Published:Updated:

மிஸ்டர் மியாவ்

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸ் என சமந்தாவின் கைவசம் பல படங்கள் உள்ளன.

பிரீமியம் ஸ்டோரி

‘படைவீரன்’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அம்ரிதா ஐயர், தற்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கிறார். `பிக் பாஸ்’ கவினுடன் ‘லிஃப்ட்’ படத்தை முடித்தவர், இப்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸ் என சமந்தாவின் கைவசம் பல படங்கள் உள்ளன. தற்போது, தெலுங்கில் துஷ்யந்தன் - சகுந்தலா கதாபாத்திரத்தைவைத்து இயக்குநர் குணசேகர் இயக்கும் படத்தில் சகுந்தலாவாக நடிக்கவிருக்கிறார் சமந்தா. துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார். இவர் சமீபமாக வெளியான ‘சுஃபியும் சுஜாதாயும்’ படத்தில் அறிமுகமான நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அந்தாதுன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. தமிழில் பிரசாந்த், தெலுங்கில் நிதின், மலையாளத்தில் ப்ரித்விராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக, அதில் தபு நடித்த கேரக்டரில் நடிப்பது யார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழில் சிம்ரன், தெலுங்கில் தமன்னா ஆகியோர் நடிக்கிறார்கள் என்று வெளியான செய்தியைத் தொடர்ந்து, அதன் மலையாள வெர்ஷனில் மம்தா மோகன்தாஸ் நடிக்கவிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் இவர்தான் நாயகியாக நடிக்கிறார் என ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே எனப் பல ஹீரோயின்கள் பெயர்கள் பேசப்பட்டன. ஆனால், இப்போது பிரியங்கா மோகன்தான் நடிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

உஷ்...

தேர்தல் சமயத்தில் உச்ச நட்சத்திரங்களைச் சந்தித்து, அவர்களைத் தங்களது கட்சிக்கு ஆதரவு தரச் சொல்லிக் கேட்பது வழக்கம். ஆனால், இப்போது வைரல் நாயகர்களைக் கட்சியில் இணையச் சொல்லிக் கேட்டு வருகின்றனராம். அப்படி ‘சித்திர’ நடிகைக்குப் பிறகு, அந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களைக்கொண்ட நடிகரை அரசியலுக்கு இழுக்க முயன்று வருகிறார்களாம். ஆனால் அவரோ “யப்பா... இப்போதான் பட வாய்ப்புகள் தொடர்ந்து வர ஆரம்பிச்சிருக்கு. ஆளை விடுங்க!” என்றபடி மாஸ்க் மாட்டிக்கொண்டு ஓடி ஒளிகிறாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு