Published:Updated:

மிஸ்டர் மியாவ்

‘மீசைய முறுக்கு’ படத்தில், ‘யார் இந்தப் பொண்ணு?’ என்று கேட்கவைத்த ஆத்மிகா, கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்’ படத்தை மிகவும் எதிர்பார்க்கிறாராம்.

பிரீமியம் ஸ்டோரி

`பிக் பாஸ்’ வீட்டுக்குள் குரூப்பிசம் இருக்கிறதோ இல்லையோ, `சேனல், போட்டியாளர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்கிறது’ என்கிற குமுறல் எழத் தொடங்கியிருக்கிறது. நிகழ்ச்சிக்காகப் பேசப்பட்ட சம்பளம் ரேகா உட்பட சிலருக்கு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், வேல்முருகன் உள்ளிட்ட சிலருக்கு நூறு நாள்கள் கழித்தே வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். `இப்படியே போனால் அடுத்த சீஸனுக்கு ஆள் பிடிப்பதே கஷ்டம்ப்பா’ என்கிறார்கள் குழுவினர்!

மிஸ்டர் மியாவ்

`மன்ற நிர்வாகிகளை விஜய் சந்திக்கிறார்’ என்ற செய்தியின் பின்னணியை ஆராய்ந்ததில், விஷயமே வேறு என்று தெரிய வந்திருக்கிறது. ‘விஜய் மக்கள் மன்றம்’ ஆபீஸ் பனையூரில் உள்ளது. அதன் தலைவர் புஸ்ஸி ஆனந்த்துக்கு, அதற்குள்ளேயே வீடு கொடுத்து மன்ற வேலைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் விஜய். மன்றத் தலைவரைப் பார்க்க நிர்வாகிகள் பனையூர் வீட்டுக்குப் போவதும் வருவதுமாக இருக்க, செய்தியோ விஜய் சந்திப்பதாகக் கசிந்திருக்கிறது. ``மற்றபடி விஜய் யாரையுமே சந்திக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புகைப்படம் எடுப்பதற்காக முறையாக அறிவித்துவிட்டு, சந்திப்பது மட்டும்தான்” என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

மிஸ்டர் மியாவ்

‘மீசைய முறுக்கு’ படத்தில், ‘யார் இந்தப் பொண்ணு?’ என்று கேட்கவைத்த ஆத்மிகா, கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்’ படத்தை மிகவும் எதிர்பார்க்கிறாராம். அந்தப் படம் தாமதமானதில் கொஞ்சம் அப்செட் ஆனாலும், இப்போது விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் `கோடியில் ஒருவன்’ படத்தில் பிஸியாகிவிட்டார். ஃபைட் சீன் ஒன்றில், தனக்காக டூப் போட்டவரைப் பார்த்து பிரமித்து, பரிசளித்து அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவரைப் பாராட்டித்தள்ளியிருக்கிறார்!

மிஸ்டர் மியாவ்

செய்தி வாசித்துக்கொண்டிருந்த வரைக்கும் ‘சீரியலா, சான்ஸே இல்லை’ என்றார் பிரியா பவானி சங்கர். பிறகு சீரியலுக்கு வந்ததும், ‘சினிமாப் பக்கம் போற ஐடியால்லாம் சுத்தமா இல்லை’ என்றார். சினிமாவுக்கு வந்த புதிதில் ‘கவர்ச்சியா ச்ச்சீ’ என்றார். இப்போது பொண்ணு போட்டோ ஷூட் பண்ணி வெளியிட்டிருக்கிற புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, `ம்ம்... அடுத்து என்ன ஸ்டேட்மென்ட்டோ’ என அங்கலாய்க் கிறார்கள் ரசிகர்கள்.

மிஸ்டர் மியாவ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு