Published:Updated:

மிஸ்டர் மியாவ்

தற்போது ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் சந்தானம். ‘ஏ1’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஜான்சனுடன் மீண்டும் இந்தப் படத்தில் சந்தானம் இணைந்திருக்கிறார்.

பிரீமியம் ஸ்டோரி

* கடந்த சில வருடங்களாகவே கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, குறைவான படங்களில் நடித்துவரும் இலியானாவுக்குப் பிடித்த பொழுதுபோக்கு, அவ்வப்போது குடும்பத்துடன் வெகேஷனுக்குச் செல்வதும், அங்கிருந்து பிகினி உடையில் புகைப்படங்களை பதிவிடுவதும்தான். அப்படி சமீபத்தில் அவர் பகிர்ந்த கறுப்பு நிற பிகினி புகைப்படம் வைரலாகிவருகிறது. ‘தி பிக் புல்’, ‘அன்ஃபேர் அண்ட் லவ்லி’ ஆகிய இரண்டு பாலிவுட் படங்களும் அவர் நடிப்பில் தயாராகியிருக்கின்றன.

மிஸ்டர் மியாவ்

* ‘அருவி’ படத்துக்குப் பிறகு சில ஆஃபர்கள் வந்தும் நடிக்காமல் இருந்த அதிதி பாலன், மலையாளத்தில் நிவின் பாலியுடன் ‘படவெட்டு’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. தற்போது, ‘கோல்டு கேஸ்’ என்ற மலையாளப் படத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

மிஸ்டர் மியாவ்

* சந்தானம் நடிப்பில் ‘பிஸ்கோத்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. தற்போது ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் சந்தானம். ‘ஏ1’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஜான்சனுடன் மீண்டும் இந்தப் படத்தில் சந்தானம் இணைந்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘காவியத்தலைவன்’, ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களில் நடித்த அனைகா சோடி நடிக்கவிருக்கிறார்.

* கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’, சிரஞ்சீவியுடன் ‘ஆச்சர்யா’, துல்கர் சல்மானுடன் ‘ஹே சினாமிகா’, இந்தியில் ‘மும்பை சாகா’ ஆகிய படங்கள் காஜல் அகர்வால் வசமுள்ளன. இந்தநிலையில், திருமணம் முடிந்த கையோடு ஒரு புதிய படத்தையும் கமிட் செய்திருக்கிறார். ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ‘டிகே’ இயக்கும் இந்தப் படம், ஹாரர் ஜானரில் உருவாகவிருக்கிறதாம்.

மிஸ்டர் மியாவ்

* ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ என்ற பிரமாண்டப் படம், ராமாயணத்தை மையமாகவைத்து எடுக்கப்படவிருக்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ராவணன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான் நடிக்கிறார். சீதை கேரக்டரில் நடிக்கும் நாயகி யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் பெயர்கள் அந்த லிஸ்ட்டில் இருந்தநிலையில், தற்போது கீர்த்தி சனோனின் பெயரும் இணைந்திருக்கிறதாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு