Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மணிரத்னம் தயாரிப்பில், நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கும் ‘நவரசா’ எனும் ஆந்தாலஜியில் கெளதம் மேனன் இயக்கும் பகுதியில் சூர்யா நடிக்கிறார்.

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

* நடிகர் ஜீவன் ஐந்து வருடங்கள் கழித்து நடிக்கும் படம் ‘பாம்பாட்டம்.’ இந்தப் படத்தை ‘செளகார்பேட்டை’ படத்தை இயக்கிய வடிவுடையான் இயக்குகிறார். இதில் யாஷிகா ஆனந்த், ‘டகால்டி’ படத்தில் நடித்த ரித்திகா சென் என இரண்டு ஹீரோயின்கள். தவிர, மல்லிகா ஷெராவத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.l

மிஸ்டர் மியாவ்

* இந்தியில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து ஹிட்டான படம், ‘அந்தாதுன்.’ இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில், ஆயுஷ்மான் நடித்த கேரக்டரில் பிரசாந்த் நடிக்க `பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்குகிறார். இந்தியில் தபு நடித்த கேரக்டரில் தமிழில் சிம்ரன் நடிக்கவிருக்கிறார். 18 வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.

* மணிரத்னம் தயாரிப்பில், நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கும் ‘நவரசா’ எனும் ஆந்தாலஜியில் கெளதம் மேனன் இயக்கும் பகுதியில் சூர்யா நடிக்கிறார். மலையாளத்தில் பல படங்களிலும், தமிழில் ‘பிசாசு’ படத்திலும் நடித்த பிரயாகா மார்ட்டின் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கெளதம் மேனன் இயக்கம், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, சூர்யாவுக்கு ஜோடி எனப் பெரிய புள்ளிகளோடு நடித்திருப்பதால் செம குஷியில் இருக்கிறாராம் பிரயாகா!

மிஸ்டர் மியாவ்

* நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை லோ ஜோன் கிளாமர், மிட் ஜோன் கிளாமர், ஹை ஜோன் கிளாமர் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இதில் ஸ்பெஷல் என்னவென்றால், ஒவ்வொரு புகைப்படத்துக்கும் ஒவ்வொரு தத்துவத்தை கேப்ஷனாகப் பதிவிடுகிறார். இவரது புகைப்படங்களைப் பார்ப்பதற்காகவே இவரது இன்ஸ்டா அக்கவுன்ட்டுக்கு ஃபாலோயர்கள் கூடுகிறார்கள். ‘அரண்மனை 3’, ‘புரவி’, ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ஆகிய படங்களைக் கைவசம்வைத்திருக்கும் சாக்‌ஷி, தொடர்ந்து ஹாட் அண்ட் சில் புகைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்கிவருகிறார்.

மிஸ்டர் மியாவ்

* ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபமாகக்கூட ஒரு ரசிகர், நிவேதாவின் பெயரைக் கையில் டாட்டூவாகப் போட்டுக்கொண்டார். தற்போது அவருக்குத் தமிழில் பிரபுதேவாவுடன் ‘பொன் மாணிக்கவேல்’, தெலுங்கில் ‘தடம்’ படத்தின் ரீமேக்கான ‘ரெட்’ ஆகிய இரண்டு படங்கள் கைவசமுள்ளன. ராணா நடிக்கும் ‘விராடபர்வம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தில் சாய் பல்லவி, பிரியாமணி, நந்திதா தாஸ் எனப் பல நடிகைகள் இருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு