Published:Updated:

மிஸ்டர் மியாவ்

உறவுகளின் அன்பை நெகிழ்வாகச் சொல்லும் அசத்தலான சென்டிமென்ட் ஏரியாவும் படத்தில் இருக்கிறதாம்.

பிரீமியம் ஸ்டோரி

ரகுல் ப்ரீத் சிங்குக்குக் கிட்டத்தட்ட இரட்டை இலக்க எண்ணிக்கையில் படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. இந்தி, தெலுங்கு, தமிழ் என்று ஓடிக்கொண்டிருக்கும் ரகுல், கொஞ்சம் பங்க்ச்சுவாலிட்டியை மட்டும் கடைப்பிடித்தால் இன்னும் உயரங்களைத் தொடுவார் என்பது கோடம்பாக்கம் ஹாட் டாக்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘அண்ணாத்த’ படத்தில், மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் ரஜினிகாந்துக்காகப் பாடிய பாடல் வைரல் ஹிட்டாகியிருக்கிறது. ‘படையப்பா ரஜினியைப் பார்த்தது போலிருக்கிறது’ எனச் சொல்லி இயக்குநர் சிவாவைப் பாராட்டித் தள்ளிவிட்டாராம் ரஜினி. இசை என்கிற பெயரில் இரைச்சலாக அமைகிற பாடல்களுக்கு மத்தியில், தான் விரும்பியபடி அட்டகாசமாக அமைந்ததில் ரஜினிக்குப் பெரிய மனநிறைவாம். இசையமைப்பாளர் இமானுக்கு போன் செய்தும் பாராட்டியிருக்கிறார் ரஜினி.

அஜித்தின் ‘வலிமை’ படம் பக்கா ஆக்‌ஷன் மசாலா என்பது பலரும் அறிந்தது. உறவுகளின் அன்பை நெகிழ்வாகச் சொல்லும் அசத்தலான சென்டிமென்ட் ஏரியாவும் படத்தில் இருக்கிறதாம். காக்கி சம்பந்தப்பட்ட கதையில், கண்கலங்கும் சீன்களையும் வைத்து வித்தியாசமான முறையில் படத்தை முடித்துக்கொடுத்திருக்கிறாராம் ஹெச்.வினோத். சமீபத்தில் படத்தின் முதல் பிரதியைப் பார்த்த அஜித், ‘அடுத்த படத்தை எப்போ சார் ஸ்டார்ட் பண்றோம்?’ என்றாராம் வினோத்திடம். படம் அந்த அளவுக்கு அஜித்துக்கு நிறைவைக் கொடுத்திருக்கிறதாம்.

வடிவேலு உள்ளிட்ட சீனியர் நடிகர்களுக்கு டப்பிங் இன்ஜினீயராகப் பணியாற்றும் கிருஷ்ணன், ஏற்கெனவே மூன்று படங்களை இயக்கியவர். இப்போது போஸ் வெங்கட் மெயின் கேரக்டரில் நடிக்கும் ‘பூர்வீகம்’ என்கிற படத்தை இயக்கிவருகிறார். குடும்ப உறவுகளின் வலிமையைச் சொல்லும் கதையை மிக இயல்பான முறையில் படமாக்கிவரும் கிருஷ்ணன், ``குடும்பம் என்கிற கட்டமைப்புதான் காலத்துக்கும் உடையாதது. அதன் அருமையை இந்தப் படம் சொல்லும்’’ என்கிறார் அழுத்தமாக.

உஷ்…

காமெடி நடிகரைக் கதாநாயகனாக்கும் வெற்றிகரமான இயக்குநர், ‘கூத்துப்பட்டறை’ நடிகரையும் குணச்சித்திரப் பாத்திரத்துக்கு அழைத்திருந்தார். கேட்ட தேதிகளைக் காட்டிலும் அதிகம் கொடுத்து, தனக்கான முக்கியத்துவத்தை அதிகமாக்கி, படத்தின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்ப நினைக்கிறாராம் அவர். இப்போது, இரண்டு ஹீரோக்களின் கதையாகப் படம் மாறிவருகிறதாம். #இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு