Published:Updated:

மிஸ்டர் மியாவ்

‘குயின்’ வெப் சீரிஸில் நடித்த அஞ்சனா ஜெயபிரகாஷுக்கு, பட வாய்ப்புகளும் வெப் சீரிஸ் வாய்ப்புகளும் குவிகின்றன

பிரீமியம் ஸ்டோரி
  • ஹன்சிகாவின் 50-வது படமான ‘மகா’ ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 30 நிமிடங்கள் சிம்பு வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில், ஏழு நாள் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருக்கிறதாம். அதை நிறைவு செய்துவிட்டு, ரம்ஜான் அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஹன்சிகா
ஹன்சிகா
சமந்தா
சமந்தா
  • ‘கேம் ஓவர்’ படத்துக்குப் பிறகு, அஷ்வின் சரவணன் இயக்கும் படத்தில் சமந்தா நாயகியாகவும் பிரசன்னா முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி யிருக்கின்றனர். ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் வட இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். மார்ச் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

  • ‘குயின்’ வெப் சீரிஸில் நடித்த அஞ்சனா ஜெயபிரகாஷுக்கு, பட வாய்ப்புகளும் வெப் சீரிஸ் வாய்ப்புகளும் குவிகின்றன. அக்‌ஷரா ஹாசனுடன் இணைந்து ‘போலீஸ் டைரி 2.0’ என்ற வெப் சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அஞ்சனா. தவிர, மலையாளத்தில் ஃபகத் பாசிலுடன் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்
  • விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடித்து தெலுங்கில் ஹிட்டடித்த ‘பெல்லிச்சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் சுந்தர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம், வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • ‘சாஹோ’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ராதாகிருஷ்ண குமாரின் இயக்கத்தில் தற்போது நடித்துவருகிறார் பிரபாஸ். இவரது அடுத்த படத்தை சாவித்திரியின் பயோபிக்கான ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கவிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
  • பூஜா ஹெக்டே சமீபத்தில் நடித்த எல்லா தெலுங்குப் படங்களும் ஹிட்! அதனால் மற்ற மொழிகளிலிருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. ‘முகமூடி’க்குப் பிறகு கோலிவுட் பக்கமே வராமல் இருந்த பூஜா, தற்போது தமிழ்ப் படங்களில் நடிக்க கதைகள் கேட்டுவருகிறாராம்.

ம்யூட்

  • ‘வம்பு’ நடிகர் நடிக்கும் அரசியல் படம் ஒருவழியாக ஆரம்பமாகிவிட்டது. படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்லத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ‘ஹைதராபாத்தெல்லாம் வர முடியாது. அதை சென்னையிலேயே எடுங்க’ என்று நடிகர் கண்டிஷன் போட்டுள்ளாராம். `இவர் ஷூட்டிங்குக்கு வருவதே பெரிய விஷயம். அவர் போக்கிலேயே போவோம்’ என்று சென்னையிலேயே செட் அமைத்து அந்த போர்ஷனை எடுத்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு