Published:Updated:

``உண்மையை உண்மையாக எடுக்க இயக்குநர்கள் தேவையில்லை!" - மாரி செல்வராஜ் பேட்டி

எளிய மக்கள் தொடர்ந்து இந்தச் சமூகத்தில் இயங்குவதற்கான பிரச்னைதான் இந்தப் படம். தினமும் பல தேவைகளை மக்கள் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்

'பரியேறும் பெருமாள்' படம் மூலம் உரையாடலுக்கு அழைத்த இயக்குநர் மாரி செல்வராஜ் இப்போது தனுஷுடன் கர்ணனாக வருகிறார். அவருடனான பேட்டி...

''இன்றைய சமூகச்சூழலில் 'கர்ணன்' படம் எதைப் பற்றியதாக இருக்கும் என வெளியே ஒரு பரபரப்பு இருக்கிறதே?''

''இது முழுக்க முழுக்க எளிய மக்களின் வாழ்வியலைப் பேசும் படமாக இருக்கும். ஒரு கிராமம், அங்கிருக்கும் எளிய மக்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் படம்.”

''இப்படிப் பொதுவாகச் சொன்னால் எப்படி... படத்தின் ஒன்லைன் என்ன?''

''எளிய மக்கள் தொடர்ந்து இந்தச் சமூகத்தில் இயங்குவதற்கான பிரச்னைதான் இந்தப் படம். தினமும் பல தேவைகளை மக்கள் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். யாருடைய குரலுக்கு உடனடியாகப் பதில் கிடைக்கிறது, யார் கேட்டால் சீக்கிரம் கிடைக்கிறது, யாருடைய குரல் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது, அப்படிக் கண்டுகொள்ளாமல் விடுவதற்கான காரணம் என்ன... இதெல்லாம் சேர்ந்ததுதான் 'கர்ணன்' படம்.''

``உண்மையை உண்மையாக எடுக்க இயக்குநர்கள் தேவையில்லை!" - மாரி செல்வராஜ் பேட்டி

''90-களில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையப்படுத்தி நீங்கள் இந்தப் படத்தை எடுப்பதாக ஒரு பேச்சிருக்கிறதே?''

''கொடியன்குளம் கலவரம் பற்றிய படமோ, தென் மாவட்டக் கலவரங்கள் பற்றிய படமோ நிச்சயமாக இல்லை என்று உறுதியாகச் சொல்லமுடியும். இது ஒரு புனைவு. இதற்குள் சில உண்மைச் சம்பவங்களும் இருக்கும். உண்மையை உண்மையாக எடுக்க சினிமா இயக்குநர்கள் தேவையில்லை. உண்மையைத் தெரிந்துகொள்ளச் செய்தித்தாள்கள், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் எனப் பத்திரிகைகள் இருக்கின்றன. பல கதைகள் கேட்கிறோம், பல கதைகள் படிக்கிறோம். அதைக்கொண்டு ஒரு புனைவை உருவாக்கிப் படமாக எடுக்கிறோம். அவ்வளவுதான். அப்படிப்பட்ட படம்தான் 'கர்ணன்.' விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2TH8w8W

...சமீபத்தில் நான் பிரான்ஸுக்குப் போயிருந்தபோது அங்கே கறுப்பினத்தவர்கள் 'இது எங்களின் கதை, மொழியை மட்டும் மாற்றி இந்தக் கதையை அப்படியே இங்கேயும் எடுக்கலாம்' என்றார்கள். உலகம் முழுக்க இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை என்னால் உணரமுடிந்தது. எனக்கு இந்தச் சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி இருக்கிறது. நான் அடுத்த தலைமுறைக்காகத்தான் படம் எடுக்கிறேன். அவர்களைத் தவறான வழியில் கொண்டுசெல்லக்கூடிய படங்களை எடுத்துவிடக் கூடாது என்கிற தெளிவு மிகவும் அதிகமாக இருக்கிறது.''

``உண்மையை உண்மையாக எடுக்க இயக்குநர்கள் தேவையில்லை!" - மாரி செல்வராஜ் பேட்டி

'இன்றைய சமூக, அரசியல் சூழல் குறித்து உங்கள் கருத்து என்ன?”

''நான் என் கருத்துகளை என் படத்தில் பதிவுசெய்கிறேன். என் கலையின் வழியாகச் சொல்கிறேன். 'நீங்க ஒரு படம் எடுத்தீங்கள்ல இப்ப பேசுங்க, இங்கவந்து பேசுங்க' என்று கேட்பவர்களிடம் நான் என்ன சொல்வது? ஒரு டாக்டர் ஆபரேஷன் அறையில்தான் ஆபரேஷன் செய்வார். அவரைத் தெருவில் வைத்து ஆபரேஷன் செய்யச் சொன்னால் எப்படி? கலைத்திறனை முக்கியமான ஆயுதமாக நம்புகிறேன். அதன் வழியாக மட்டுமே மக்களுடன் பேச விரும்புறேன்.''

> '' 'கர்ணன்' எப்படி உருவானது?''

> ''இந்தக் கதையைக் கேட்டதும் தனுஷ் என்ன சொன்னார்?''

> ''தனுஷ் எப்படி நடித்திருக்கிறார்?''

> ''படத்தில் வேறு யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?''

> '' 'பரியேறும் பெருமாள்' உரையாடலுக்கு அழைத்தது. ஆனால், கர்ணன் படத்தில் வாள் ஏந்தியிருக்கிறாரே தனுஷ்?''

> ''சமூக அரசியலைத் தாண்டி மாரி செல்வராஜ் ஜாலியான படங்களை எடுப்பாரா?''

- இந்தக் கேள்விகளுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் அளித்த விரிவான பதில்களுடன் முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-director-mari-selvaraj

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு