Published:Updated:

மிஸ்டர் மியாவ்

‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ், ஓ.டி.டி தளத்துக்காக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

பிரீமியம் ஸ்டோரி

* சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் ‘அரண்மனை 3’ படம் ஆரம்பிக்கப்பட்டு, ஜெய்ப்பூரில் ஷூட்டிங் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. ‘அரண்மனை 3’-க்குப் பிறகு சுந்தர்.சி இயக்கும் படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார்.

* வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை துபாயில் எடுக்கவிருக்கிறார்களாம். ஷூட்டிங்குக்கான அனுமதி கிடைத்ததும், துபாய்க்குப் புறப்படத் தயாராக இருக்கிறது படக்குழு. ‘கொரோனா காலத்தில் துபாயில் ஷூட்டிங்கா?’ என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘பெல்பாட்டம்’ படத்துக்காக, கோடம்பாக்கத்தை முந்திக்கொண்டு பாலிவுட் படக்குழு ஏற்கெனவே லண்டன் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்

* ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ், ஓ.டி.டி தளத்துக்காக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தில் நடிக்க பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. பிரியாவின் கைவசம் தற்போது ‘குருதி ஆட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘பொம்மை’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன.

* விஷாலுடன் ஏற்பட்ட மன வருத்தத்தால் ‘துப்பறிவாளன் 2’ படத்திலிருந்து விலகிய இயக்குநர் மிஷ்கின், சிம்புவை வைத்து ஆக்‌ஷன் கதையொன்றை இயக்கவிருக்கிறார். ஹீரோயினாக நடிக்க ஸ்ருதி ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

 ஸ்ருதி ஹாசன் - ராஷ்மிகா மந்தனா
ஸ்ருதி ஹாசன் - ராஷ்மிகா மந்தனா

* தெலுங்கில் டாப் கியரில் பயணித்து வரும் ஹீரோயின், ராஷ்மிகா மந்தனா. இவரின் கைவசம் தெலுங்கில் ‘புஷ்பா’, தமிழில் ‘சுல்தான்’, கன்னடத்தில் ‘பொகரு’ என மொழிக்கொரு படம் உள்ளது. அடுத்து, சமந்தாவுடன் இணைந்து ஹீரோயின் சென்ட்ரிக் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம் ராஷ்மிகா. இதில், இருவருக்கும் அக்கா- தங்கை வேடமாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு