Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பிரியா பவானி சங்கர் மல்ட்டி லிங்குவல் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

பிரீமியம் ஸ்டோரி
  • ஹர்பஜன் சிங், ‘பிக்பாஸ்’ லாஸ்லியா நடிக்கும் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் நடிகர் அர்ஜுன். ஜான் பால்ராஜ் - சாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

  • ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பாலிவுட் நடிகை சோபிதா துலிபலா இந்தப் படத்தில் கமிட்டாகி யிருக்கிறார். இவருக்கு விக்ரமுடன் அதிக காட்சிகள் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

 சோபிதா துலிபலா -  டாப்ஸி
சோபிதா துலிபலா - டாப்ஸி
  • பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் நந்திதா தாஸ், பதினான்கு வருடங்கள் கழித்து தெலுங்குப் படத்தில் நடித்துவருகிறார். வேணு உடுகுலா இயக்கத்தில் ராணா, சாய் பல்லவி நடிக்கும் ‘விரத பர்வம் 1992’ என்ற படம்தான் அது.

  • பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ‘அன்ஹைடு’ என்ற பெயரில் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கியிருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன். அவருடைய இயக்குநர் அவதாரத்தையும் அதில் அவர் பேசிய விஷயத்துக்காகவும் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

  • ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி பாலிவுட்டைக் கலக்கிவரும் டாப்ஸி, தன்னுடைய அடுத்த படத்தை அறிவித்துள்ளார். ‘லூப் லபேட்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காமெடி - த்ரில்லர் படம், ‘ரன் லோலா ரன்’ என்ற ஜெர்மன் படத்தைத் தழுவி எடுக்கப்பட இருக்கிறது. ஆகாஷ் பாட்டியா இயக்கும் இந்தப் படம் ஜனவரி 29, 2021 அன்று வெளியாகவிருக்கிறது. தவிர, ‘தப்பட்’, ‘சபாஷ் மித்து’, ‘ஹசீன் தில்ருபா’ உள்ளிட்ட படங்கள் டாப்ஸி நடிப்பில் வெளியாகக் காத்திருக்கின்றன.

 பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்
  • ‘இந்தியன் 2’ உட்பட தமிழில் பல படங்களை கைவசம் வைத்துள்ள பிரியா பவானி சங்கர், இப்போது மல்ட்டி லிங்குவல் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். ‘அஹம் பிரம்ஹாஸ்மி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாரித்து நடிக்கிறார் தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு. வரும் மார்ச் மாதம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

ம்யூட்

  • காமெடியன் ஹீரோவுக்கு சம்பளம் கொடுப்பதற்காக சில கோடிகளை ஃபைனான்ஷியர் ஒருவரிடம் வாங்கியிருக்கிறார், முக்கிய தயாரிப்பாளர் ஒருவர். அதே ஃபைனான்ஷியரிடம்தான் தனது முந்தைய படத்துக்காக காமெடி நடிகரும் கடன் வாங்கியிருந்தாராம். சம்பளப் பணம் காமெடிக்குப் போய் சேர்ந்த ஒருசில நிமிடங்களிலேயே தன்னுடைய ஆள் ஒருவரை நடிகர் ஆபீஸுக்கு அனுப்பிய ஃபைனான்ஷியர், கடன் தொகையைக் கறாராக வசூலித்துவிட்டாராம். இதனால் ஷாக்காகி இருக்கிறாராம் காமெடி நடிகர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு