பிரீமியம் ஸ்டோரி
சினிமா விகடன் : OTT கார்னர்
சினிமா விகடன் : OTT கார்னர்

ரேட்டிங் 4/5

The queen’s gambit

தரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் பெத் ஹர்மன் எப்படி சதுரங்கத்தில் உலகை வென்றார் என்பதைச் சொல்கிறது நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் The queen’s gambit. அங்கிருக்கும் தூய்மைப் பணியாளர் மூலம் சதுரங்கம் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் ஹர்மனுக்கு தலைக்குள்ளேயே காய்கள் நகர ஆரம்பிக்கின்றன. மது, போதை மருந்துப்பழக்கத்துக்கு உள்ளாகும் ஹர்மன், ஆண்கள் நிரம்பியிருக்கும் விளையாட்டில் எப்படிக் கோலோச்சுகிறார் என 7 எபிசோடாக விரிகிறது கதை. வால்டர் டெவிஸ் எழுதிய நாவலை மையப்படுத்திய புனைவு என்றாலும் தேர்ந்த நடையால் ஓர் உண்மைச் சம்பவம் போன்ற பாதிப்பைத் தருகிறது. அசத்தலான திரைக்கதை, ஹர்மன் பாத்திரத்தில் தோன்றும் பெண்களின் நடிப்பு, இசை போன்றவற்றால் மிளிர்கிறது இந்தத் தொடர்.

சினிமா விகடன் : OTT கார்னர்
சினிமா விகடன் : OTT கார்னர்

ரேட்டிங்: 1.5/5

லக்ஷ்மீ (Laxmii) - இந்தி

மிழில் காமெடி, காரம், த்ரில் எனக் கலந்துகட்டி வெற்றிபெற்ற ‘காஞ்சனா’ எனும் மிளகாய் பஜ்ஜியை இந்தியில் சில மாற்றங்களைச் செய்து பாவ் பாஜியாக மாற்றியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். ‘காஞ்சனா’வின் ப்ளாஷ்பேக்கை அப்படியே வைத்துக்கொண்டு நிகழ்காலக் கதையில் பயந்த சுபாவ நாயகனுக்குப் பதில் பகுத்தறிவு (?) நாயகன், பிறந்த வீட்டுக்குப் பதில் புகுந்த வீடு என நீள்கிறது அந்தப் பட்டியல். எல்லாவற்றுக்கும் மாற்றி யோசித்தவர் கோவை சரளா - தேவதர்ஷினி - ஸ்ரீமன் காம்போவைப்போல ஒரு பலமான துணைக் கதாபாத்திரப் படையை இங்கே உருவாக்காமல் விட்டிருக்கிறார். அதனால் காமெடியும் இல்லை, பிளாஷ்பேக் காட்சியில் ‘லக்ஷ்மி’ திருநங்கை பாத்திரத்தில் நடித்திருக்கும் ஷரத் கேல்கர் மட்டும் நடிப்பில் மிளிர்கிறார். அக்‌ஷய் குமார் திரையை ஆக்கிரமிக்கிறார் என்பதைத் தாண்டி, சொல்ல எதுவும் இல்லை. பயமும் மூட்டவில்லை, கிச்சுகிச்சும் மூட்டவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு