Published:Updated:

``வடசென்னைதான்... ஆனா கலர் வேற... `சூப்பர் டீலக்ஸ்'ல என்ன பண்ணோம் தெரியுமா?!''- கலரிஸ்ட் பாலாஜி கோபால்

`சூப்பர் டீலக்ஸ்’, `ஆடை’, `அந்தகாரம்’ எனத் தமிழ் சினிமாவின் பல முக்கிய படங்களில் பணியாற்றியவர் கலரிஸ்ட் பாலாஜி கோபால். அவரிடம் கலர் கரெக்‌ஷன்ஸ் தொடங்கி ஓடிடி வளர்ச்சி வரைப் பேசினேன்.

``சென்னையிலதான் பிறந்து வளர்ந்தேன். ஆரம்பத்துல சினிமாக்குள்ள எடிட்டிங் மாதிரியான வெவ்வேற வேலைகள்தான் பண்ணிட்டிருந்தேன். அதுக்குப் பிறகுதான் படங்களுக்கான கலர் கரெக்‌ஷன் வேலைக்குள்ள வந்தேன். விஜய் சேதுபதி நடிச்சு தயாரிச்சிருந்த `ஆரஞ்சு மிட்டாய்'தான் என்னோட முதல் படம். அதுக்குப் பிறகு `சூப்பர் டீலக்ஸ்’, `ஆடை’னு நிறைய படங்கள்ல வேலை பார்த்தேன். இன்னைக்குத் தேதியில, ஓடிடிதான் எதிர்காலம்கிறதால, `குயின்’, `கண்ணாமூச்சி’ மாதிரியான நல்ல வெப்சீரிஸ்கள்லேயும் கவனம் செலுத்தி வொர்க் பண்ணிட்டு இருக்கோம்” எனத் தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டார் கலரிஸ்ட் பாலாஜி கோபால்.

பாலாஜி கோபால்
பாலாஜி கோபால்
சிம்பு கேட்டது எத்தனை கோடி... `அஞ்சாதே-2'வில் அருண் விஜய் வந்தது எப்படி?!

சினிமாவுல கலரிஸ்ட்டோட வேலை என்ன?

ஆரஞ்சு மிட்டாய் -
ஆரஞ்சு மிட்டாய் -

``சினிமாவுல அவுட்டோர் ஷூட்டிங் நாள் முழுக்க நடக்குதுன்னா, காலையில இருந்து சாயங்காலம் வரை கதைக்குத் தேவைப்படுற ஒரே மாதிரியான லைட்டிங் இருக்காது. ஆனா, அதே காட்சியை நீங்க படத்துல பார்க்கும்போது உங்களுக்குப் பெருசா வித்தியாசம் தெரியாது. அதுக்கு முக்கியமான காரணம் கலரிஸ்ட்தான். சவுண்ட் இன்ஜினீயர் எப்படி ஒரு படத்தை ஒலி மூலமா நகர்த்தறாரோ, அதேமாதிரிதான் ஒரு கலரிஸ்ட் படத்தை விஷூவலா ரசிகர்களுக்குக் கொண்டுபோய் சேர்க்குற முக்கியப் பணியாளர்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சூப்பர் டீலக்ஸ்’ டெக்னிக்கலாவும் பாராட்டுகள் பெற்ற படம். அந்தப்படத்துல வேலை பார்த்த அனுபவம் பத்திச் சொல்லுங்க?

சூப்பர் டீலக்ஸ்
சூப்பர் டீலக்ஸ்

`` ’சூப்பர் டீலக்ஸ்’ படம் வடசென்னைல நடக்கற மாதிரியான கதைக்களமா சொல்லியிருந்தாலும், அது முழுக்க முழுக்க ஒரு சர்ரியலிஸ்டிக் உலகமாதான் காட்டிருப்பாங்க. உண்மையான வடசென்னைக்குள்ள வேற ஒரு உலகமா அது இருக்கும். ஒரு கலரிஸ்ட்டா இயக்குநர் எதிர்பார்க்கிறதை நான் கொண்டு வர்றதுக்கு, களத்துல கேமராமேன் நீரவ் ஷாவுடைய உழைப்பு அதிகம். அவர் சரியா அங்க பண்ணதாலதான், விஷூவலா என்னாலயும் Trial and Error பார்த்து சரியானதைக் கொண்டு வர முடிஞ்சது. வழக்கமா ஒரு படத்துக்கு 15-ல இருந்து 20 நாள்களுக்குள்ள வேலையை முடிச்சிடுவேன். ஆனா, இந்தப் படத்துக்கு மட்டும் கிட்டத்தட்ட 9 மாசங்கள் எடுத்துக்கிட்டேன். படத்தோட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா சாரும் அவுட்புட் தரமா இருக்கணும்னு எந்த வித ப்ரெஷரும் கொடுக்கலை. கடைசியில படம் எல்லாராலும் பாராட்டப்பட்டது ரொம்பவே மகிழ்ச்சி.”

லாக்டௌன்னால பல படங்களை நேரடி டிஜிட்டல் ரிலீஸ் செய்யப்போறாங்க. இதை ஆதரிச்சு சமீபத்துல ட்வீட் போட்டு இருந்தீங்களே?

``அடுத்தடுத்து வளர்ச்சி வந்துட்டே இருக்கும்போது அதை நமக்கு எப்படி சாதகமா பயன்படுத்திக்கணும்னுதான் முதல்ல பார்க்கணும். 90-கள்ல சேட்டிலைட் சேனல்கள் வந்தபோது, இது சினிமாவை அழிச்சிடும்னு சொன்னாங்க. ஆனா, அப்பவே நடிகர் கமல்ஹாசன் சார் மட்டும்தான், `இல்லை இது நம்முடைய வளர்ச்சிதான்’னு ஆதரிச்சார். அதுதான் உண்மையும்கூட. நாம என்ன பண்ணாலுமே மாற்றங்கள் வந்துட்டேதான் இருக்கும். இப்படி ஓடுற டிரெயின்ல நாம ஏறிக்கிறதுதான் புத்திசாலித்தனம். இல்லைன்னா நம்ம மட்டும்தான் தனியா இருக்கணும். இதையெல்லாம் விட வருங்காலத்துல மொபைல்தான் எல்லாருக்குமான பெரிய மீடியம்கிறது மறுக்க முடியாத உண்மை. அதுமட்டுமல்லாம, சினிமா பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த துறைங்கிறதால மாற்றத்தை ஏத்துக்குறதுதான் முக்கியம். ஒரு காலத்துல தியேட்டர்கள்ல வர்ற படங்கள் ஹவுஸ்ஃபுல்லா ஓடின கதைகள் எல்லாம் இருக்கு. ஆனா, இன்னைக்குத் தேதியில வீக்கெண்ட் எந்தளவு கூட்டம் இருக்குங்கிறதைத்தான் கவனத்துல வெச்சிக்கணும். இப்ப இருக்க மக்களுக்கு மொபைலும் அதுல இருக்கிற ஓடிடியும்தான் பொழுதுபோக்கு அம்சமா இருக்கு. அதுக்காக இனி தியேட்டர் அவ்வளவுதானானு கேட்டால் நிச்சயமா இல்லை. நிறைய பேர் தியேட்டர் அனுபவத்துக்காக படம் பார்க்க வருவாங்க. அப்ப நாம தியேட்டர்களுக்கு வரவைக்கக்கூடிய படங்களா எடுக்கணும்."

ஓடிடி இன்னிக்கு ஏன் இந்த அளவுக்கு முக்கியமா பார்க்கப்படுது?

Extraction
Extraction

``பரிணாம வளர்ச்சிதான். இன்னைக்கு தேதியில ஓடிடிதான் டாப். ஹாலிவுட்ல `அவதார்’ படம் 200 மில்லியன் டாலர் செலவு பண்ணி எடுத்து வெளியிட்டாங்க. இப்ப கிட்டத்தட்ட 66 டாலர் மில்லியன் டாலர் செலவு பண்ணி நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல்க்காக கிறிஸ்ஹெம்ஸ்வொர்த் நடிச்ச `எக்ஸ்ட்ராக்ட்ஷன்’ மாதிரியான படங்களும் எடுக்குறாங்க. இன்னும் தெளிவா சொல்லணும்னா, நெட்ஃபிளிக்ஸ், ப்ரைம் மாதிரியான ஓடிடி தளங்கள்ல வெளியிடப்படுற ஒரிஜினல்ஸுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தந்துட்டிருக்காங்க. வெளிய இருந்து வாங்குற மற்ற படங்கள் அவங்களுக்கு ஒரு பார்ட்தான். இது உலகம் முழுவதும் நடந்திட்டிருக்கு. இந்த லாக்டௌன் சூழல், ஓடிடிக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்னுதான் சொல்வேன். இதுவரை 10 ஒரிஜினல் கன்டென்ட் எடுத்துட்டிருந்தவங்க, இனி தமிழ் தெலுங்குனு தனித்தனியா 50 ஒரிஜினல்ஸ் எடுப்பாங்க. இதனால, பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்”.

லாக்டௌனுக்குப் பிறகான சினிமா சூழல் எப்படியிருக்கும்?

cinema
cinema

``கண்டிப்பா ஆறுல இருந்து ஏழு மாசங்களுக்குக் கஷ்டமாதான் இருக்கும். ஏன்னா, கொரோனாவோட இந்தச் சூழலைச் சரி செய்ய ஒவ்வொரு தனிமனிதனுக்கும் குறைஞ்சது இரண்டு வருடங்களாவது ஆகும். போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு அனுமதி கொடுத்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நிபந்தனைகளோட வேலை செய்ற நிலைதான் ஏற்படும். மத்தபடி, இயல்பு நிலை திரும்ப கொஞ்ச காலம் ஆகும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு