Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஹனிமூனுக்கு மாலத்தீவு ட்ரிப்பில் பிஸியாக இருந்த காஜல் அகர்வால், சிரஞ்சீவியுடனான ‘ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

பிரீமியம் ஸ்டோரி

* ‘இந்தியன் 2’, ‘பொம்மை’, ‘குருதி ஆட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘கசட தபற’ எனப் பல படங்களைக் கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர், தற்போது அசோக் செல்வனுக்கு ஜோடியாக புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி யிருக்கிறார். இதை ‘சதுரம் 2’ படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.

மிஸ்டர் மியாவ்

* ஹனிமூனுக்கு மாலத்தீவு ட்ரிப்பில் பிஸியாக இருந்த காஜல் அகர்வால், சிரஞ்சீவியுடனான ‘ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படப்பிடிப்பு தளத்துக்குத் தம்பதியராக வந்தவர்களை, கேக் வெட்டச் சொல்லியும், மாலை மாற்றவைத்தும் செலிபிரேட் செய்தார் சிரஞ்சீவி. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

மிஸ்டர் மியாவ்

* சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் அஸ்வின் இயக்க, ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, நாயகனாக நடிக்கிறார். ‘அன்பறிவு’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், `சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த காஷ்மீரா நாயகியாக நடிக்கிறார். தவிர நெப்போலியன், விதார்த் உட்பட பெரிய பட்டாளமே படத்தில் நடிக்கிறதாம்.

மிஸ்டர் மியாவ்

* 2014-ல் வெளியான ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தை இயக்கிய அனீஸ், தற்போது அடுத்த படத்தைத் தொடங்கியிருக்கிறார். சசிகுமார், வாணி போஜன், பிந்து மாதவி ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் பெயர், ‘பகைவனுக்கு அருள்வாய்.’

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

* ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய ஃப்ரெட்ரிக், பாலிவுட் படமான ‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கை இயக்குகிறார். ஆயுஷ்மான் குரானா கேரக்டரில் பிரசாந்த், தபு கேரக்டரில் சிம்ரன் என முடிவாகியிருந்தது. இந்தநிலையில், ராதிகா ஆப்தே கேரக்டரில் நடிக்க ரைசா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு