பிரீமியம் ஸ்டோரி
  • சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘அருவா’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், விஜய் நடிக்கும் அடுத்த படத்துக்கும் அவரிடமே பேசிவருகிறார்களாம். தெலுங்கில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவரும் ராஷ்மிகாவுக்கு தற்போது கோடம்பாக்கத்தின் முன்னணி நாயகர்களுடன் நடிக்கவும் வாய்ப்புகள் வருவதால், அவர் செம குஷியில்இருக்கிறாராம்.

வழக்கறிஞராக...
ஜோதிகா
  • ‘தம்பி’ படத்துக்குப் பிறகு ஜோதிகாவின் அடுத்த படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குநர் ஃபெட்ரிக் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார் ஜோதிகா. த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஜூன் மாதம் வெளியிட உள்ளனர். ஜோதிகாவின் திரைப் பயணத்தில் வழக்கறிஞராக நடிப்பது இதுவே முதல்முறை.

  • கன்னடத்தில் வெளியாகி பயங்கர ஹிட்டான ‘பெல் பாட்டம்’ படத்தை, இயக்குநர் சத்யசிவா தமிழில் ரீமேக் செய்து முடித்துள்ளார். கிருஷ்ணா, மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடெக்‌ஷன் பணி நடைபெற்றுவருகிறது.

  • மலையாளத்தில் ‘ஜாக் அண்ட் ஜில்’, ‘பேக்பேக்கர்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்கள் காளிதாஸ் ஜெயராமுக்கு வெளிவர காத்திருக்கின்றன. இந்த நிலையில் அடுத்த படத்தையும் கமிட் செய்துள்ளார். அறிமுக இயக்குநர் வினில் வர்கீஸ் இயக்கும் இந்தப் படத்தில், காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார்.

மஹிமா நம்பியார் - சாயீஷா
மஹிமா நம்பியார் - சாயீஷா
தீபிகா படுகோன்
முதல் தெலுங்குப் படம்
  • சாவித்திரியின் பயோபிக்கான ‘மஹா நடி’ (தமிழில் ‘நடிகையர் திலகம்’) தெலுங்குப் படத்தை இயக்கிய நாக் அஷ்வின்தான் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர். சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனிடம் பேசிவருகிறார்கள். தீபிகா இந்தப் படத்தில் நடித்தால், அவர் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இதுவாகத்தான் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் ‘யுவரத்னா’ எனும் படத்தில் நடித்துவருகிறார் சாயீஷா. படத்தின் மற்ற காட்சிகள் நிறைவுபெற்ற நிலையில், பாடல் காட்சிகள் மட்டும் மீதம் இருக்கின்றனவாம். ஒரு டூயட் பாடலுக்காக ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா பறக்கவிருக்கின்றனர். திரும்பி வந்ததும் புனித் ராஜ்குமாருக்கான ஓப்பனிங் பாடலை எடுத்து முடித்துவிட்டால் ஷூட்டிங் ஓவர்!

ராஷ்மிகா
ராஷ்மிகா

ம்யூட்

  • சங்க நடிகரின் இரண்டாம் பாகப் படத்திலிருந்து கண்ணாடி இயக்குநர் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த நடிகரே மீதமுள்ள போர்ஷனை இயக்க முடிவெடுத்துவிட்டார். அந்தக் கண்ணாடி இயக்குநரோ, மாநாட்டு நடிகரிடம் போலீஸ் கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறாராம். `அந்த நடிகரைவைத்து நிச்சயம் படமெடுத்து முடித்துவிடுவேன்’ என உறுதியாக இருக்கிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு