Published:Updated:

மிஸ்டர் மியாவ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படமே இன்னும் வெளிவராத நிலையில், விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் குறித்த செய்திகள் பரபரக்கின்றன

பிரீமியம் ஸ்டோரி

* விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம், ‘நானும் ரௌடிதான்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் முடிந்துவிட்டன. அரசின் அனுமதி கிடைத்ததும் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிற சூழலில், இப்போது சமந்தா இந்தப் படத்தில் நடிப்பது டவுட்டாம். அதனால், வேறு கதாநாயகியைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

* ‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங் மீண்டும் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், இந்த இடைவெளியில் இன்னொரு படத்தை இயக்கும் மூடில் இருக்கிறாராம் இயக்குநர் மணிரத்னம். மிடில் ஏஜ் காதல் கதையான இந்தப் படத்தின் நாயகன் அரவிந்த்சாமி. படத்துக்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படமே இன்னும் வெளிவராத நிலையில், விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் குறித்த செய்திகள் பரபரக்கின்றன. ‘மாஸ்டர்’க்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம்; அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படம்; அதற்கடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் என விஜய் பக்காவாக பிளான் போட்டு வைத்திருப்பதாகச் சொல்கிறது கோடம்பாக்கம்.

சமந்தா - பிரியா பவானி சங்கர்
சமந்தா - பிரியா பவானி சங்கர்

* இந்திப் படவுலகில் இப்போது `சூப்பர் நடிகர்’ எனப் பெயர் எடுத்துவருபவர் ஆயுஷ்மான் குரானா. ‘அந்தாதுன்,’ ‘ஆர்ட்டிக்கிள் 15’ என இவரின் படங்கள் எல்லாம் ஹிட் ஆக, உச்சத்துக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே சூர்யா-ஜோதிகா இருவரும், ‘நாங்கள் ஆயுஷ்மான் குரானாவின் ரசிகர்கள்’ எனச் சொல்ல, செம உற்சாகமாகி ட்வீட்டில் நன்றி சொல்லியிருக்கிறார் ஆயுஷ்மான்.

* இப்போதைக்கு தமிழில் அதிகப் படங்கள் கைவசம் வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, கமல்ஹாசனுடன் ‘இந்தியன் -2’, ராகவா லாரன்ஸுடன் ஒரு படம், ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கும் பிரியா, அடுத்து விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். ‘அடங்கமறு’ இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு