Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அருண் விஜய் தயாரித்து நடித்திருக்கும் ‘சினம்’ படத்தை இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கி முடித்திருக்கிறார்.

பிரீமியம் ஸ்டோரி

சில தினங்களுக்கு முன்னர் நகைச்சுவை நடிகர் ‘கிங்காங்’, விஜயகாந்தைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். பேசிவிட்டுத் திரும்பியபோது ``அடிக்கடி வந்து போப்பா. எனக்கு இங்கே பேச்சுத் துணைக்கு ஆளே இல்லை. தனியாவே இருக்குறது கொடுமையா இருக்கு” என்றாராம் விஜயகாந்த். ``சரி” என்று தொடர்ந்து இரண்டு முறை போய் சந்தித்து வந்திருக்கிறார் கிங்காங். மூன்றாவது முறை போனபோது, அங்கிருந்த சிலர் ``என்னப்பா, அடிக்கடி இந்தப் பக்கம்?” என்று கேட்டதுடன், கேப்டனைப் பார்ப்பதற்கும் தடை விதித்துவிட்டார்களாம்.

கன்னடத்தில் வெளியான ‘மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில், சிம்புவும் கெளதம் கார்த்திக்கும் நடிக்கத் தொடங்கினர். ஆனால், சில காரணங்களால் படம் நின்றது. தற்போது, ‘பத்து தல’ என்ற பெயரில் மீண்டும் தொடங்கியிருக்கிறது அந்தப் படத்தின் படப்பிடிப்பு. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இதை இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கருக்கு போல்டான கதாபாத்திரம் வைத்திருக்கிறார்களாம். நிச்சயமாக பிரியா பவானி சங்கருக்கு 2021-ல் குறைந்தது ஆறு படங்களாவது வெளியாகும்.

அருண் விஜய் தயாரித்து நடித்திருக்கும் ‘சினம்’ படத்தை இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படம், ஒரு போலீஸ் அதிகாரியின் குடும்ப வாழ்க்கையை அசலாகக் காட்டும் படமாக இருக்கும் என்கிறார்கள். இதில் அருண் விஜய்யின் மனைவியாக, பாலக் லல்வானி நடித்திருக்கிறார். இவர், ‘குப்பத்து ராஜா’, ‘சிக்ஸர்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா

ட்விட்டரில் க்ளாஸாகவும் மாஸாகவும் படங்களை இறக்கி... பலரது பார்வையில்பட்டு, ‘குக் வித் கோமாளி’யில் சமைத்துக் கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா. கோவைக்காரரான இவருக்குப் பட வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என்பது லேட்டஸ்ட் தகவல். `திரௌபதி’ இயக்குநர் மோகன் அடுத்ததாக இயக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில், நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார் தர்ஷா!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

உஷ்...

சமீபத்தில் அப்பாவாக புரொமோஷனாகியிருக்கும் அந்த ‘யோக’ காமெடி நடிகரின் அம்மாவும் தங்கையும் சொந்த ஊருக்கே சென்று செட்டிலாகிவிட்டார்களாம். ``கல்யாணமான பின்னாடி அவரு வீட்ல மாமியார் மருமகள் பஞ்சாயத்துகள் உச்சத்துக்குப் போய்... அது பெரிசாகித்தான் இந்த முடிவுக்கு அவங்க போயிட்டாங்க” என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு