Published:Updated:

மிஸ்டர் மியாவ்

லாக்டெளனில் கார்டனிங், சமையல் எனப் பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சமந்தா, நிறைய படங்களையும் பார்த்திருக்கிறார்.

பிரீமியம் ஸ்டோரி

* ‘சூர்யவன்ஷி’, ‘டைகர் 3’, ‘போன் பூட்’ ஆகிய படங்கள் கத்ரீனா கைஃப் நடிப்பில் தயாராகிவருகின்றன. தற்போது, சூப்பர் வுமன் கதை ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி யிருக்கிறார் கத்ரீனா. இந்திய சினிமாவில் ‘சூப்பர் வுமனாக’ ஒரு ஹீரோயின் நடிப்பது இதுவே முதன்முறை. அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துபாய், ஜார்ஜியா, இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கவிருக்கிறது.

* ‘களத்தில் சந்திப்போம்’, ‘83’, ‘மேதாவி’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கும் ஜீவா, அடுத்த படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார். இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராக இருந்த சந்தோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். ஜீவாவின் தந்தை ஆர்.பி.செளத்ரியே தனது சூப்பர்குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்த காஷ்மீரா நடிக்கிறார்.

* பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ராதே ஷ்யாம்’ பட ஷூட்டிங்கின் ஒரு ஷெட்யூல் இத்தாலியில் நடந்து முடிந்திருக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பிறகு, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கலாம் எனக் காத்திருக்கிறது படக்குழு. இத்தாலியில் நடக்கும் அழகிய காதல் கதையாக உருவாகும் படத்துக்கு, மதுரையைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன்தான் இசை. தமிழில் நிறைய படங்கள் இசையமைத்திருந்தாலும், ‘டியர் காம்ரேட்’ படத்தின் மூலம் டோலிவுட்டுக்கு அறிமுகமாகி சிக்ஸர் விளாசியவருக்கு, இந்தப் படம் பெரிய ஜாக்பாட் என்றே சொல்லலாம்!

மிஸ்டர் மியாவ்

* விஜய் சேதுபதி, மஞ்சிமா மோகன், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் சில காட்சிகளை இன்னும் சில நாள்கள் எடுக்க வேண்டியிருக்கிறதாம். அதிதி ராவ் நடிக்க வேண்டிய காட்சிகள் அவை. அதிதியுடன் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டதால், அவர் நடிக்கவிருந்த கேரக்டரில் ராஷி கண்ணா நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஏற்கெனவே, ‘சங்கத்தமிழன்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருக்கிறார் ராஷி.

மிஸ்டர் மியாவ்

* லாக்டெளனில் கார்டனிங், சமையல் எனப் பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சமந்தா, நிறைய படங்களையும் பார்த்திருக்கிறார். அப்படி அவர் பார்த்த ‘A Life On our Planet’ என்ற ஆவணப்படத்தை இன்ஸ்டாகிராமில் பரிந்துரை செய்து, ‘மனிதத்தைக் காப்பாற்ற நினைக்கும் எல்லோரும் இந்த ஆவணப்படத்தை மிஸ் பண்ணக் கூடாது. இது நமது எதிர்காலத்துக்கும் அடுத்த தலைமுறைக்கும் மிகவும் தேவையான ஒன்று’ என்று கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு