Published:Updated:

மிஸ்டர் மியாவ்

‘நிழல்’ எனும் மலையாளப் படத்தை முடித்துவிட்டு நயன்தாரா சென்னை வந்திருக்கும் நிலையில், அடுத்த வாரம் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்கிறார்.

பிரீமியம் ஸ்டோரி

* `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜீவா’, ‘காக்கி சட்டை’ எனத் தமிழில் ஸ்ரீதிவ்யா நடித்த படங்களெல்லாம் நன்றாகப் பேசப்பட்டவை. 2017-ல் வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்குப் பிறகு, எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது, கெளதம் கார்த்திக்குக்கு ஜோடியாகப் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். வடசென்னையைக் கதைக்களமாகக்கொண்ட இந்தப் படத்தில் பிசியோதெரப்பிஸ்ட்டாக நடிக்கவிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

* இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருக்கிறார் நடிகை பார்வதி நாயர். இவர் பதிவிடும் அனைத்து போட்டோக்களிலும் கிளாமர் சற்றுத் தூக்கலாக இருக்கும். இவரது நடிப்பில் ‘ஆலம்பனா’ திரைப்படம் மட்டுமே வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது ‘ரூபம்’ என்ற த்ரில்லர் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். ஹீரோயின் சென்ட்ரிக் கதையான இதற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

* ஹனு ராகவாபுடி இயக்கத்தில், தமிழ் - தெலுங்கு - மலையாளம் என ட்ரைலிங்குவலாக உருவாகும் படத்தில், ராணுவ வீரனாக துல்கர் சல்மான் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க, டோலிவுட்டில் தற்போது புகழின் உச்சத்திலிருக்கும் ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே ஆகிய இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது படக்குழு. இருவருமே இதுவரை துல்கருடன் சேர்ந்து நடித்ததில்லை.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

* ‘பலே வெள்ளையத் தேவா’, ‘பிருந்தாவனம்’, ‘கருப்பன்’ ஆகிய படங்களில் நடித்த தான்யா ரவிச்சந்திரனுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருகின்றனவாம். தமிழில் ‘ரெக்கை முளைத்தேன்’ என்ற ஹீரோயின் சென்ட்ரிக் படத்திலும், ஒரு தெலுங்குப் படத்திலும் கமிட்டாகியிருந்தார். இவற்றைத் தொடர்ந்து, சிவாவுக்கு ஜோடியாக ‘சலூன்’ என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

* டிசம்பர் 31-ம் தேதி, கட்சி ஆரம்பிப்பதாக ரஜினி கூறியிருக்கும் நிலையில், முதல் வேலையாக ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்கவிருக்கிறார். வரும் டிசம்பர் 15-ம் தேதி, ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ ஷூட்டிங் ஆரம்பமாகவிருக்கிறது. ‘நிழல்’ எனும் மலையாளப் படத்தை முடித்துவிட்டு நயன்தாரா சென்னை வந்திருக்கும் நிலையில், அடுத்த வாரம் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு