Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மாளவிகாவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன

பிரீமியம் ஸ்டோரி
  • மலையாளத்தில் பிஸியாக இருந்த மாளவிகா மோகனனை ‘பேட்ட’ படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்துவைத்தார் கார்த்திக் சுப்பராஜ். இப்போது விஜயுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், டோலிவுட்டிலும் மாளவிகாவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. அதற்கு ஏற்றபடி தனது சமூக வலைதளங்களில் ஹோம்லி, கிளாமர் எனப் படங்களை பதிவிட்டுவருகிறார் மாளவிகா.

  • தமிழில் ‘இந்தியன் 2’, ‘அயலான்’, இந்தியில் ஜான் ஆபிரஹாமுடன் ‘அட்டாக்’ மற்றும் அர்ஜுன் கபூருக்கு ஜோடியாக ஒரு படம் என்று ரகுல் ப்ரீத் சிங் செம பிஸியாக இருக்கிறார். அம்மணிக்கு பாலிவுட்டில் நீண்ட டிராவல் பண்ண ஆசையாம்!

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்
  • ‘மீசைய முறுக்கு’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு, ஆத்மிகா எந்தப் படத்திலும் நடிக்காமலிருந்தார். தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அன்பு இல்லையேல் ஒரு அணுவும் அசையாது’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ‘மெட்ரோ’ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.

  • நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கும் படத்துக்கு ‘ஹே சினாமிகா’ என்று பெயரிட்டுள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்தப் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

  • தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் இடைவெளிவிட்டிருந்த நடிகை கனிகா, விஜய் சேதுபதி நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தநிலையில், தனது புதிய முயற்சியாக குறும்படம் ஒன்றையும் இயக்கிவருகிறார் கனிகா.

ஆத்மிகா
ஆத்மிகா
  • தமிழில் சரியான வாய்ப்புகள் வராததைத் தொடர்ந்து, டோலிவுட்டில் கவனம் செலுத்திவருகிறார் நிவேதா பெத்துராஜ். ‘தடம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ரெட்’ படத்தில் நடித்து முடித்தவர், தற்போது சாய் தரம் தேஜுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழில் இவர் நடித்துள்ள ‘பொன் மாணிக்கவேல்’, ‘ஜெகஜால கில்லாடி’, ‘பார்ட்டி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ம்யூட்

  • `கண்ணாடி’ இயக்குநருக்கும் `சங்க’ நடிகருக்குமிடையே பிரச்னை நடந்துவரும் நிலையில், ‘உங்க கதையை நாங்க மதிக்கிறோம். எங்ககிட்ட வாங்க, நாம ஒரு படம் பண்ணலாம்’ என்று இயக்குநரிடம் ‘அது சரி’ தரப்பு சொல்லியிருக்கிறது. ஏற்கெனவே ‘அது சரி’ தரப்புக்கும் `சங்க’ நடிகருக்குமுள்ள பஞ்சாயத்துதான் இப்படி இயக்குநருக்கு ஆதரவாகப் பேசக் காரணமாம். `ஒருவேளை `கண்ணாடி’ இயக்குநர் ‘அது சரி’ தரப்புக்கு படம் இயக்க முன்வந்தால், ஏற்கெனவே ஸ்டைலிஷ் இயக்குநருக்கு நிகழ்ந்ததைப்போல இவரிடமும் தமது உறவினரை ஹீரோவாக வைத்து படம் பண்ணச் சொல்லுமோ ‘அது சரி’ தரப்பு’ என்று முணுமுணுக்கிறார்கள் கோலிவுட்டில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு