Published:Updated:

வெரைட்டி விஜய்... க்யூட் தெறி பேபி... `சத்ரியன்' கதையில் ஒரு ஃபீல் குட் விஜய் படம்! #4YearsofTheri

2016-ல் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன படம்தான் `தெறி.' இந்தப் படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடம் ஆகியிருக்கும் நிலையில் #4YearsOfATBBTheri என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டடித்து வருகின்றனர். நாமும் நம் பங்குக்கு தெறி குறித்து இரு அலசு அலசுவோம்.

ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு தீபாவளி, பொங்கலுக்குப் பிறகு மோஸ்ட் வான்டட் ரிலீஸ் தேதி. தமிழ்ப் புத்தாண்டு அன்று படத்தை ரிலீஸ் செய்தால், குடும்பங்களைக் கவரும் படமாக இருப்பின், மே கடைசி வாரம் வரைக்கும் படத்திற்கு பெரிய லாங் ரன் கிடைத்துவிடும். இந்த மாதிரியான சம்மரை குறிவைத்து 2016-ல் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன படம்தான் 'தெறி.' இந்தப் படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடம் ஆகியிருக்கும் நிலையில் #4YearsOfATBBTheri என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டடித்து வருகின்றனர். நாமும் நம் பங்குக்கு தெறி குறித்து ஒரு அலசு அலசுவோம்.

அட்லியின் முதல் படமான `ராஜா ராணி' வெளியாகி வெற்றி பெற்றிருந்தாலும் அந்தப் படம் மணிரத்னத்தின் `மெளனராகம்' சாயலில் இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. 2-வது படமாக அட்லி விஜய்யுடன் இணைந்து ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே இந்தப் படமும் விஜயகாந்த் நடித்த `சத்ரியன்' படத்தின் தழுவல் எனப் பேச்சு அடிபட்டது. படம் வெளியான பிறகு `தெறி'யும் மணிரத்னத்தின் (கதை) `சத்ரியன்' காப்பிகேட் என விமர்சிக்கப்பட்டது. உண்மையில் `சத்ரியனு'க்கும் `தெறி'க்கும் தொடர்பிருக்கிறதா என்றால் நிறையவே இருக்கிறது.

நைனிகா
நைனிகா
தெறி

`ரத்தத்தைப் பத்தி உனக்கென்ன தெரியும்... உன் ரத்தத்தை நீயே பாத்திருக்கியா... உன் கண்ணு முன்னாடி உங்க அம்மா சாகுறதைப் பாத்திருக்கியா... சாகும்போது அவங்க அலறல் எப்படி இருந்ததுனு தெரியுமா உனக்கு... எனக்குத் தெரியும், நான் கேட்டிருக்கேன். இன்னும் என் காதுல அது கேட்டுகிட்டு இருக்கு..!' - போலீஸ் ஆபிசர் பன்னீர்செல்வம் பேசும் இந்த வசனம்தான் சத்ரியன் - தெறி என்ற இரண்டு பழிவாங்கல் ஸ்டோரிகளின் ஒன்லைன்.

கடமை தவறாத ஒரு போலீஸ் அதிகாரி, அரசியல்வாதி வில்லன் வாழ்க்கையில் தலையிடுகிறார், அதன்பிறகு அந்த வில்லன் போலீஸ் ஹீரோவின் வாழ்க்கையில் தலையிடுகிறார், ஹீரோவுக்கு சில இழப்புகள், தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை, மீண்டும் வில்லன் என்ட்ரி, வழக்கமான ஒரு பழிவாங்கும் கிளைமாக்ஸ்... இப்படித்தான் இரு படங்களின் ஸ்டோரியும் ட்ராவல் ஆகும்.

அங்கே அசிஸ்டன்ட் கமிஷனர் பன்னீர்செல்வம் இங்கே விஜய்குமார் ஐபிஎஸ். ரேவதி - சமந்தா, பானுப்ரியா - எமிஜாக்சன், விஜயக்குமார் - பிரபு.

அருமைநாயகம் - மகேந்திரன், இரண்டு குட்டீஸ்கள் - நைனிகா என கதாபாத்திரங்களும் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

போலீஸ் ஸ்டேஷனில் ஜோசஃப் குருவிலா கையெழுத்திட்டு பழைய ட்ரெயினிங் கேம்ப் நண்பரிடம் மலையாளத்தில் நீண்ட வசனம் பேசும்போது எமியிடம் ஃப்ளாஷ்பேக்கை சொல்வார் விஜய். இதே மாதிரி சத்ரியனில் பழைய போலீஸ் நண்பருடனான ஒரு காட்சியில் ஃபளாஷ்பேக் பன்னீர்செல்வத்துக்கு பில்டப் ஏற்றி பானுப்ரியாவிடம் கதையை ஓப்பன் செய்திருப்பார் விஜயகாந்த்.

ஏமி ஜாக்சன்
ஏமி ஜாக்சன்
தெறி

அங்கேயும் ரேவதியின் இறப்புக்குப் பிறகு, பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழ போலீஸ் வேலையை விட்டுவிடுவார் பன்னீர் செல்வம். அதேபோல் இங்கு தெறியில் சமந்தா இறப்பு.

சத்ரியனிலும் தன்னுடைய குழந்தைக்கு வில்லன் அருமைநாயகம் மீண்டும் தொந்தரவு கொடுக்கும்போதுதான் விஜயகாந்த் பழைய பன்னீர்செல்வமாக ரிவெனச்க்குப் புறப்படுவார். தெறியிலும் அந்த பஸ் ஆக்சிடன்ட் சீனில் `பேபி' நைனிகா சிக்கிய பிறகுதான் விஜய்குமார் ரிவென்ச்க்குப் புறப்படுவார்.

பன்னீர்செல்வம் - விஜய்குமார் இரண்டு போலீஸ்களின் இன்ட்ரோ ஷாட்கூட ஏறக்குறைய ஒத்துப்போகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு படத்திற்கும் இவ்வளவு ஒற்றுமைகள் இருந்தாலும் சத்ரியனுக்கு இயக்குநர் கே.சுபாஷ் வேறுமாதிரியான ட்ரீட்மென்ட்டை கொடுத்திருப்பார். இங்கே அட்லி அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் கதையை அணுகியிருப்பார்.

`தெறி'யை மொத்தமாக ஒரு ஃபீல்குட் படமாக ஜாலி மூடில் ட்ரீட் செய்திருப்பார் அட்லி. அது வெகுவாக வொர்க் அவுட்டும் ஆகியிருந்தது.

`சுறா'வுக்குப் பிறகு `புலி' படம் விஜய்க்கு பெரிய தோல்விப்படமாக அமைந்ததால் விஜய்யின் கேரியரில் அவருக்கு மிக முக்கிய வெற்றி தேவைப்பட்ட நேரத்தில் வெளியான படம் 'தெறி'.

அட்லி - விஜய்
அட்லி - விஜய்
தெறி

இப்போது `மாநகரம்',`கைதி' படங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்தபோதும் மாஸ்டரின் ஒவ்வொரு போஸ்டர் வெளியான போதும் ரசிகர்கள் மத்தியில் புது ஸ்டைலில் விஜய்யைப் பார்க்கப்போகிறோம் என்ற ரீதியில் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரு புதுவிதமான எதிர்பார்ப்பும் ஆர்வமும் அட்லி 'ராஜா ராணி' என்ற ப்ளாக்பஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய்யுடன் இணைந்தபோதும் இருந்தது.

அந்த எதிர்பார்ப்புகளை சற்றும் ஏமாற்றாத வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே மூன்று கெட்டப்களில் விஜய்யை காட்டி மிரட்டியிருந்தார் அட்லி. விஜய் படங்களிலேயே மாஸ்டருக்கு முன்பாக மிகவித்தியாசமான ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்றால் அது 'தெறி'தான். படத்திலும் விஜய்யை மூன்றுவிதமான கெட்டப்களில் காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பார்.

`தெறி' என்ற டைட்டிலே விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்தான்.

`தலைவா' படத்தின் பாடல்கள் எல்லாம் கேட்டவுடன் பிடிக்கும் ரகம் என்பதால் ஜீவியின் `தெறி' ஆல்பத்திற்கும் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், `தெறி' பாடல்களைக் கேட்கும்போது பெரிய திருப்தியைக் கொடுக்கவில்லை. படத்தில் பாடல்களில் சேர்த்து வைத்ததற்கும் சேர்த்து பின்னணி இசையில் புகுந்து விளையாடியிருப்பார். அந்த இன்டர்வெல் காட்சியில் ஜீவியின் இசையால் தியேட்டரே அதிர்ந்தது. படத்தின் இன்னொரு ஸ்வீட் சர்ப்ரைஸ் பேபி நைனிகா. விஜய் - நைனிகா காம்பினேஷன் காட்சிகள் எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத க்யூட்...க்யூட்...க்யூட்... வின்டேஜ்களாகப் பல காலத்திற்கு நிலைத்து நிற்கும். விஜய்குமார் கேரக்டரை டீசர் ட்ரைலரில் காண்பிக்காமல் குருவிலா கேரக்டரை மட்டும் வைத்து டீசர் வெளியிட்டிருந்தால் தியேட்டரில் விஜய்குமார் கேரக்டருக்கு இன்னும் தெறியான ரெஸ்பான்ஸ் இருந்திருக்கும்.

கதை திரைக்கதை விஷயத்தில் அட்லி மீது விமர்சனம் வைக்கப்பட்டாலும் விஜய்யை எப்படி ஹேண்டில் செய்தால் விஜய்யிடமிருந்து அவரது பெஸ்ட்டை வெளியே கொண்டுவர முடியும் என்ற வித்தையை நன்கு தெரிந்தவர்.

`தெறி'யிலும் அந்த மூன்று விதமான கெட்டப் சேஞ்சும் வேரியேஷனும் செமத்தியாக ஒர்க்அவுட் ஆகியிருந்தது.

விஜய்க்கும் அட்லியுடன் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. அதனால்தான் அட்லியின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களிலும் விஜய்யின் பல வேரியஷன்களைப் பார்க்க முடிகிறது. விஜய் படங்களின் பிசினஸ் எல்லைகளை பெரிதாக்கி கோலிவுட்டின் உச்சபட்ச இடத்திற்கு விஜய் ஏறி நிற்க அட்லியும் ஒரு முக்கிய காரணம். தெறிதான் அதன் தொடக்கப்புள்ளி.

சமந்தா
சமந்தா
தெறி

கடைசியாக அந்த சத்ரியன் மேட்டருக்கு வருவோம், தெறி ரிலீஸ் சமயத்தில் விகடனுக்காக அட்லி அளித்த பேட்டியில் இந்த சத்ரியன் சர்ச்சை குறித்து கேட்டதற்கு,

``ஒரு படத்தின் எமோஷனல் வேல்யூவை கரெக்டா எடுத்துட்டுப் பண்ணோம்னா அது எங்கயோ யாரையோ திருத்துது. தெறியில் தன்னை திருத்திக்கொண்டால் எல்லாரையும் திருத்துவதற்கு சமம் என்பதை சொல்லியிருக்கிறோம். தழுவல் நழுவல்னு சொல்றவங்களுக்கு கோபமா எங்கயும் போயி பதில் சொல்ல முடியாது. அது பார்க்கிறவங்களோட பார்வை. அந்தப் பார்வைக்கு நான் பதில் சொல்ல ஆரம்பிச்சிட்டேன்னா... என் பார்வையை நான் மறக்க ஆரம்பிச்சுடுவேன்’’

தெறி, அட்லீ ஸ்டைலில் வெளியான ஒரு ஃபீல்குட் எமோஷனல் ஆக்ஷன் ஃபிலிம்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு