Published:Updated:

ரஜினி - கமல் - ஶ்ரீப்ரியாவுக்குப் பதில் சிம்பு - துல்கர் - ஸ்ருதி... `அவள் அப்படித்தான் 2.0'?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிம்பு - ஸ்ருதிஹாசன் - துல்கர் சல்மான்
சிம்பு - ஸ்ருதிஹாசன் - துல்கர் சல்மான்

'முந்தானை முடிச்சு' ரீமேக்கைத் தொடர்ந்து 'அவள் அப்படித்தான்' படமும் ரீமேக் ஆகிறதா?

பிடித்த படங்கள், பிடித்த ஆல்பம், பிடித்த புத்தகங்கள் என அடுத்தடுத்த சேலஞ்சுகள் போய்க்கொண்டிருக்கிறன. அப்படியான ஒரு சேலஞ்சில் 'அவள் அப்படித்தான்' படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். இவர் அதர்வா நடித்த 'பானா காத்தாடி', 'செம போத ஆகாதே' படங்களின் இயக்குநர். " 'அவள் அப்படித்தான்' படம் இன்றைய சூழலுக்கும் அப்படியே பொருந்தும். வாய்ப்பு கிடைத்தால் இந்தக் கதையை இப்போதைய சூழலுக்குத் தகுந்தாற்போல் இவ்வுலகத்திற்குக் கொடுப்பேன்" என்று ஸ்ருதிஹாசனை டேக் செய்திருந்தார் பத்ரி. அவரிடம் பேசினேன்.

``பிரபாகரனோடு நாலு மாசம் இருந்தப்ப கறி இட்லி சாப்பிட்டிருக்கீங்களா?'' - ஜான் மகேந்திரன் பதில்

" 'அவள் அப்படித்தான்' எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். எனக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவை நல்லா ஃபாலோ பண்ற எல்லோருடைய ஃபேவரைட் லிஸ்டிலும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தைப் பார்த்த பெங்காலி இயக்குநர் மிருணால் சென், 'ஓ... தமிழ்ல படம் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா?'னு கேட்டாராம். அந்த அளவுக்குப் பக்காவான திரை மொழி இருந்த படம். பல திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குள்ள பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியப் படம் இது. காலத்தை எல்லாம் தாண்டி ஒரு படம் நிக்குதுனா அப்போ எவ்ளோ அட்வான்ஸா எடுத்திருப்பாங்க. 1978-ல வெளியான இந்தப் படம் அப்போ ஒரு வருஷம் தியேட்டர்ல ஓடினதா சொல்வாங்க. இப்போ இருக்கிற சூழலுக்கு அந்தப் படம் சரியா பொருந்தும். அதனால, அந்தப் படத்தைப் பண்ணலாமேனு ஒரு எண்ணம் எனக்குள்ள இருந்துட்டே இருந்தது. பெண்கள்தான் பெண்ணியவாதியா இருக்கணும்னு அவசியமில்லை. ஆணா கூட இருக்கலாம்.

அவள் அப்படித்தான்
அவள் அப்படித்தான்

'அவள் அப்படித்தான்' படத்துல கமல் சார்தான் பெண்ணியவாதி. அந்தப் படத்துல பேசப்பட்ட பல விஷயங்கள் இப்போ வரை நம்ம ஊர்ல இருக்கு. இப்போ இருக்கிற இளைஞர்கள் அந்தப் படத்தைப் பார்த்திருக்கமாட்டாங்க. இப்போ இருக்கிற சமூகத்தை வெச்சு அந்தப் படத்தை மறுபடியும் எடுக்கணும்னு நினைக்கிறேன். அதுக்காக அந்தப் படத்துல வேலை செஞ்ச நிறைய பேர்கிட்ட பேசினேன். அவங்க எல்லோரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஆனா, அந்தப் படத்துடைய உரிமை யார்கிட்ட இருக்குனு தெரியலை. படத்தை எடுத்த ருத்ரையா சாரும் இப்போ இல்லை. அவர் மகள் அமெரிக்காவுல இருக்காங்கன்னு சொல்றாங்க. படத்துக்கான உரிமை யார்கிட்ட இருக்குனு தேடித்தேடி விசாரிச்சுக்கிட்டு இருக்கேன். நிச்சயமா இப்போ படமாக்க வேண்டிய படம் அது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'மீ டூ,' 'காஸ்டிங் கவுச்' பத்திலாம் இப்போ நாம பேசுறோம். ஆனா, மீ டூ பத்தி 42 வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் படத்துல பேசியிருக்காங்க. இந்தக் கதையை இப்போ இருக்கிற சூழலுக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம் மாத்தி எடுக்கணும். ஆனா, அந்தப் படத்துல இருக்கிற வாழ்வியலை மாத்திடக்கூடாது. என்னைப் பொறுத்தவரை, அந்தப் படத்துல ஶ்ரீப்ரியா மேடம் நடிச்ச 'மஞ்சு'ங்கிற கேரக்டர்தான் தமிழ் சினிமாவுல இதுவரைக்கும் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த கதாபாத்திரம். எப்படி அந்தக் காலத்துல ருத்ரையா சார் அப்படி யோசிச்சார்னு தெரியலை. இந்தப் படத்தை எப்படியாவது பண்ணிடணும். யார் இதோட உரிமை வெச்சிருக்காங்கன்னு தெரிய வருதோ உடனே அவங்களைச் சந்திச்சு அந்த உரிமையை வாங்கிடுவேன். என் கரியர்ல இந்தப் படத்தைப் பண்ணியே ஆகணும்னு இருக்கேன்" என்றவரிடம் ஸ்ருதிஹாசனை டேக் செய்தது ஏன் என்று கேட்டேன்.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்

"நான் ஸ்ருதியோட 'ஹலோ சகோ'னு ஒரு டிவி ஷோல வொர்க் பண்ணேன். அப்போ அவங்க எனக்கு ரொம்பப் பழக்கமானாங்க. எங்களுக்குள்ள அதிகம் பேசப்படுற விஷயம் சினிமாதான். தவிர, நான் அதி தீவிர கமல் சார் ரசிகன். அந்த மஞ்சு கேரக்டரை ஸ்ருதி சூப்பரா கொண்டு வருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. நல்லா தமிழ் பேசுறாங்க, என்ன யோசிச்சாலும் தமிழ்லதான் யோசிக்கிறாங்க. அவங்களுக்கும் இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும். 'ஹலோ சகோ' ஷூட்டிங்ல இருக்கும்போது 'இந்தப் படத்தை மறுபடியும் ஒருமுறை பாருங்க'னு சொன்னேன். மறுபடியும் நான் சொன்னதுக்காகப் பார்த்தாங்க.

மறுநாள், 'இந்தப் படத்தைப் பண்ணணும்னு எனக்குள்ள ஒரு ஐடியா இருக்கு. நீங்க இந்த கேரக்டர் பண்ணா நல்லா இருக்கும்'னு சொன்னேன். அவங்களும் ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. ரெண்டு பேரும் இந்தப் படத்தைப் பத்தி அவ்ளோ பேசியிருக்கோம். ரஜினி சார் நடிச்ச கேரக்டர்ல சிம்பு, கமல் சார் நடிச்ச கேரக்டர்ல துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரக்கொண்டா, ஶ்ரீப்ரியா மேடம் நடிச்ச கேரக்டர்ல ஸ்ருதினு யோசிச்சிருக்கேன். இதுதான் என் ஐடியா.

அவள் அப்படித்தான்
அவள் அப்படித்தான்
குண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்... பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா? #AskParthiban

இது ஒரு மொழிக்கான கன்டன்ட் கிடையாது. எந்த மொழியா இருந்தாலும் இது வொர்க் அவுட் ஆகும். மேலே சொன்ன எல்லாம் நடக்கணும்னா யார்கிட்ட இந்தப்படத்தோட உரிமை இருக்குனு தெரியணும். அது கிடைச்சுடுச்சுனா, உடனே அதுல பண்ண நினைக்கிற மாற்றங்களைப் பண்ணிட்டு அந்தந்த ஆர்டிஸ்ட்டை சந்திச்சுப் பேசிடுவேன். அதுவரை காத்திருக்கேன்" என்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு