Published:Updated:

மிஸ்டர் மியாவ்

விஜய் சேதுபதியுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, சல்மான் கானுடன் ‘ராதே’ உள்ளிட்ட படங்கள் மேகா ஆகாஷ் கைவசம் உள்ளன

பிரீமியம் ஸ்டோரி

* தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நல்ல மார்கெட் உள்ளவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அமேஸான் தளத்தில் நேரடியாக வெளியான ‘பெண்குயின்’ திரைப்படத்துக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், கீர்த்தி நடித்துள்ள ‘மிஸ் இந்தியா’, ‘குட் லக் சகி’ ஆகிய இரண்டு படங்களையும் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியிட, பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்களாம்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

* விஜய் சேதுபதியுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, சல்மான் கானுடன் ‘ராதே’ உள்ளிட்ட படங்கள் மேகா ஆகாஷ் கைவசம் உள்ளன. இந்நிலையில், காதலை மையமாக வைத்து உருவாகும் ஆந்தாலஜி வெப் சீரிஸில் ஏ.எல்.விஜய் இயக்கும் பகுதியிலும், வேறொரு ஆந்தாலஜி வெப் சீரிஸில் கெளதம் மேனன் இயக்கும் பகுதியிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

* பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான் - கரீனா கபூர் தம்பதிக்கு 2016-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மீண்டும் கருவுற்றிருக்கிறார் கரீனா. இந்தத் தகவலை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட, சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அமீர் கானுடன் கரீனா கபூர் நடித்துவரும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக, 2021-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளிவருகிறது என்பது கொசுறுத் தகவல்.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

* விதவிதமான கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் அள்ளித் தெளித்துவரும் ‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனனுக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டுகின்றனவாம். `கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படத்திலும் அவர் ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள். லேட்டஸ்ட்டாக மாளவிகா வெளியிட்ட ஸ்விம்மிங் பூல் போட்டோவுக்கு இணையத்தில் ஏகபோக வரவேற்பு.

* தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’, துல்கர் சல்மானுடன் ‘ஹே சினாமிகா’ ஆகிய படங்கள் அதிதி ராவ் நடிப்பில் உருவாகிவருகின்றன. அடுத்து, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக லவ் சப்ஜெக்ட்டில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரஷாந்த் இயக்குகிறார். இதற்கு முன்னர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் அதிதி ராவ் இணைந்திருந்தார்; ஹீரோயினாக அல்ல... பாடகியாக! அந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘காத்தோடு காத்தானேன்’ பாடலைப் பாடியிருக்கிறார் அதிதி ராவ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு