருக்கிறதா சொன்னார். நவாஸுதின்கூட நான் `பேட்ட'யில நடிச்சிருக்கேன். தவிர, அவரும் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்தான்."

``ராஜுமுருகன் `ஜிப்ஸி' பத்தி என்ன சொன்னார்?"

இயகுநர் ராஜுமுருகன்
இயகுநர் ராஜுமுருகன்

``ராஜுமுருகனும் எனக்கு முக்கியமான நபர். ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் அவரோட பேசினேன். அடுத்த படத்துக்கான வேலைகள் உத்தேசமாகியிருக்கிறதா சொன்னார். நானும் நிறைய கமர்ஷியல் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிட்டேன். அதனால அவரைச் சந்திக்க முடியாம போயிடுச்சு. `ஜிப்ஸி' படத்தோட சென்சார் வேலைகள் போயிட்டிருக்கதா சொன்னார். மத்திய அரசுக்கு எதிரான காட்சிகள் இருக்கிறதால இந்தப் படம் வெளி வர்றதுக்கு தாமதமாகிட்டிருக்கு. இந்த மாதிரி கருத்து சுதந்திரத்தைத் தடை செய்யுறது சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. இதைப் பார்க்கும்போது, `கருத்து சுதந்திரத்துல கைவைக்கக் கூடாது'கிற `ஜோக்கர்' டயலாக்தான் ஞாபகம் வருது.

பாம்பு வருதுனு பார்த்தவன் சொன்னாதான், அடுத்தவன் உஷாரா இருக்க முடியும். சொல்றவனைப் பேசக்கூடாதுனு அடக்கினா, வந்த பின்னாடி என்ன பண்ண முடியும். நடக்க இருக்கிறதைச் சொன்னாதானே மக்களுக்கு விழிப்புணர்வு வரும். அதையே தடை பண்றது சரியான விஷயம் இல்லை."

``பிடிச்ச நடிகர்கள்?"

பிரபுதேவா
பிரபுதேவா

``நாகேஷ், சாவித்திரியம்மா, ஷாருக்கான், பிரபுதேவா இவங்களை எல்லாம் பிடிக்கும். பிரபுதேவாவை ஏன் பிடிக்கும்னா நடிப்பு, நடனம், சண்டைன்னு எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியும் ரசிக்கும்படியும் பண்ணுவார். அதேமாதிரி, பிடிச்ச இசையமைப்பாளர்னா ஷான் ரோல்டன்.''

`` `டாப்லெஸ்' வெப்சீரிஸ் எந்த அளவுக்கு உங்க கரியர்ல முக்கியமானது?"

'டாப்லெஸ்'
'டாப்லெஸ்'
வெப்சீரிஸ்

``எனக்கும் சரி, இந்த சீரிஸ்ல நடிச்சிருக்க இளைஞர்களுக்கும் சரி, `டாப்லெஸ்' ரொம்பவே முக்கியமான ஒரு விஷயம். அவங்க நம்பிக்கைக்குப் பாத்திரமா, அவங்க கேட்ட ஒரு விஷயத்தை பிடிக்கிற அளவுக்கு பண்ணிக் கொடுத்ததுக்காக சந்தோஷப்படுறேன்."

``இப்போ சினிமாவுல வளர்ந்து வரும் இயக்குநர்களைக் கவனிக்கிறீங்களா?"

'மாநகரம்'
'மாநகரம்'

``கண்டிப்பா. லோகேஷ் கனகராஜ், கார்த்திக் நரேன், அதியன் ஆதிரை, மாரிசெல்வராஜ்னு எல்லோரும் அவ்வளவு நம்பிக்கையான படங்களைத் தந்துகிட்டு இருக்காங்க. லோகேஷ் கனகராஜ் எடுத்திருந்த `மாநகரம்'ல படத்துல சார்லி நடிச்ச கேரக்டர் முதல்ல எனக்குதான் வந்துச்சு. அந்தச் சமயத்துல என்னால நடிக்க முடியாம போயிடுச்சு. இந்த இயக்குநர்கள் எல்லாம் அடுத்து வரப்போறவங்களுக்கு ஒரு பெரிய கனவா, வித்தியாசமான பாதைகளைக் காட்டுறவங்களா இருக்காங்க."

``அடுத்தடுத்த படங்கள்?"

குரு சோமசுந்தரம்
குரு சோமசுந்தரம்

``சீனு ராமசாமி இயக்கத்துல விஜய்சேதுபதிகூட நடிச்ச `மாமனிதன்', `இது வேதாளம் சொல்லும் கதை', ஜிவி பிரகாஷுக்கு வில்லனா ஒரு படம், சசிகுமார் படத்துல வில்லன், அடுத்து மலையாளத்துல டொவினா தாமஸுக்கு வில்லனா ஒரு படம் நடிச்சிருக்கேன்."

அடுத்த கட்டுரைக்கு