பிரீமியம் ஸ்டோரி
  • விஷால் - வரலட்சுமி காதலிப்பதாக கோலிவுட்டில் செய்தி பரவிக்கொண்டிருந்த நிலையில், விஷாலுக்கு கடந்த ஆண்டு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. வரலட்சுமிக்கு விரைவில் கல்யாணம் என்பதோடு, அது காதல் கல்யாணம் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட திருமணத் தேதியில் கொரோனாவால் மாற்றம் இருக்கும் என்கின்றனர்.

  • நடிகர் சங்க வாட்ஸப் குரூப்பில் பிரச்னை கிளம்பியிருக்கிறது. இந்த வாட்ஸப் குழுவில் ஒரு கோஷ்டி, விஷால் செய்யும் உதவிகளை படங்களாகப் போட... எதிர்தரப்பு அவர்கள் செய்யும் உதவிகளின் படங்களைப் போட்டுவந்ததாம். அப்போது குழுவில் இருந்த நடிகை ஒருவர், ‘இந்தப் படங்களில் உதவி பெறுபவர்களையெல்லாம் பார்த்தால் நடிகர் சங்க ஆட்கள் மாதிரி தெரியவில்லையே...’ என ஒரு கமென்ட் போட, அந்த நடிகையை அசிங்க அசிங்கமாக அந்தக் குழுவிலேயே திட்ட ஆரம்பித்திருக்கின்றனர். இதை விஷாலோ அல்லது மற்ற நடிகர்களோ கண்டிக்கவில்லையாம். இதனால் கோபமான நடிகை, இப்போது போலீஸ் வரை போயிருக்கிறார். பிரச்னை, விரைவில் பெரிய அளவில் வெடிக்கலாம்.

  • ‘பொன்மகள் வந்தாள்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராக இருந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தை ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்ய அணுகியிருக்கின்றனர். தனுஷும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் ஒரே குரலில் நோ சொல்ல, தயாரிப்பாளரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

வரலட்சுமி - ஜோதிகா
வரலட்சுமி - ஜோதிகா
  • நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்துவந்ததோடு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரில் சுயேச்சையாகக் களமிறங்கவும் செய்தார். கொரோனா பிரச்னை தொடங்கியதிலிருந்து பண்ணை வீட்டுக்குப் போய்விட்டார் பிரகாஷ்ராஜ். அங்கே விவசாயம் செய்வது, தன் மகனுடன் நேரம் செலவிடுவது உள்ளிட்ட புகைப்படங்களை அவர் சோஷியல் மீடியாக்களில் பதிவிட, அவருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகமாகியிருக்கின்றன. ‘இந்த நேரத்தில் மக்களுக்கு உதவாமல், சுயநலமாக பண்ணை வீட்டில் போய் உட்கார்ந்துகொண்டீர்களே!’ என ட்வீட்கள் வரிசைக்கட்டுகின்றன.

  • சூர்யா, ஜோதிகா என தங்கள் குடும்பம் தொடர்ந்து டார்கெட் செய்யப்படுவதற்கு காரணம் சினிமா துறையில் உள்ள சிலர்தான் என்கின்றனர் சிவகுமார் குடும்பத்தினர். எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, ராஜசேகர் கற்பூரபாண்டியன் என சிவகுமார் குடும்பம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தயாரிப்பாளர்களாக வளர்ந்து பல முக்கிய முடிவுகளை எடுப்பது பொறுக்காமல்தான், சிறிய பிரச்னைகளைக்கூட ஊதிப் பெரிதாக்குகிறார்கள் என்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு