Published:Updated:

`அழகோ அழகு’ `ஜெயம்’ ரவி, `மிட்நைட் ஷூட்’ ரைஸா, குறும்புக்கார டாப்ஸி! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Taapsee #சோஷியல் மீடியா ரவுண்டப்!
Taapsee #சோஷியல் மீடியா ரவுண்டப்!

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

இன்று சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலரும் குழந்தை நட்சத்திரமாகவும் சினிமாவில் கலக்கியுள்ளனர். விஜய், ஹன்சிகா, சிம்பு எனத் தமிழ் சினிமாவில் இந்தப் பட்டியல் நீளம். அந்த நீளப் பட்டியலில் `ஜெயம்’ ரவியும் ஒருவர்.

தெலுங்கில் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார். சமீபத்தில், `ஜெயம்’ ரவி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள தெலுங்கு படத்தை தொலைக்காட்சியில் பார்த்த நடிகர் சதீஷ், அதை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் `ஜெயம்’ ரவியை டேக் செய்து, `ப்ரோ அழகோ அழகு’ எனப் பதிவிட்டுள்ளார். இதுதான் `ஜெயம்’ ரவியின் முதல் படம். தற்போது `ஜெயம்’ ரவி நடிப்பில் வெளிவரவிருக்கும் `பூமி’ படத்தில் சதீஷும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

His looks 🤣

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on

ஒரு பக்கம் நடிப்பு தயாரிப்பு, மறுபக்கம் அரசியல் என பிஸியாக இருப்பவர் நடிகை குஷ்பூ. சின்னத்திரையில் நுழைந்த பிறகு, `நந்தினி’, `லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ்’ எனப் பல ஹிட் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது குஷ்பூ முதன்முதலாக தான் நடித்த சீரியலான `மருமகள்’ குறித்தான நினைவுகளைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2001-ல் சீரியல் பக்கம் காலடி எடுத்து வைத்துள்ள இவர், 20 வருடங்கள் ஆனதையொட்டி இதைப் பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லாக்டெளனில், நடிகைகள் பலரும் சமையல், யோகா எனப் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டிருக்க, செல்ஃப் போட்டோஷூட்டில் இறங்கியிருக்கிறார் ரைஸா வில்சன். லாக்டெளனில் தனது புகைப்படங்கள், க்யூட் வீடியோக்கள், மெமரீஸ் என ஷேர் செய்த ரைஸாவின் போஸ்ட் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறு ஹிட்.

தற்போது, லாக்டெளனால் Bore என்று போட்டோஷூட் டெஸ்ட்டில் கலக்கியிருக்கிறார் ரைஸா. `மிட்நைட் ஷூட் பை மைசெல்ஃப்’ என்ற கேப்ஷனோடு இவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்களுக்கு பாசிட்டிவ் கமென்டுகளைக் கொடுக்கின்றனர் ரசிகர்கள்.

நடிகை சன்னி லியோன் இன்று தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சன்னி லியோன் பிறந்தநாள் வாழ்த்துக்கான ஹேஷ்டேக்கை இன்று டிரெண்டிங்கில் வைத்திருந்தனர் அவரது ரசிகர்கள்.

ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி கூறும் வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சன்னி. அதில் அவர், `இன்று உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்த்துக்கும் நன்றி. உங்கள் அனைவரது அன்பும் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பது எனது அதிர்ஷ்டம்’ என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார் சன்னி.

விக்ரம்-வேதா
விக்ரம்-வேதா

`பிங்க்’, `தப்பட்’ என இந்திய சினிமாவின் முக்கியப் படங்களில் நடித்தவர் டாப்ஸி. இந்த லாக்டெளன் சூழலில் தனது சிறுவயது புகைப்படங்கள், குடும்பத்துடன் இருக்கும்படியான படங்கள், ஷூட்டிங் நாள்களில் நடந்த ஆஃப் ஸ்க்ரீன் அலப்பறைகள் எனப் பலவற்றை #QurantinePost என்ற ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ரக்‌ஷா பந்தன் அன்று தன் சகோதரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து அவர்களுடனான தனது ரகளையான அனுபவத்தையும் கேப்ஷனாக்கியுள்ளார். அதில், `குடும்பத்தில் மூத்த சகோதரியாக இருப்பது எனக்குப் பிடித்தமானது. இதனால், என் தங்கைகள் இருவரையும் எனக்குத் தேவையான வேலைகள் செய்ய வைக்கலாம். அது மட்டுமல்ல, அன்பும் தாராளாமாக கிடைக்கும்’ எனக் குறும்பாக பதிவிட அவரின் தங்கை `நான் மோசமாக உள்ள புகைப்படங்களை பதிவிடுவதை நிறுத்து’ என்று செல்லமாக கமென்டியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு